Touring Talkies
100% Cinema

Wednesday, December 10, 2025

Touring Talkies

மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன்லால் நடிப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெளியாகிய ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டு பாகங்களும், மலையாளத் திரையுலகத்தைத் தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் கேரளாவில் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 

இதையடுத்து, படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால், அனைவரிடமும் நன்றி தெரிவித்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து விடை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News