Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
yogibabu – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 Apr 2024 11:05:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png yogibabu – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ Sat, 27 Apr 2024 11:05:53 +0000 https://touringtalkies.co/?p=41549 எதிலும் ஆக்ஷன் எங்கும் ஆக்‌ஷன் இப்படி ஆக்ஷன் சேஸிங் படங்களுக்கான அடையாளம் என்றாலே ஹரி என்று சொல்லலாம்‌.விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை படங்களை எடுத்த ஹரி அவரை வைத்து ரத்னம் என்ற படத்தை எடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.ஆனால் இந்த ஹாட்ரிக் எந்தளவுக்கு சிறந்தது என்பதே ரசிகர்களின் விமர்சனங்களை பொறுத்துதான். ரத்னம் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் விஷால் எப்போதும் போல […]

The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
எதிலும் ஆக்ஷன் எங்கும் ஆக்‌ஷன் இப்படி ஆக்ஷன் சேஸிங் படங்களுக்கான அடையாளம் என்றாலே ஹரி என்று சொல்லலாம்‌.விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை படங்களை எடுத்த ஹரி அவரை வைத்து ரத்னம் என்ற படத்தை எடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.ஆனால் இந்த ஹாட்ரிக் எந்தளவுக்கு சிறந்தது என்பதே ரசிகர்களின் விமர்சனங்களை பொறுத்துதான். ரத்னம் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் விஷால் எப்போதும் போல இது நம்ப ஏரியா என்றவாறு சண்டக்கோழி, தாமிரபரணி படங்களில் எந்த மாதிரி ஆக்‌ஷனில் தெறிக்கவிட்டிருந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் பறக்கவிட்டு இருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தில் டபுள் ஆக்‌ஷன். தனக்கு கொடுத்த ரோல்-ஐ சற்றும் குறைவின்றி நிறைவாக முடித்திருக்கிறார். சமுத்திரகனி மற்றும் கெளதம் மேனன் தங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்ய மெயின் வில்லனாக மாஸ் காட்டியுள்ளார் தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா.

படத்தின் நிறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹரி இயக்கம் என்றாலே ஆக்ஷன் தான் அப்படி இருக்க ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் அளவுக்கு தாமிரபரணி படத்தை போல எமோஷனல் காட்சிகளில் க்ளாஸ் காட்டியுள்ளார்.பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இடையேயான உறவு என்ன என்பதில் வைத்திருக்கிறார் ஹரி ட்விஸ்ட்.பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் என பல சண்டை இயக்குநர்கள் சேஸிங் சீன்களை அல்டிமேட்டாக கொடுத்துள்ளனர்.

படத்தின் குறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹீரோயினை காப்பாற்ற எத்தனை பேர் வந்தாலும் விடாமல் பறக்கவிடும் ஹீரோவாக தோற்றமளிக்க இது கொஞ்சம் என்னடா இது என்றவாறு கேட்க்க தோன்றுகிறது.படத்தின் முதல் பகுதியில் தப்பை தட்டிக் கேட்கும் நாயகனாக காட்டி கதையை கடைசியில் நாயகியின் பக்கம் மொத்த படத்தையும் திருப்பி விட்டது படம் வலுவிலக்க காரணமாகிவிட்டது.

அதேபோல் யோகி பாபு காமெடி என்ற பெயரில் இந்த படத்தில மொக்கைப் போட ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பின்னணி எல்லாம் ஒருவிதத்தில் ஓகேவாக அமைந்துள்ளது. பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஹரி மற்றும் விஷாலின் கமர்ஷியல் படங்களை ரசிக்க கூடியவராக இருந்தால் இது ஒரு முறை பார்க்கும் படம்.

