எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தின் முதல் பாடலாகிய ‘தளபதி கச்சேரி’ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அப்பாடல் விஜயின் முந்தைய பாடல்கள் பெற்ற சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெளியான 24 மணி நேரத்திற்குள் அந்தப் பாடல் 10 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்தது. தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகள் பெற்ற சாதனை ‘தி கோட்’ படத்தின் ‘விசில் போடு’ பாடலுக்கே சொந்தம்; அது 24.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், நேற்று இரவு வரை 15 மில்லியன் பார்வைகள் இருந்த பாடல், இன்று காலை 30 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஒரே இரவில் இவ்வளவு பெரிய அளவுக்கு பார்வைகள் உயர்ந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

