Friday, April 12, 2024

மைதானத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘திடல்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வந்த ‘சென்னை-28’, ‘தோனி’, ‘ஜீவா’, ‘கனா’ போன்ற திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. இந்த வகையில் புதிதாக உருவாகியிருக்கும் ‘திடல்’ திரைப்படமும் வெற்றியை எதிர் நோக்கி வரவிருக்கிறது.

இந்தப் படத்தில் சுபாஷ், தனபால், விஷ்ணு, நவின், பி.ஆர்.எஸ்.யோகேஷ் என்ற ஐந்து இளைஞர்கள் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.  ராட்சன்’ கிறிஸ்டோபர் படம் முழுக்க நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியுள்ளார். சரண்யா ரவிச்சந்திரன், சுபி, வினோதினி, காலா பிரதீப் முகிலன் மற்றும் தயாரிப்பாளர் ப.பிரபாகரனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சேகர்ராம், ஜெரால்டு, இசை – ஸ்ரீசாய்தேவ், பாடல்கள் – நாகமாசி, படத் தொகுப்பு – ரோஜர், கலை இயக்கம் – சிவா, சண்டை இயக்கம் – ஓம்பிரகாஷ், கதை – பிரபாகரன்,  நிர்வாகத் தயாரிப்பாளர் –  தமிழ்மணி, தயாரிப்பு நிறுவனம் – கிரவுண்ட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – ப.பிரபாகரன், திரைக்கதை, வசனம், இயக்கம் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன். 

இயக்குநர் கார்த்திக் கண்ணன் இதுவரையிலும் 15 குறும் படங்களை இயக்கியிருக்கிறார். 7 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார். சுகி மூர்த்தி, செல்வா, முத்துசெல்வன் ஆகிய இயக்குநர்களிடம் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

கிரிக்கெட் விளையாட மைதானம் இல்லாமல் தெருவில் விளையாடும் இளைஞர்களின் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

1-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்புவரை ஒன்றாகப் படித்திருந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவர்களை இங்கு விளையாடக் கூடாது என்று அசிங்கப்படுத்துகிறார்கள்.  இதனால் அவர்கள் பக்கத்து ஊர்களுக்கு விளையாடப் போக… அங்கும்  புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இதனால் தங்களுக்கான ஒரு மைதானத்தை அமைத்தே தீருவது என்று அவர்கள் மைதானம் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கான விளையாட்டுத் திடல் கிடைத்ததா.. இல்லையா… என்பதுதான் படத்தின் கதை.

மைதானத்துக்காக ஐந்து நண்பர்கள் எடுக்கும் முடிவு… அவர்களுக்கு கிரிக்கெட் மைதானம் கிடைத்ததா…? இல்லையா..? என்பதை உயிரோட்டமாக சொல்லியிருக்கிறார்களாம்.

திருச்சி அருகில் இருக்கும் பூலாங்குடி, சூரியூர் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

விரைவில் ஜங்லி மியூசிக் நிறுவனம் இந்த திடல்’ படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிடுகிறது.

- Advertisement -

Read more

Local News