The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி ஃபைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/ Sat, 23 Mar 2024 08:46:10 +0000 https://touringtalkies.co/?p=40107 விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்? பாடகரான விஜய் சேதுபதி… 1) விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்புகளை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் அதற்குள் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல். 2) பாடகரான விஜய் சேதுபதி கரா என்ற படம் தயாராகி வருகிறது. அதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், […]

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>

விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்? பாடகரான விஜய் சேதுபதி…

1) விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்புகளை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் அதற்குள் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்.

2) பாடகரான விஜய் சேதுபதி

கரா என்ற படம் தயாராகி வருகிறது. அதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், சாகிபா பாஸின் நாயாகியாகவும் , ஜிவா வில்லனாகவும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையில் விஜய் சேதுபதி ‘காதல் குமாரு வைரல் ஆனாரு…, என்ற பாடலை பாடியுள்ளார்.

3) வதந்திகளை நம்பாதீங்க – நடிகை பூஜா

ஆர்யாவின் திருமணத்தில் நடிகையான பூஜா கலந்து கொள்ளாமல் போனதை பல விதங்களில் பேசப்பட்டதை தொடர்ந்து, நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன் ஆர்யா எனக்கு போன் செய்து இருந்தார் அதை பார்க்க தாமதம் ஆகிவிட்டது.அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே தவிர வதந்திகளை நம்பாதீங்க என்றுள்ளார்.

4) நித்தியாமேனனுக்கு காமெடி கதாபாத்திரம்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நித்தியா மேனன். தற்போது விஷ்ணு வர்தனின் உதவி இயக்குனராக பணியாற்றிய காமினி எழுதி இயக்கும் காதல், காமெடி கலந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நித்யாமேனன். இப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கின்றன.‌

5) மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘ரோமியோ’

கவரும் தலைப்பு, கதை, சமூக கருத்து என நடிப்பில் ஈர்க்கும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது மனைவி மீரா விஜய் ஆண்டனி தங்களுடைய சொந்த ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மூலம் ரோமியோ என்ற படத்தை தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத விஜய் ஆண்டனியாக நடித்துள்ளாராம்.இவருடன் மிருணாளினி ரவி, யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
அவ்வை சண்முகியாக யோகிபாபு! https://touringtalkies.co/miss-maggi-shooting-completed/ Tue, 12 Sep 2023 04:25:45 +0000 https://touringtalkies.co/?p=36149 அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்ஹாசன், பெண் வேடத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதே போல நடிகர் யோகி பாபு, ‘மிஸ் மேகி’ என்ற படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார். லதா ஆர் மணியரசு இயக்கும் இதில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி […]

The post அவ்வை சண்முகியாக யோகிபாபு! appeared first on Touring Talkies.

]]>
அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்ஹாசன், பெண் வேடத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

அதே போல நடிகர் யோகி பாபு, ‘மிஸ் மேகி’ என்ற படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார். லதா ஆர் மணியரசு இயக்கும் இதில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. யோகிபாபு, ஆங்கிலோ இந்திய பெண் கெட்டப்பில் கேக் வெட்டும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

The post அவ்வை சண்முகியாக யோகிபாபு! appeared first on Touring Talkies.

]]>
என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ’லக்கிமேன்’ யோகிபாபு உருக்கம் https://touringtalkies.co/the-film-that-made-me-look-back-on-my-life-was-luckyman-yogibabu/ Thu, 31 Aug 2023 01:51:51 +0000 https://touringtalkies.co/?p=35815   பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் லக்கிமேன். நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது […]

The post என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ’லக்கிமேன்’ யோகிபாபு உருக்கம் appeared first on Touring Talkies.

]]>
 

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் லக்கிமேன்.

நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலதானே? அதைக் கேட்டால்தான் அனைவருக்கும் பிரச்சினை.

நான் ஷூட்டிங் வரமால் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன். படம் ரொம்பவே பிடித்து நடித்தோம். படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.

 

 

The post என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ’லக்கிமேன்’ யோகிபாபு உருக்கம் appeared first on Touring Talkies.

