நடிகர் கார்த்தி ‘மெய்யழகன்’ படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. முன்னதாக டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட ‘வா வாத்தியார்’ திரைப்படம் தற்போது வரும் 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய ரிலீஸ் தேதியுடன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் 3-வது சிங்கிள் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதலாளி என்ற தலைப்பிள் வெளியாகி உள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

