Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
villain – Touring Talkies https://touringtalkies.co Sun, 31 Dec 2023 01:17:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png villain – Touring Talkies https://touringtalkies.co 32 32 தலைவர் 171: வில்லன் இவரா? https://touringtalkies.co/thalaivar-171-update-lokesh-movie-villain-character-vijay-sethupathi/ Sun, 31 Dec 2023 01:17:06 +0000 https://touringtalkies.co/?p=39338 தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய […]

The post தலைவர் 171: வில்லன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் – லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இதுதவிர தலைவர் 171 படத்தில் யாரெல்லாம் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்து மக்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே விஜய்சேதுபதி இல்லன் வில்லன் ரோலில் நடிக்கமாட்டேன் என கூறியிருந்த நிலையில், இந்த படத்தில் நடிப்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

The post தலைவர் 171: வில்லன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
வில்லனுக்கே வில்லன் ஜெயராம்! https://touringtalkies.co/actor-jayaram-plays-villain-role-for-vijay-sethupathi/ Sun, 15 Oct 2023 07:07:41 +0000 https://touringtalkies.co/?p=37149 கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மிஷ்கின் இயக்கும் படததில்  விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இதில் ஜெயராம் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் சேதுபதி கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. நாயகனாக மட்டுமின்றி, பல படங்களில் வில்லனாகும் கலக்கும் விஜய் சேதுபதிக்கே, ஜெயராம் வில்லனாக நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

The post வில்லனுக்கே வில்லன் ஜெயராம்! appeared first on Touring Talkies.

]]>
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மிஷ்கின் இயக்கும் படததில்  விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இதில் ஜெயராம் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் சேதுபதி கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

நாயகனாக மட்டுமின்றி, பல படங்களில் வில்லனாகும் கலக்கும் விஜய் சேதுபதிக்கே, ஜெயராம் வில்லனாக நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

The post வில்லனுக்கே வில்லன் ஜெயராம்! appeared first on Touring Talkies.

]]>
‘விடாமுயற்சி’யில் சஞ்சய் தத் வில்லன் https://touringtalkies.co/sanjay-dutt-to-be-villain-in-ajith-kumar-vidamuyarchi/ Thu, 21 Sep 2023 06:11:18 +0000 https://touringtalkies.co/?p=36447 வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் த்ரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க […]

The post ‘விடாமுயற்சி’யில் சஞ்சய் தத் வில்லன் appeared first on Touring Talkies.

]]>
வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் த்ரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் துபாயில் சஞ்சய் தத்தும் அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. இதனால் இந்தப் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சஞ்சய் தத் நடித்துள்ளார்

The post ‘விடாமுயற்சி’யில் சஞ்சய் தத் வில்லன் appeared first on Touring Talkies.

]]>
விஜய்க்கு வில்லனாக அமீர் கான்? https://touringtalkies.co/aamir-khan-as-villain-for-vijay/ Thu, 14 Sep 2023 02:55:21 +0000 https://touringtalkies.co/?p=36211 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், திரைத்துறை பற்றிய பல கேள்விகளுக்கு படத் தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் பதில் அளித்து வருகிறார்.. @  கமல் ஹெச் வினோத் படப்பிடிப்பு எப்போது @ இனி ரஜினி நடிக்கும் படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகத்தான் அமையுமா @ பா.ரஞ்சித் கமல் இணையும் படம் எப்போது @ கங்குவா படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார் @ விஜய்க்கு வில்லனாக அமீர் கான் நடிக்கிறாரா.. # இன்னும் […]

The post விஜய்க்கு வில்லனாக அமீர் கான்? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், திரைத்துறை பற்றிய பல கேள்விகளுக்கு படத் தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் பதில் அளித்து வருகிறார்..

@  கமல் ஹெச் வினோத் படப்பிடிப்பு எப்போது

@ இனி ரஜினி நடிக்கும் படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகத்தான் அமையுமா

@ பா.ரஞ்சித் கமல் இணையும் படம் எப்போது

@ கங்குவா படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார்

@ விஜய்க்கு வில்லனாக அமீர் கான் நடிக்கிறாரா..

# இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரிய கீழ்க்கண்ட லிக்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=OlizRZ03R28

 

 

 

The post விஜய்க்கு வில்லனாக அமீர் கான்? appeared first on Touring Talkies.

]]>
ரஜினி  171 படத்தில் கமல் வில்லன்? https://touringtalkies.co/kamal-villain-in-rajinikanth-171/ Sat, 05 Aug 2023 01:04:38 +0000 https://touringtalkies.co/?p=35044 ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இதையடுத்து ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படம் ரஜினியின் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான படமாக இருக்கும் என தகவல்கள் வருகின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரஜினி தன் 171 ஆவது திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வருகின்றன. லோகேஷ் தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி வரும் […]

The post ரஜினி  171 படத்தில் கமல் வில்லன்? appeared first on Touring Talkies.