]]>
“நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது”: யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ ட்ரெய்லர்   https://touringtalkies.co/yogibabu-starring-lucky-man-trailer/ Sat, 19 Aug 2023 04:14:21 +0000 https://touringtalkies.co/?p=35441 ‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களின் வரிசையில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் ‘லக்கி மேன்’. பாலாஜி வேணுகோபால் இயக்கும் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இதில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஆக. 19) வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி?: வாழ்க்கையில் துயரததையே சந்தித்து வரும் ஒரு மனிதனுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பது ட்ரெய்லரில் […]

The post “நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது”: யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ ட்ரெய்லர்   appeared first on Touring Talkies.

]]>
‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களின் வரிசையில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் ‘லக்கி மேன்’. பாலாஜி வேணுகோபால் இயக்கும் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இதில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஆக. 19) வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?:

வாழ்க்கையில் துயரததையே சந்தித்து வரும் ஒரு மனிதனுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பது ட்ரெய்லரில் சுருக்கமாக காட்டப்படுகிறது. ஏழ்மையான நிலையில் இருக்கும் யோகிபாபுவுக்கு ஒரு பெரிய வேலையின் மூலம் வசதிகள் கிடைக்கின்றன. கூடவே சில பிரச்சினைகளும்  முளைக்கின்றன.

இதனால் அவர் குடும்பத்திலும், வெளியிலும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ட்ரெய்லரில் நமக்கு காட்டப்படுகிறது. ஷான் ரால்டனின் இசையில் பின்னணியில் வரும் பாடல் ஈர்க்கிறது. “நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது”, ‘நமக்கு பிடிச்ச விஷயத்தைதான் இயற்கை முதல்ல நம்மகிட்டருந்து பறிக்கும்” போன்ற வசனங்கள் சிறப்பாக உள்ளன.

The post “நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது”: யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ ட்ரெய்லர்   appeared first on Touring Talkies.

]]>
டப்பிங்கில் நிஜமாகவே கதறி அழுத யோகிபாபு!  https://touringtalkies.co/yogibabu-could-not-do-his-dupping-for-love-today-movie/ Fri, 21 Jul 2023 00:16:56 +0000 https://touringtalkies.co/?p=34554 பிரதீப் ரங்கநாந்தன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் யோகிபாபு. படத்தில், தன்னுடைய செல்போனை தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். ஏனெனில், தனது தோற்றத்தை வைத்து, வாட்ஸ்அப் குரூப்பில் தன்னை பற்றி கிண்டலாக தனது நண்பர்கள் விமர்சிப்பதை மணப்பெண் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைப்பார். இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ஒரு வீடியோவில், “லவ் டுடே படத்தின் டப்பிங்கின்போது குறிப்பிட்ட காட்சியில் யோகிபாபுவால் பேசமுடியவில்லை. ஏனெனில் இது எல்லாம் […]

The post டப்பிங்கில் நிஜமாகவே கதறி அழுத யோகிபாபு!  appeared first on Touring Talkies.

]]>
பிரதீப் ரங்கநாந்தன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் யோகிபாபு.

படத்தில், தன்னுடைய செல்போனை தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். ஏனெனில், தனது தோற்றத்தை வைத்து, வாட்ஸ்அப் குரூப்பில் தன்னை பற்றி கிண்டலாக தனது நண்பர்கள் விமர்சிப்பதை மணப்பெண் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைப்பார்.

இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ஒரு வீடியோவில், “லவ் டுடே படத்தின் டப்பிங்கின்போது குறிப்பிட்ட காட்சியில் யோகிபாபுவால் பேசமுடியவில்லை. ஏனெனில் இது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது. நான் மொத்தமா ஆஃப் ஆயிட்டேன். நாளைக்கு வந்து பேசுறேன் என்றார். அடுத்தநாள் வந்த பின்னரும் அவரால் பேச முடியவில்லை. அதன்பின் அவரே சில வசனங்களை சொன்னார். ‘சாணி உருண்டை மாதிரி இருக்க’ என்கிற வசனத்தையெல்லாம் அவர் சேர்த்து பேசினார். அவரை அப்படியெல்லாம் பலரும் அசிங்கப்படுத்தியதாக கூறினார்’ என பிரதீப் கூறியிருந்தார்.

