Thursday, April 11, 2024

அறிமுக நடிகருக்கு எதுக்கு ஹீரோயிசம் ? ; நடிகர் விஜய் சிவனின் தெளிவான முடிவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த மாதம் அறிமுக நடிகர், அறிமுக இயக்குநர் என குடும்பப்பாங்கான ஒரு படமாக  ‘குடிமகான்’ திரைப்படம் வெளியானது.   ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களிடம் ஏகோபித்த பாராட்டை பெற்றது.

இந்த நிலையில்  படத்தின் தயாரிப்பாளரும்  ஹீரோவுமான விஜய் சிவன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

“குறும்படங்களில் துவங்கிய எனது கலைப்பயணம், முழு நீள படத்தில் தொடர்கிறது. குடிமகான் திரைப்படத்தை விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பல காட்சிகளில் மனம் விட்டு குலுங்கி குலுங்கி சிரித்ததாக, படம் பார்த்த பலரும் கூறினார்கள். தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்றார்.மேலும், “என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமான ஒரு விசிட்டிங் கார்டாகத்தான் இந்த படத்தை தயாரித்தேன்.

அதனால் தான் முதல் படம் என்றாலும் எங்கேயும் ஹீரோயிஷம் தலை தூக்காமல் ஒரு நல்ல கதை, அதில் ஒரு நல்ல கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதில் நான் உறுதியாக இருந்தேன்.

அதனாலேயே இயக்குநர் பிரகாஷிடம் கதையையும் மற்ற கதாபாத்திரங்களுக்கு தேவையான இடத்தையும் கொடுக்கும் முழு சுதந்திரத்தையும் ஒப்படைத்து விட்டேன். பொதுவாகவே எனக்கு மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது பிடிக்காது. அதனால் என்னுடைய கதாபாத்திரத்தில் மட்டும் நான் கவனம் செலுத்தினேன்.

இந்த படத்தில் எனக்கு உறுதுணையாக நின்று சக கதாபாத்திரங்களில் நடித்த சாந்தினி தமிழரசன், நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட அனைவருமே நான் ஒரு புதுமுகம் என்கிற எண்ணம் சிறிதும் இல்லாமல் எந்த ஈகோவும் இல்லாமல் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் என்னை உற்சாகப்படுத்தி தங்களது ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

திரையுலகில் நான் தொடர்ந்து ஒரு நடிகனாக பயணிப்பதற்காக வாய்ப்புகளும் நிச்சயமாக கிடைக்கும் என நம்புகிறேன்” என்கிறார் விஜய் சிவன் நம்பிக்கையுடன்.

- Advertisement -

Read more

Local News