Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vijay – Touring Talkies https://touringtalkies.co Wed, 01 May 2024 03:13:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vijay – Touring Talkies https://touringtalkies.co 32 32 திடீரென விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர்… ஏன் தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Tue, 30 Apr 2024 18:15:23 +0000 https://touringtalkies.co/?p=41864 சென்னையில் உள்ள பிரபலமான கமலா திரையரங்கத்தின் உரிமையாளரான விஷ்ணு கமல் தீவிர விஜய் ரசிகர். திடீரென இவர் கோட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயைச் சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. GOAT படப்பிடிப்பிற்கு இடையே ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய், விஷ்ணு கமலை வரவேற்று அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, ‘கில்லி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி பெற விஷ்ணு கமல் வாழ்த்து […]

The post திடீரென விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர்… ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சென்னையில் உள்ள பிரபலமான கமலா திரையரங்கத்தின் உரிமையாளரான விஷ்ணு கமல் தீவிர விஜய் ரசிகர். திடீரென இவர் கோட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயைச் சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

GOAT படப்பிடிப்பிற்கு இடையே ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய், விஷ்ணு கமலை வரவேற்று அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, ‘கில்லி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி பெற விஷ்ணு கமல் வாழ்த்து தெரிவித்தார்.

‘கில்லி’ திரைப்பட பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பியதற்கு விஷ்ணு கமலுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் எடுத்த புகைப்படத்தில் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்த விஜய், அவர் படம் போட்ட டீசர்ட் அணிந்த விஷ்ணு கமல் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்து உள்ளார்.

The post திடீரென விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர்… ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5/ Tue, 30 Apr 2024 12:57:23 +0000 https://touringtalkies.co/?p=41842 தமிழ் சினிமாவில் தற்போது “ரீமேக்” படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ‘கில்லி’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின. இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ […]

The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தற்போது “ரீமேக்” படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ‘கில்லி’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின.

இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ செய்யப்படவுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது, அவர் நடித்த 2012ஆம் ஆண்டு வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய 2 படங்களும் விரைவில் ‘மறுவெளியீடு’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.

]]>
கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்…. https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8/ Tue, 30 Apr 2024 11:40:07 +0000 https://touringtalkies.co/?p=41798 தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.பல ஆண்டுகளாக நிதிச் சிக்கல்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணிகள், வங்கி கடனுதவி மற்றும் பல நடிகர்களின் நன்கொடைகள் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நடிகர் நெப்போலியன் இந்தப் பணிக்காக ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க, அமைச்சர் உதயநிதி நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக ஒரு கோடி ரூபாய் காசோலையை வழங்கினார். அடுத்து, சங்கத்தின் நலச்செயல் அமைப்பின் […]

The post கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்…. appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.பல ஆண்டுகளாக நிதிச் சிக்கல்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணிகள், வங்கி கடனுதவி மற்றும் பல நடிகர்களின் நன்கொடைகள் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நடிகர் நெப்போலியன் இந்தப் பணிக்காக ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க, அமைச்சர் உதயநிதி நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக ஒரு கோடி ரூபாய் காசோலையை வழங்கினார். அடுத்து, சங்கத்தின் நலச்செயல் அமைப்பின் உறுப்பினரான கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதேபோல, விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடையும், சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கியதாக நடிகர் சங்கம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், 2000-2006 காலப்பகுதியில் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய நெப்போலியன் சங்கக் கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்புநிதி வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

The post கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்…. appeared first on Touring Talkies.

]]>
ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat https://touringtalkies.co/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/ Mon, 29 Apr 2024 13:08:53 +0000 https://touringtalkies.co/?p=41707 விஜய் நடிப்பில் வெளிவர உள்ள 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த், […]

The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் வெளிவர உள்ள 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு, சொன்னதைவிடச் சிறப்பாக ‘தி கோட்’ படத்தை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கே சிறப்பான விளையாட்டுத்தனம், காமெடி உள்ளிட்ட அம்சங்களுடன் ஆக்‌ஷன் காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

எடுத்தவரையிலான காட்சிகளை ரஃப் எடிட்டில் பார்த்த விஜய்க்கு படம் மிகவும் பிடித்துள்ளது. ஆனாலும், படத்தின்மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என விஜய் கூறியுள்ளார். அடக்கி வாசிக்கவும் என படக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.

