பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள படம் ‘மை டியர் சிஸ்டர்’. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்; இசையை நிவாஸ் கே. பிரசன்னா அமைத்துள்ளார்.

இப்படம் குறித்து நடிகை மம்தா மோகன்தாஸ் பேசுகையில், அருள்நிதியின் அக்கா கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன். அசாதாரணமான ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை சொல்லும் கதை இது. படத்தில் நான் டக்கர் வண்டி ஓட்டும் டிரைவராக நடித்திருக்கிறேன். இது என் சினிமா பயணத்தில் 20வது ஆண்டு என்று கூறினார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் புரோமோ கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது.