]]>
ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

இதையடுத்து ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படம் ரஜினியின் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான படமாக இருக்கும் என தகவல்கள் வருகின்றன.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரஜினி தன் 171 ஆவது திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வருகின்றன.

லோகேஷ் தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக கைதி 2 படத்தை தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை தான் லோகேஷ் அடுத்ததாக இயக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன.

இப்படத்தில் கிட்டத்தட்ட 15 ஹீரோக்கள் நடிக்கவும் வாய்ப்பிருக்கின்றதாம்.

பொதுவாக ரஜினி மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்கமாட்டார். ஆனால் ஜெயிலர் படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கின்றார் ரஜினி. எனவே தற்போது இருக்கும் ட்ரெண்டிற்கு ஏற்ப இந்த படத்திலும் பல ஹீரோக்கள் நடிக்கின்றார்கள் என்கிற தகவல் உலவுகிறது.

தவிர, இப்படத்தில் கமல் வில்லனாக நடிப்பார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

இது குறித்து  பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனிடம்,  கேட்கப்பட்டது.

அவர், “மற்ற தகவல்கள் எப்படியோ.. ஆனால் அந்த படத்தில் கமல் வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனல் பாருங்கள்..

லிங்க் கீழே..

 

https://www.youtube.com/watch?v=kiRz2owXzHY

 

 

 

 

 

The post ரஜினி  171 படத்தில் கமல் வில்லன்? appeared first on Touring Talkies.

]]>
கங்குவா: சூர்யாவுக்கு வில்லன் இவரா? இன்னும் ஒரு இறக்குமதி! ! https://touringtalkies.co/bobby-deol-as-suriyas-villain/ Tue, 25 Jul 2023 04:28:14 +0000 https://touringtalkies.co/?p=34714 தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்கள் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார்கள். ‘தளபதி’ படத்தில் அம்ரிஷ்புரி, ‘2.0’ படத்தில் அக்ஷய்குமார், ‘காலா’வ் படத்தில் நானா படேகர், ‘விக்ரம்’ படத்தில் அம்ஜத்கான் என இந்தி நடிகர்கள் கலக்கியிருக்கிறார்கள். ‘கே.ஜி.எப்.-2’ படத்தில் கொடூர வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த சஞ்சய் தத், தற்போது விஜய்க்கு வில்லனாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் […]

The post கங்குவா: சூர்யாவுக்கு வில்லன் இவரா? இன்னும் ஒரு இறக்குமதி! ! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்கள் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார்கள். ‘தளபதி’ படத்தில் அம்ரிஷ்புரி, ‘2.0’ படத்தில் அக்ஷய்குமார், ‘காலா’வ் படத்தில் நானா படேகர், ‘விக்ரம்’ படத்தில் அம்ஜத்கான் என இந்தி நடிகர்கள் கலக்கியிருக்கிறார்கள். ‘கே.ஜி.எப்.-2’ படத்தில் கொடூர வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த சஞ்சய் தத், தற்போது விஜய்க்கு வில்லனாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், “கங்குவா படத்தில் சூர்யாவுக்கு இணையாக ஆளுமைமிக்க வில்லனாக மிரட்டக்கூடிய நடிகரை தேடினோம். அப்படி சிந்திக்கும்போது பாபி தியோல் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று நம்பினோம். கதையை சொன்னதும் அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார்” என்றார்.

The post கங்குவா: சூர்யாவுக்கு வில்லன் இவரா? இன்னும் ஒரு இறக்குமதி! ! appeared first on Touring Talkies.

]]>
அஜித்தையே அடித்து அழவைச்ச இயக்குநர்! https://touringtalkies.co/actor-ajith-who-bought-a-room-from-ks-ravikumar-and-cried/ Tue, 13 Jun 2023 05:12:21 +0000 https://touringtalkies.co/?p=33420 கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்,  மீனா, கிரண், விஜயன், ரேகா, கருணாஸ், சுஜாதா உள்ளிட்டோர் நடித்த படம் வில்லன்.  படத்தில் அஜித் இருவித தோற்றங்களில் நடித்து அசத்தி இருப்பார். இந்த படத்தில் ந்த பிளாஷ்பேக் கதையில் குட்டி அஜித்தாக சிறுவன் ஷிவா நடித்து இருந்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு இவர், அந்த படம் குறித்து பேட்டி அளித்து உள்ளார்.அவர், “ஒரு சீனில் நான் சரியாக அழவில்லை.  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொல்லிச் சொல்லி பார்த்தார். எனக்கோ அழுகை வரவில்லை. ஒரு […]

The post அஜித்தையே அடித்து அழவைச்ச இயக்குநர்! appeared first on Touring Talkies.

