Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

திரைப்படமாகிறது  உலக பணக்காரர் ’எலான் மாஸ்க்’ வாழ்க்கை வரலாறு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பணக்காரர் பட்டியலில் எப்போது முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க், சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் பக்கத்தின் சிஇஒ-வாக இருக்கிறார். தற்போது  இவரது வாழ்க்கை வரலாறு ‘எலான் மஸ்க்’ என்ற அவரது பெயரில் கடந்த செப்டம்பரில் புத்தகமாக வெளியானது. இதை பிரபல எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் எழுதியிருந்தார். இவர் ஏற்கனவே ஆப்பிள் சிஇஒ-வாக இருந்து மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை புத்தமாக எழுதியிருந்தார். இதை மையமாக வைத்து 2015ல் ஸ்டீவ் ஜாப்ஸின் பயோகிராபி வெளியானது.

 

இந்த நிலையில் ‘எலான் மஸ்க்’ வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. வால்டர் ஐசக்சன் எழுதிய புத்தகத்தை வைத்து உருவாகும் இப்படத்தை ஏ24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ‘பிளாக் ஸ்வான்’ ‘தி வேள்’  உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் தி வேள் படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

முன்னணி பிரபலங்களுடன் எலான் மஸ்கின் பயோ-பிக் உருவாகவுள்ளதாகத் தெரியும் சூழலில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News