]]>
ரீ ரிலீஸ் ஆகபோகும் விஜய் மற்றும் கமல்லின் படங்கள் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d/ Sun, 28 Apr 2024 05:44:35 +0000 https://touringtalkies.co/?p=41576 பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே மாறிவரும் நிலையில் பிரபல நடிகர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அல்லது ரிலீஸ் செய்யப்பட்ட அந்த நாளை கொண்டாடும் விதமாக சில படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்து வருவது தற்போது வழக்கமாகிவிட்டது. அதன்படி 20 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி பொதுவாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இல்லாமல் ஒரு வாரம் ஹவுஸ் புல்லாகி மக்களிடம் வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.இதுவரை […]

The post ரீ ரிலீஸ் ஆகபோகும் விஜய் மற்றும் கமல்லின் படங்கள் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… appeared first on Touring Talkies.

]]>
பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே மாறிவரும் நிலையில் பிரபல நடிகர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அல்லது ரிலீஸ் செய்யப்பட்ட அந்த நாளை கொண்டாடும் விதமாக சில படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்து வருவது தற்போது வழக்கமாகிவிட்டது.

அதன்படி 20 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி பொதுவாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இல்லாமல் ஒரு வாரம் ஹவுஸ் புல்லாகி மக்களிடம் வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.இதுவரை கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வசூல் பத்து கோடிக்கும் மேல் தாண்டி போய் கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் கமல் படங்களை கையில் எடுத்து ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம்.விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படமும் மற்றும் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படமும் ரீ ரிலீஸ்க்கு தயாராகி வருகிறதாம்.

இவற்றுள் குஷி படம் வருகின்ற மே மாதத்தில் 19ஆம் தேதியும், கமல் நடித்த இந்தியன் படத்தை வருகின்ற மே 30ஆம் தேதியும் ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்களாம்.அதே சமயம் இவற்றுள் இந்தியன் படத்தை ரீ ரிலீஸ் செய்வதால் இந்தியன் 2 படத்திற்கான மிகப்பெரிய ப்ரோமோஷனாக இருக்கும் லைக்கா நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post ரீ ரிலீஸ் ஆகபோகும் விஜய் மற்றும் கமல்லின் படங்கள் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… appeared first on Touring Talkies.

]]>
காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கில்லி ரியூனியன்…ரசிகர்கள் கொண்டாட்டம்…‌ https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/ Thu, 25 Apr 2024 12:04:46 +0000 https://touringtalkies.co/?p=41400 சினிமாவுலகில் 1999 ஆம் ஆண்டு மலையாள நடிகர் மம்மூட்டியை வைத்து எதிரும் புதிரும் எனற படத்தை இயக்கி அறிமுகமானவர் தான் இயக்குனர் தரணி. அதன் பின்னர் விக்ரமை வைத்து தில் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றார்.தில் வெற்றியை தொடர்ந்து தூள் என்ற‌ ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ்வித்தார் இயக்குனர் தரணி. தொடர் வெற்றிகளை கொடுத்த அடுத்தடுத்து தரணியை‌ மிஸ் செய்ய கூடாது என நினைத்த விஜய் 2004ல் ஆண்டு கில்லி படத்தை இயக்கும் […]

The post காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கில்லி ரியூனியன்…ரசிகர்கள் கொண்டாட்டம்…‌ appeared first on Touring Talkies.

]]>
சினிமாவுலகில் 1999 ஆம் ஆண்டு மலையாள நடிகர் மம்மூட்டியை வைத்து எதிரும் புதிரும் எனற படத்தை இயக்கி அறிமுகமானவர் தான் இயக்குனர் தரணி. அதன் பின்னர் விக்ரமை வைத்து தில் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றார்.தில் வெற்றியை தொடர்ந்து தூள் என்ற‌ ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ்வித்தார் இயக்குனர் தரணி.

