Thursday, April 11, 2024

‘துணிவு’ படத்தின் அடுத்த பாடலும் சாதனை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ 2-வது பாடலான ‘காசேதான் கடவுளடா’   ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன.

இந்நிலையில்,  படத்தின் 3வது பாடல் ‘கேங்ஸ்டா’ இன்று வெளியாகியுள்ளது.

இதுவும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று நான்கு மணி நேரத்தில் பதினோரு லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News