The post டப்பிங்கில் நிஜமாகவே கதறி அழுத யோகிபாபு!  appeared first on Touring Talkies.

]]>
ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! https://touringtalkies.co/hara-vanita-joins/ Fri, 07 Jul 2023 00:12:12 +0000 https://touringtalkies.co/?p=34116 ‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார் வெள்ளி விழா நாயகனாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் மோகன். எத்தனையோ இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை விரும்பி,  ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தவிர, பெரும்பாலான படங்களில் மென்மையான  பாடகராக வந்ததால்  ‘மைக்’ மோகன் […]

The post ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! appeared first on Touring Talkies.

]]>
‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார்

வெள்ளி விழா நாயகனாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் மோகன். எத்தனையோ இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை விரும்பி,  ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தவிர, பெரும்பாலான படங்களில் மென்மையான  பாடகராக வந்ததால்  ‘மைக்’ மோகன் என செல்லமாக அழைக்கப்பட்ட இவருக்கு ஹரா படத்தில் டெரர் கேரக்டர்..  ஆகவே படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

தவிர, இந்த படத்தில், குஷ்பு, சுரேஷ் மேனன் , யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா,  என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கிறது.

இந்நிலையில், நிஜத்திலேயே அதிரடி நடிகையான வனிதா, இந்த படத்தில் இணைந்துள்ளார். அமைச்சர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்துள்ளார். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.படத்தின் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ பாடல் என தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் ஹரா, திரைக்கு வருவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் விஜய்ஸ்ரீஜி, “எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கமர்சியல் மூவியாக மட்டுமின்றி, மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். அதேபோல  ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் முக்கிய கருத்தாகும்” என்றார்.

 

 

 

The post ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! appeared first on Touring Talkies.

]]>
விஜய்யுடன் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு https://touringtalkies.co/yogi-babu-shared-a-video-taken-with-vijay-on-the-sets-of-varisu/ Sun, 29 Jan 2023 03:24:00 +0000 https://touringtalkies.co/?p=30057 விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வாகனத்தை விஜய் ஓட்டிச் செல்ல, பின்னால் அமர்ந்திருக்கிறார் யோகி பாபு. இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கிறார்கள். இது குறித்து யோகிபாபு, “விஜய் ஒரு பெரிய நடிகர். ஆனால் அந்த எண்ணமே இல்லாமல்.. சக நண்பர் போல, ஒரு சகோதரன் போல பழகினார். படப்பிடிப்பின் போது […]

The post விஜய்யுடன் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வாகனத்தை விஜய் ஓட்டிச் செல்ல, பின்னால் அமர்ந்திருக்கிறார் யோகி பாபு. இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கிறார்கள்.

இது குறித்து யோகிபாபு, “விஜய் ஒரு பெரிய நடிகர். ஆனால் அந்த எண்ணமே இல்லாமல்.. சக நண்பர் போல, ஒரு சகோதரன் போல பழகினார். படப்பிடிப்பின் போது வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். செல்போன்கூட பார்க்கமாட்டார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு நடிப்பார். அவரிடம் இந்த சின்சியாரிட்டியை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் யோகிபாபு.

The post விஜய்யுடன் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு appeared first on Touring Talkies.

