Touring Talkies
100% Cinema

Friday, November 14, 2025

Touring Talkies

நாட்டாமை திரைப்படம் சாதிய படம் கிடையாது – நடிகர் சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், முன்னாள் காலத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்ற சாதியை மையப்படுத்திய படங்கள் மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது சாதிக்கு எதிரான பைசன் போன்ற திரைப்படங்கள் உருவாகும் சூழல் குறித்து என்ன கருத்து என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சரத்குமார், “நாட்டாமை படம் சாதியைப் பற்றிய படம் அல்ல; அது ஒரு பஞ்சாயத்து தலைவரின் கதையைச் சொல்லும் திரைப்படம். அதைப் போலவே, தேவர் மகன் படம் அந்த பகுதியில் எடுத்ததால் அதற்கு அந்தப் பெயர் வைத்தார்கள்; அது சாதி சார்ந்த படம் அல்ல. பைசன் படமும் சாதியை மையப்படுத்திய படம் என்று கூற முடியாது.

ஹாலிவுட் படங்களிலும் கூட நெறியழிந்த காலங்களில் கறுப்பின மக்களுக்கு நடந்த அநீதிகளை எடுத்துக் கூறுகிறார்கள். அதுபோல பழைய காலங்களில் நடந்த தவறுகளை மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக படங்கள் எடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News