தொடர் வெற்றிகளை கொடுத்த அடுத்தடுத்து தரணியை‌ மிஸ் செய்ய கூடாது என நினைத்த விஜய் 2004ல் ஆண்டு கில்லி படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுக்க மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான ஒக்கடு என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக கில்லி படத்தை இயக்குனர் தரணி ரசிகர்ளுக்கு விருந்தாக படைத்தார்.

மவிஜய், திரிஷா நடித்து தரணி இயக்கத்தில் வெளியான கில்லி படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது ரீ ரிலீசான கில்லி திரைப்படம் இதுவரை 18.5 கோடி ரூபாய் வரை வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியான உள்ளன.விரைவில் 20 கோடி ரூபாய் வசூலை கில்லி படம் எட்டும் என கூறப்படுகிறது.

நேற்றைய தினம் இயக்குநர் தரணி நேற்று தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமுடன் இணைந்து‌ சூப்பர் ஹிட்டான கில்லி படத்தின் ரீ ரிலீஸ் கொண்டாடும் விதமாக நடிகர் விஜய்யை கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்த காட்சிகள் வெளியாகின.

அதேசமயம் 20ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் இயக்குநர் தரணிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போது இயக்குனர் தரணிக்கு நடிகர் விஜய் சால்வை போர்த்திய புகைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து இதுதான் 20இயர்ஸ் ரியல் சேலன்ஜ் என வைரல் ஆக்கி வருகின்றனர்.

The post காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கில்லி ரியூனியன்…ரசிகர்கள் கொண்டாட்டம்…‌ appeared first on Touring Talkies.

]]>
தளபதி69 படத்தை இயக்குவது நானா? வெற்றிமாறன் சொன்ன பதில்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf69-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8/ Thu, 25 Apr 2024 10:30:34 +0000 https://touringtalkies.co/?p=41385 வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடந்துவந்தது.இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.இதனால் சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலுக்கு செல்ல முடிவெத்துள்ளார்அதேசமயம் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றநிலையில் அந்தப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக இருக்கிறது. தற்போது நடித்து வரும் கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், […]

The post தளபதி69 படத்தை இயக்குவது நானா? வெற்றிமாறன் சொன்ன பதில்… appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடந்துவந்தது.இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.இதனால் சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலுக்கு செல்ல முடிவெத்துள்ளார்அதேசமயம் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றநிலையில் அந்தப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக இருக்கிறது.

தற்போது நடித்து வரும் கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர்.முதன்முறையாக விஜய் வெங்கட் பிரபு கூட்டணி அமைத்திருப்மதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம் தான்.

இதுமட்டுமின்றி விஜய்யின் தளபதி 69 படத்தை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை இயக்கபோவது வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, ஹெச்.வினோத் ஆகிய நான்கு பேரில் ஒருவர் என சொல்லப்பட்டு வந்தநிலையில் வெற்றிமாறன் தான் நிச்சயம் இயக்குவார் என பேசப்பட்டது ஆனால் கடைசியில் அதிகாரபூர்வமாக சொல்லப்படமால் இருந்தாலும் ஹெச்.வினோத் தான் இப்படத்தை இயக்க போகிறார் என தகவல் வந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் வெற்றிமாறன் கலந்துகொண்ட ஒருநிகழ்ச்சியில் தொகுப்பாளர் வெற்றிமாறனிடம், நீங்கள் தளபதி 69 படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வருகின்றனவே அதைப்பற்றி ஏதாவது கூற முடியுமா என கேட்க அதற்கு வெற்றிமாறனோ, அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்று கூறினார் இதை வைத்து பார்க்கும் போது விஜய் வெற்றிமாறன் கூட்டணி இப்போதைக்கு இணையவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கருத்துப்படுகிறது.

The post தளபதி69 படத்தை இயக்குவது நானா? வெற்றிமாறன் சொன்ன பதில்… appeared first on Touring Talkies.

