Thursday, April 11, 2024

விமர்சனம்: தீராக்காதல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்திக்க நேர்கையில், அந்த சந்திப்பு மீண்டும் ஒரு காதல் வாழ்க்கையை சாத்தியப்படுத்துமா என்பதுதான் ‘தீராக்காதல்’ படத்தின் ஒன்லைன்.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் நடிப்பில் ’பெட்ரோமாக்ஸ்’ பட இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ‘தீராக்காதல்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?அலுவல் விஷயமாக மங்களூரு செல்ல நேரும் கெளதம் (ஜெய்), அங்கு ரயில் பயணத்தில் எதிர்பாராதவிதமாக தன் கல்லூரி காலத்து காதலி ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்க நேர்கிறது. இருவரும் தங்களது தற்போதைய திருமண வாழ்க்கை, பழைய நினைவுகள் என அங்கிருக்கும் சில நாட்கள் நேரில் சந்தித்து உரையாடுகிறார்கள்.

அன்பான மனைவி, அழகான குழந்தை, நல்ல வேலை என இருந்தாலும் வேலை பரபரப்புக்கு இடையில் இயந்திரமாக வாழும் வாழ்க்கை ஜெய்க்கும் அவர் மனைவி ஷிவதாவுக்கும். இந்தப் பக்கம், குடும்ப வன்முறையில் சிக்கி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படியான சூழலில் பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரது சந்திப்பும் அவர்களுக்கு ஆறுதலாக அமைகிறது.மங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் இருவரும் பார்த்துக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துப் பிரிகிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் குடும்ப வன்முறை தாங்காமல் அதில் இருந்து வெளியே வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இணைந்து வாழலாம் என ஜெய்யை வற்புறுத்துகிறார். அவர் மறுக்க, விடாமல் துரத்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜெய், ஐஸ்வர்யா இணைந்தார்களா, ஜெய் குடும்பம் என்ன ஆனது என்பதுதான் ‘தீராக்காதல்’.

மனைவி அன்பிலும், முன்னாள் காதலியின் காதல் துரத்தலிலும் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரம் ஜெய்க்கு. சோகம், கோபம், மகிழ்ச்சி, இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் ஒரே மீட்டரில் கடந்து செல்கிறார். பல காட்சிகளில் கதாநாயகியை விட அவர் போட்டிருக்கும் அதிக மேக்கப் திரையில் உறுத்துகிறது.கதாநாயகியை மையப்படுத்தி வெளிவந்த தன்னுடைய படங்களுக்கு இடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படியான கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கம்போல, குறை சொல்ல முடியாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் ஷிவதா தன் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.சித்து குமாரின் பின்னணி இசையும்,    ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பும் கதைக்கு கூடுதல் பலம்.

ஜெய்யின் நண்பனாக அப்துல் லீ வரும் காட்சிகள் எல்லாம் நகைச்சுவைக்கு குறைவில்லாமல் கதையோட்டத்தில் இயல்பாக ஒன்றியிருப்பது ப்ளஸ். ’பிரேக்கப் எல்லாம் காதலர்களுக்குத்தான், காதலுக்கு இல்லை’, ‘பிரிவுக்கு பின் நம்ம காதல் மனசுல ரகசியமாகவே இருக்கட்டும்’ என்பது போன்ற வசனங்கள் இரண்டாம் பாதியில் கவனிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ரசிக்கலாம்.

- Advertisement -

Read more

Local News