Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Withard – Touring Talkies https://touringtalkies.co Sun, 26 Nov 2023 05:05:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Withard – Touring Talkies https://touringtalkies.co 32 32 குய்கோ – விமர்சனம் https://touringtalkies.co/kuiko-movie-review/ Sat, 25 Nov 2023 05:01:13 +0000 https://touringtalkies.co/?p=38266 அறிமுக இயக்குநர் டி.அருள் செழியன் இயக்கத்தில் விதார்த் நாயகன்,யோகிபாபு நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் குய்கோ. எப்படி இருக்கு குய்கோ….. சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் மலையப்பனாக யோகிபாபு வருகிறார். சொந்த கிராமத்தில் இருக்கும் தாய் காலமாகிவிடுகிறார். அவர் உடலை வைக்க பிரீஸர் பாக்ஸ் தேவைப்படுகிறது. பாக்ஸை எடுத்துக் கொண்டு அந்த மலைகிராமத்துக்குச் செல்கிறார் நேர்கிறது தங்கராஜாக வரும் விதார்த். இந்நிலையில் சம்பந்தமில்லாத வழக்கில் தங்கராஜையும் அவர் மாமாவையும் போலீஸ் தேடுகிறது.   ஊருக்குத் திரும்பினால் இவர்களை போலீஸ் பிடிப்பார்கள் […]

The post குய்கோ – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
அறிமுக இயக்குநர் டி.அருள் செழியன் இயக்கத்தில் விதார்த் நாயகன்,யோகிபாபு நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் குய்கோ.

எப்படி இருக்கு குய்கோ….. சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் மலையப்பனாக யோகிபாபு வருகிறார். சொந்த கிராமத்தில் இருக்கும் தாய் காலமாகிவிடுகிறார். அவர் உடலை வைக்க பிரீஸர் பாக்ஸ் தேவைப்படுகிறது. பாக்ஸை எடுத்துக் கொண்டு அந்த மலைகிராமத்துக்குச் செல்கிறார் நேர்கிறது தங்கராஜாக வரும் விதார்த். இந்நிலையில் சம்பந்தமில்லாத வழக்கில் தங்கராஜையும் அவர் மாமாவையும் போலீஸ் தேடுகிறது.

 

ஊருக்குத் திரும்பினால் இவர்களை போலீஸ் பிடிப்பார்கள் என்பதால் சவுதியில் இருந்து மலையப்பன் வரும்வரை, அங்கேயே தங்கராஜ் தங்க வேண்டிய சூழல். ஊருக்கு வந்த மலையப்பன் என்ன செய்கிறார்? தங்கராஜை தேடும் போலீஸ் என்ன செய்கிறது என்பதை காமெடியாக சொல்கிறது ‘குய்கோ’

ஒரு சாதாரண கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்ல முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குநர் டி.அருள் செழியன். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் இவர்தான். இதில், சடலம் சுமக்கும் ‘பிரீஸர் பாக்ஸு’க்கு சென்டிமென்ட் டச் கொடுத்து திரைக்கதை அமைத்திருப்பது புதுமை.

சமூதாயத்தில் நடக்கும் விஷயங்கள்  கிண்டலடிக்கும் வசனங்களும் கதையோடு இணைந்த காமெடியும் ‘குய்கோ’வின், வெற்றி உறுதி என்பது போன்று உள்ளது.

“ஆடு மேய்க்கிறவரை ஆண்டவரா ஏத்துக்கிட்டாங்க, இந்த மாடு மேய்க்கிறவனை மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டியா?” என்பது போன்ற வசனங்கள் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. யோகிபாபு வந்திறங்கியதும் விறுவிறுப்பை கூட்டுகிறது திரைக்கதை. சவுதி ரிட்டர்னாக வரும் அவர் நடவடிக்கைகள் சிரிப்பைச் கூட்டுகிறது. அவருக்கான பிளாஷ்பேக் காதலும், ‘என் பேரு மாரி’ பாடலும் ரசிக்க வைக்கிறது.

விதார்த் அவருக்கான கதையில்  கட்சிதமாக நடித்திருக்கிறார். யோகிபாபு வழக்கம் போல படத்தை தாங்கிப் பிடிக்கிறார். கால்குலேட்டர் சண்முகமாக வரும் இளவரசு இயல்பான நடிப்பால் நகைச்சுவையை வரவழைக்கிறார். கதாநாயகிகளாக பிரியங்கா, துர்கா கதைக்கு பொருத்தம்.

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் அழகை, பசுமை மாறாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது. அந்தோணி தாசனின் இசையில் ‘அடி பெண்ணே உன்னை’, ‘ஏய், என் செகப்பழகி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில்  ‘குய்கோ’வை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

The post குய்கோ – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>