]]>
நெகிழ்ந்த கில்லி பட நடிகர் நாகேந்திர பிரசாத்… கில்லி படம் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யம்… https://touringtalkies.co/%e0%ae%a8%e0%af%86%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/ Thu, 25 Apr 2024 08:31:21 +0000 https://touringtalkies.co/?p=41351 நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படம் 20 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான் நாகேந்திர பிரசாத் அப்படத்தினை குறித்த அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதாவது, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ‌மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கில்லி திரைப்படத்திற்கு ரசிகர்களாக உள்ளார்கள் என்பதே உண்மை.அதோடு அந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் போது அதில் வரும் வசனங்கள் […]

The post நெகிழ்ந்த கில்லி பட நடிகர் நாகேந்திர பிரசாத்… கில்லி படம் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யம்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படம் 20 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான் நாகேந்திர பிரசாத் அப்படத்தினை குறித்த அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

அதாவது, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ‌மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கில்லி திரைப்படத்திற்கு ரசிகர்களாக உள்ளார்கள் என்பதே உண்மை.அதோடு அந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் போது அதில் வரும் வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை மனப்பாடமாக சொல்லும் பாடும் ரசிகர்கள் ஏராளம்.

இப்ப ரீ ரிலீஸான கில்லி படத்தை தியேட்டரில புதுசா புதுப்படம் ரிலீஸ் ஆன மாதிரி கொண்டாடுறாங்க. நான் போயிருந்த தியேட்டர் பாக்க திருவிழா மாதிரி தான் இருந்துச்சு அவ்வளவு கூட்டம். அந்த படத்தில் நடிச்ச எனக்கே படத்தை 20 வருஷம் கழிச்சு பார்க்கிறப்போ ரொம்ப புதுசா இருந்துச்சு… ஒவ்வொரு ரசிகருக்கும் அப்படி தான் இருந்திருக்கும் நினைக்கிறேன்.

மக்களுக்கு என்ன சொல்லவா வேணும்? 2004 இல் கில்லி படம் ரிலீஸ் ஆனப்போ நான் சென்னையிலேயே இல்லை. அப்போ ரசிகர்களுடைய கொண்டாட்டத்தை பார்க்க முடியவில்லை. எனக்கு அது ஒரு குறை ஆகவே இருந்துச்சுச்சு

இப்போ இருபது வருஷம் கழிச்சு இந்த கில்லி ரீ ரீலீஸால எனக்கு இருந்த குறை காணாம போயிடுச்சு. இப்படி எல்லாம் நடக்கணும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல.எனக்கு சண்டை காட்சிகளில் நடிப்பது பிடிக்கும் என்பதால் எனக்கு சில ஸ்டண்ட் ஷார்ட்ஸ் வச்சாரு இயக்குனர் தரணி சார். அதை நான் பண்றதை பார்த்து விஜய் “பிரசாத் நீ ரொம்ப நல்லா பண்ணுறியேன்னு சொல்லி பாராட்டுனாரு அத நான் மறக்க மாட்டேன்.

அது மட்டும் இல்ல கில்லி படத்துக்காக 7 ஏக்கரில் மகாபலிபுரத்தில் தான் ஷெட் போட்டு இருந்தாங்க. அதில் தான் நாங்க எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தோம்.அந்த நாட்கள் எப்பவுமே இனிமையானவை தான் அதை என்னைக்குமே மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியாக நாகேந்திர பிரசாத் அவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

The post நெகிழ்ந்த கில்லி பட நடிகர் நாகேந்திர பிரசாத்… கில்லி படம் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யம்… appeared first on Touring Talkies.

]]>
வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க சார்…பெரிய ரோஜா மாலையுடன் சென்று விஜய்யை வாழ்த்திய பிரபலம்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/ Thu, 25 Apr 2024 05:52:57 +0000 https://touringtalkies.co/?p=41326 விஜய் நடித்து இயக்குனர் தரணி இயக்கி ப்ளாக் பஸ்டர் திரைப்படமான கில்லி ரீ ரிலீஸாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அப்படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.அப்படத்தை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தை சேர்ந்த சக்திவேலன் தற்போது நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்தியது மட்டுமின்றி மிகப்பெரிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் தந்தையால் வந்தவன் எனவும், எஸ்.ஏ சந்திரசேகர் படத்தில் அறிமுக நாயகனாக […]

