Thursday, April 11, 2024

தமிழ்த் திரைப்பட சங்கத்தில் தேர்தல் அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.

‘கடந்த மாதம் 23ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

 அதில், சங்கத்தின் விதிப்படி 2023-2026ம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் தேர்தல் நடத்தலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 26ல் தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடுவர்கள் பிப்.23 காலை 11 மணி முதல் பிப்.26 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். மார்ச் 26ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News