]]>
யோகிபாபுவுக்கு நடு ராத்திரியில் போன் செய்த நெல்சன்..! https://touringtalkies.co/kolamaavu-kokilaa/ Fri, 16 Dec 2022 16:41:34 +0000 https://touringtalkies.co/?p=28676 சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில்  ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் யோகிபாபு. இதன் காரணமாகவே ’பாபு’ என்ற தனது பெயருக்கு முன் யோகி பாபு என சேர்த்துக் கொண்டார்.அதன் பிறகு சூது கவ்வும்,அட்டகத்தி,அரண்மனை,காக்கா முட்டை,நகைச்சுவை நடிகராவும், கூர்க்கா படத்தில் நாயகனாக,கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் யோகி பாபு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கோலமாவு கோகிலா படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அனிருத் ஸ்டுடியோவில் இருந்து நெல்சன் நடுராத்திரி […]

The post யோகிபாபுவுக்கு நடு ராத்திரியில் போன் செய்த நெல்சன்..! appeared first on Touring Talkies.

]]>

சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில்  ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் யோகிபாபு. இதன் காரணமாகவே ’பாபு’ என்ற தனது பெயருக்கு முன் யோகி பாபு என சேர்த்துக் கொண்டார்.அதன் பிறகு சூது கவ்வும்,அட்டகத்தி,அரண்மனை,காக்கா முட்டை,நகைச்சுவை நடிகராவும், கூர்க்கா படத்தில் நாயகனாக,கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் யோகி பாபு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கோலமாவு கோகிலா படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அனிருத் ஸ்டுடியோவில் இருந்து நெல்சன் நடுராத்திரி 2 மணிக்கு  போன் செய்து உங்கள் வாட்ஸப்பில் பாட்டு அனுப்பி உள்ளேன் பாருங்கள் என்றார்.

இதுதான் நீங்களும் நயன் தாராவும் ஆடப்போகும் பாடல் என்றார். டான்ஸ் எல்லாம் பெருசா இருகாது. லவ் யூ மெண்ட் சைகையில் காட்டுங்கள் போதும் என்றார். என்னிடம் கேட்டிங்க நயன்தாராவிடம் கேட்டிங்காளா என்றேன். ’கல்யாண வயசு தான் வந்துருச்சுடி’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது என்றார் யோகி பாபு.

The post யோகிபாபுவுக்கு நடு ராத்திரியில் போன் செய்த நெல்சன்..! appeared first on Touring Talkies.

]]>
யோகி பாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ திரைப்படம் https://touringtalkies.co/thookku-durai-movie-preview-news/ Sun, 20 Nov 2022 18:43:51 +0000 https://touringtalkies.co/?p=27338 மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் ‘தூக்குதுரை’ என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபுவுடன், இனியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, […]

The post யோகி பாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

இப்போது அவர் ‘தூக்குதுரை’ என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபுவுடன், இனியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவு: ரவி வர்மா.கே, இசை – கே.எஸ்.மனோஜ், படத் தொகுப்பு – தீபக் எஸ் துவாரக்நாத், கலை இயக்கம் – ஜெய்முருகன், பாக்கியராஜ், சண்டைப் பயிற்சி இயக்கம் – மான்ஸர் முகேஷ், ராம்குமார், பாடல்கள் – அறிவு, மோகன்ராஜன், நடனப் பயிற்சி இயக்கம் – ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பாளர் – நிவேதா ஜோசப், உடைகள் – பாலாஜி, ஒப்பனை: ஏ.பி.முகமது, Effects & Logics (VFX): அரவிந்த், நடிகர்கள் தேர்வு (Casting): ஸ்வப்னா ராஜேஷ்வரி, படங்கள்: சாய் சந்தோஷ், தயாரிப்பு மேலாளர்: மனோஜ் குமார், தயாரிப்பு நிர்வாகி: பாலாஜி பாபு.எஸ், நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெயசீலன், பத்திரிகை தொடர்பு – டீம் D’One, விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ், இணை-தயாரிப்பு : வினோத் குமார் தங்கராஜூ.

அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

’தூக்குதுரை’ திரைப்படம் ‘PRE’ (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19-ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.

The post யோகி பாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>