The post வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க சார்…பெரிய ரோஜா மாலையுடன் சென்று விஜய்யை வாழ்த்திய பிரபலம்… appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடித்து இயக்குனர் தரணி இயக்கி ப்ளாக் பஸ்டர் திரைப்படமான கில்லி ரீ ரிலீஸாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அப்படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.அப்படத்தை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தை சேர்ந்த சக்திவேலன் தற்போது நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்தியது மட்டுமின்றி மிகப்பெரிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் தந்தையால் வந்தவன் எனவும், எஸ்.ஏ சந்திரசேகர் படத்தில் அறிமுக நாயகனாக தமிழ் சினிமாவிற்குள் வரும் போது இந்த மூஞ்சி எல்லாம் வியாபாரம் ஆகாது என விமர்சித்த தமிழ் சினிமா தற்போது அந்த சினிமா உலகிற்கே தளபதியாக மாறியுள்ள நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்ததை கேட்டு ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது தமிழ் சினிமா.

இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் கில்லி திரைப்படம் ரீ ரீலீஸாகி வசூல் சாதனை செய்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் கோட் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த விநியோகஸ்தர் சக்திவேலன் மிகப்பெரிய ரோஜா மாலையை விஜய்க்கு அணிவித்தார் அதை அன்பாக ஏற்ற விஜய்க்கு கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வரவேற்ப்பையும் சாதனையும் குவித்து வருவதற்காக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இதுதான் சரியான சமயம் மனதில் நினைப்பதை என, ஒரே ஒரு கோரிக்கை சார் என நடிகர் விஜய்யிடம் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி விட வேண்டாம் சார். வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க, வியாபாரத்துக்காக சொல்லல சார், தியேட்டர்ல வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்க என விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ள வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் ‌வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

The post வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க சார்…பெரிய ரோஜா மாலையுடன் சென்று விஜய்யை வாழ்த்திய பிரபலம்… appeared first on Touring Talkies.

]]>
தூள் படத்தில் விட்டு கில்லி படத்தில் பிடித்த விஜய்…தூள் படத்தின் முதல் ஹீரோ இவர் தான்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2/ Mon, 22 Apr 2024 10:24:57 +0000 https://touringtalkies.co/?p=41130 தளபதி விஜய் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.வெங்கட்பிரபு இயக்கத்தில் பல முண்ணனி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது தி கோட் திரைப்படம்.அதேபோல் நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.அப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதைத்தொடர்ந்து சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடிக்க போகிறார். இப்படி இருவரும் பிஸியாக பயணிக்க விக்ரம் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான தூள் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டார் […]

The post தூள் படத்தில் விட்டு கில்லி படத்தில் பிடித்த விஜய்…தூள் படத்தின் முதல் ஹீரோ இவர் தான்… appeared first on Touring Talkies.

]]>
தளபதி விஜய் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.வெங்கட்பிரபு இயக்கத்தில் பல முண்ணனி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது தி கோட் திரைப்படம்.அதேபோல் நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.அப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதைத்தொடர்ந்து சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடிக்க போகிறார்.

இப்படி இருவரும் பிஸியாக பயணிக்க விக்ரம் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான தூள் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டார் விஜய் என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு தெரியுமா?

தமிழில் எதிரும் புதிரும், குருவி, ஒஸ்தி, தில், தூள் மற்றும் கில்லி என சூப்பர் ஹிட்டான படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் தரணி‌.தூள் படத்தின் கதையை இயக்குனர் தரணி விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் ஆனால் விஜய் ஏதோ சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்திருக்கிறார்.இப்படி தவிர்த்த சமயத்தில் தரணி தூள் படத்தை விக்ரம் நடிப்பில் இயக்க அப்படம் ப்ளாக் பஸ்டர் ஆனது.நடிகர் விக்ரமின் மிகசிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது.

இவ்வாறு ப்ளாக் பஸ்டர் ஆன படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டோமே எனவும் இப்பேர்பட்ட சிறந்த இயக்குனர் தரணியை நழுவவிட கூடாது என முடிவெடுத்த விஜய் அவரின் அடுத்த படத்தில் நடித்தார் அப்படி அவர் நடித்து மெகா சூப்பர் ஹிட்டான படம் தான் கில்லி.இப்படம் 20 வருடங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தூள் படத்தில் விட்டு கில்லி படத்தில் பிடித்த விஜய்…தூள் படத்தின் முதல் ஹீரோ இவர் தான்… appeared first on Touring Talkies.

]]>