Touring Talkies
100% Cinema

Friday, November 14, 2025

Touring Talkies

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் ரசிகர்களிடையே ‘ஆக்ஷன் கிங்’ என்ற பெயரை பெற்றவர். சமீபகாலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், தினேஷ் லக்சுமணன் எழுதி இயக்கியுள்ள தீயவர் குலை நடுங்க திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.ஆர். ஆர்ட்ஸ் மற்றும் சன் மூன் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளன. பரத் ஆசிவகன் இசை அமைத்துள்ளார்; சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. தற்போது அர்ஜுன் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News