Thursday, April 11, 2024

விமர்சனம்: துரிதம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெகன், நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம், துரிதம்.

சூழ்நிலையால், தீபாவளி நேரத்தில், நாயகி ஈடனை, டூ வீலரின் மதுரையில் விட வேண்டிய நிலை. வழியில் ஈடன் வேறு ஒருவரால் கடத்தப்படுகிறார்.

அவரைக் கண்டுபிடிக்க இவர் எடுக்கும் முயற்சி, இன்னொரு பக்கம் ஈடனை தேடி வரும் தந்தை, ஈடனின் அலுவலக அதிகாரி… இறுதியில் அவர் மீட்கப்பட்டாரா என்பதை விறு விறு திரைக்கதையில் அளித்து இருக்கிறார்கள்.

நாயகன் ஜெகன்,  ஏற்கெனவே சண்டியர் படத்தில், ஹீரோவாக நடித்து கவனத்தை ஈர்த்தவர்.  இதிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மீது  காதல் கொள்வது, அவர் கடத்தப்பட்டதும் பதறுவது..  பக்கத்துவீட்டுப் பையன் மாதிரி என்பார்கள்.. இவர் நம்ம வீட்டுப் பையனாகவே மனதில் பதிந்துவிடுகிறார்.

நாயகி ஈடன், மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர். துள்ளளான இளம் பெண்ணாக வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

பூ ராமு, ஏ.வெங்கடேஷ், பால சரவணன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.பரபரப்பான திரைப்படத்துக்கு ஏற்ற இசையை அளித்து உள்ளார். குறிப்பாக, ஹைவேயில் வாகனங்கள் பறக்கும் போது அந்த வேகத்தை இசையிலேயே வெளிப்படுத்தி விடுகிறார் இசையமைப்பாளர், நரேஷ். அதே போல பாடல்களும் சிறப்பு. ஒரு பாடலை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார்.

வாசனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

வசனங்கள் இயல்பாக இருப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன.

ஒரு கட்டையுடன் நாயகி நிற்க.. வில்லன் பதறுகிறார். அப்போது நாயகன், “பயப்படாதே.. உன்னை அடிப்பதறாக இல்லை.. அவங்களை பதுகாத்துக்கொள்வதற்காக..” என்கிறார்.

“பலாத்காரம் பண்ணிட்டு இவ டிரஸ் ஆபாசமா இருந்துச்சுனு சொல்லுவாங்க” என்கிறார் நாயகியின் தோழி.

இவை ஒரு துளி உதாரணங்கள்.

ஆரம்பத்தில் இருந்தே விறு விறு திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கிறார் சீனிவாசன்.

படத்தில் சிறு காட்சிகளைக்கூட லாஜிக் மீறல் இல்லாமல் சுவாரஸ்யமாக எடுத்துள்ளனர்.  தவிர, வெறும் கடத்தல், த்ரில் என்று இல்லாமல் போகிற போக்கில் போலி சாமியார், லஞ்ச போலீஸ், சாதி வெறி,  ஆணாதிக்கம் என பல விசயங்களைத் தொட்டுச் சென்று இருக்கிறார்கள். அப்படி தொட்டுச் சென்ற ஒவ்வொரு விசயத்தையும் சிறப்பாகவே மனதில் படியும் படி  சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு.நாயகன் ஜெகன்தான் படத்தை தயாரித்து இருக்கிறார். தயாரிப்பாளர் ஜெயகனையும் பாராட்ட வேண்டும்.

65 நாட்கள், 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் சமரசம் செய்துகொள்ளவில்லை.

காதல், கொலை, வெற்று மசாலா என்று இல்லாமல்…  பரபரப்பான த்ரில்லரை, மக்களுக்கு தேவையான கருத்துக்களோட சொல்லி இருக்கிறார்.

அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.

 

 

- Advertisement -

Read more

Local News