]]>
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்,  மீனா, கிரண், விஜயன், ரேகா, கருணாஸ், சுஜாதா உள்ளிட்டோர் நடித்த படம் வில்லன்.  படத்தில் அஜித் இருவித தோற்றங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

இந்த படத்தில் ந்த பிளாஷ்பேக் கதையில் குட்டி அஜித்தாக சிறுவன் ஷிவா நடித்து இருந்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு இவர், அந்த படம் குறித்து பேட்டி அளித்து உள்ளார்.அவர், “ஒரு சீனில் நான் சரியாக அழவில்லை.  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொல்லிச் சொல்லி பார்த்தார். எனக்கோ அழுகை வரவில்லை. ஒரு கட்டத்தில், என்னை ஓங்கி அறைந்துவிட்டார். உடனே நான் அழுதுவிட்டேன். பிறகு அவர், ‘கோச்சுக்காதே.. காட்சிக்காத்தான் உன்னை அடித்தேன்’ என்று கூறி சமாதானப்படுத்தினார்”  என்று கூறியிருக்கிறார்.

ஆக.. ( குட்டி) அஜித்தையே  அடித்து அழ வைத்து இருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்!

 

The post அஜித்தையே அடித்து அழவைச்ச இயக்குநர்! appeared first on Touring Talkies.

]]>
எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள் https://touringtalkies.co/villain-opportunities-for-sj-surya/ Fri, 09 Jun 2023 03:44:35 +0000 https://touringtalkies.co/?p=33313 வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி முத்திரை பதித்தவர்  எஸ்.ஜே.சூர்யா. அடுத்து சில படங்களில் நாயகனாகவும் நடித்தார். சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்துகிறார் அவரது தனித்துவ உடல் மொழியிலான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் எதிர்மறை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக வந்தார். சிம்புவின் மாநாடு படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது வில்லத்தன நடிப்பு பேசப்பட்டது. தற்போது மார்க் ஆண்டனி […]

The post எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள் appeared first on Touring Talkies.

]]>
வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி முத்திரை பதித்தவர்  எஸ்.ஜே.சூர்யா. அடுத்து சில படங்களில் நாயகனாகவும் நடித்தார்.

சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்துகிறார் அவரது தனித்துவ உடல் மொழியிலான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் எதிர்மறை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக வந்தார். சிம்புவின் மாநாடு படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது வில்லத்தன நடிப்பு பேசப்பட்டது. தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா-2 படத்தில் லாரன்சுக்கு வில்லனாகவும் நடிக்கிறார்.

ஷங்கர் இயக்கதில் ராம் சரண் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக வில்லன் வாய்ப்புகள் வருவதால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளாராம்.

The post எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள் appeared first on Touring Talkies.

]]>
இன்னொரு இயக்குநரும் வில்லன் ஆகிறார்! https://touringtalkies.co/director-suseenthiran-to-act-as-villain-in-margazhi-thingal/ Wed, 07 Jun 2023 02:04:25 +0000 https://touringtalkies.co/?p=33253 ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஈஸ்வரன் உட்பட பல படங்களை இயக்கினார். ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கிய ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது மனோஜ் பாரதி இயக்கும்  ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் வில்லனக நடிக்கிறார். ஏற்கெனவே பாண்டியராஜன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குநர்கள் வில்லனாக […]

The post இன்னொரு இயக்குநரும் வில்லன் ஆகிறார்! appeared first on Touring Talkies.

]]>
‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஈஸ்வரன் உட்பட பல படங்களை இயக்கினார். ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கிய ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்போது மனோஜ் பாரதி இயக்கும்  ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் வில்லனக நடிக்கிறார்.

ஏற்கெனவே பாண்டியராஜன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குநர்கள் வில்லனாக நடிக்கும் நிலையில், சுசீந்திரனும் மிரட்டுவதற்கு களம் இறங்கி உள்ளார்.

 

The post இன்னொரு இயக்குநரும் வில்லன் ஆகிறார்! appeared first on Touring Talkies.

]]>
என்னது.. வில்லன் கமல்.. சம்பளம் 150 கோடியா? https://touringtalkies.co/actor-kamal-haasan-going-to-act-as-a-villain-for-prabhas-in-project-k/ Wed, 31 May 2023 00:22:03 +0000 https://touringtalkies.co/?p=32996 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான படம் ப்ராஜெக்ட் கே. அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் கமல் என்கிற ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன. தவிர வெறும் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு, ரூ.150 கோடி சம்பளம் என்றும் தகவல் உலவுகிறது. இப்போது தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியையும், சோசியல் […]

The post என்னது.. வில்லன் கமல்.. சம்பளம் 150 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான படம் ப்ராஜெக்ட் கே.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் கமல் என்கிற ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன. தவிர வெறும் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு, ரூ.150 கோடி சம்பளம் என்றும் தகவல் உலவுகிறது.

இப்போது தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியையும், சோசியல் மீடியாவையும் உலுக்கி வரும் தகவல் இதுதான். ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

 

 

The post என்னது.. வில்லன் கமல்.. சம்பளம் 150 கோடியா? appeared first on Touring Talkies.

]]>