தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் “கொலை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதன் பிறகு, கடந்த ஆண்டு அவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

அதன்படி, ஆர்.ஜே. பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்”, விஜய்யின் “தி கோட்”, துல்கர் சல்மானுடன் “லக்கி பாஸ்கர்”, வருண் தேஜுடன் “மட்கா” ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். அனைத்து படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.


அதேபோல், சமீபத்தில் “சங்கராந்திகி வஸ்துன்னம்” படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.இந்நிலையில், 2024ம் ஆண்டு தனக்காக மிக சிறப்பாக அமைந்ததாக மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,”எனது சினிமா பயணத்தில் 2024 ஒரு முக்கியமான ஆண்டாக இருந்தது. பல ஆண்டுகள் அனுபவம் இருந்தும் சிலர் மட்டுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், என் ஆரம்பத்திலேயே அதுபோன்ற முக்கியமான வாய்ப்புகள் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.