Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vijay vishwa – Touring Talkies https://touringtalkies.co Tue, 19 Sep 2023 02:09:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vijay vishwa – Touring Talkies https://touringtalkies.co 32 32 காதலனா, நண்பனா?: தவிக்கும் சாக்‌ஷி ‘சாரா’! https://touringtalkies.co/saaraa-movie-pooja-news/ Tue, 19 Sep 2023 02:09:14 +0000 https://touringtalkies.co/?p=36358 சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் “சாரா” பூஜையுடன் இனிதே துவங்கியது. விஸ்வா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் – குருசாமி G தயாரிக்க,  ரஜித் கண்ணா  இயக்கத்தில் விஜய் விஷ்வா – சாக்‌ஷி அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் “சாரா”. இன்று நடந்த இப்படத்தின் பூஜையில்  படக்குழுவினருடன், திரைப்பிரபலங்களுடன்,  இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு வாழ்த்தினார்.நிகழ்வில்  இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, “இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக […]

The post காதலனா, நண்பனா?: தவிக்கும் சாக்‌ஷி ‘சாரா’! appeared first on Touring Talkies.

]]>
சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் “சாரா” பூஜையுடன் இனிதே துவங்கியது.

விஸ்வா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் – குருசாமி G தயாரிக்க,  ரஜித் கண்ணா  இயக்கத்தில் விஜய் விஷ்வா – சாக்‌ஷி அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் “சாரா”.

இன்று நடந்த இப்படத்தின் பூஜையில்  படக்குழுவினருடன், திரைப்பிரபலங்களுடன்,  இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு வாழ்த்தினார்.நிகழ்வில்  இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, “இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன்” என்றார்.
கதாநாயாகன் விஜய்விஷ்வா, “கார்த்திக்ராஜாவின் இசையில் நான் நடிக்கவுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. விஸ்வா டிரீம் வோர்ல்ட் கம்பெனியினர் வழங்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறேன் மேலும் சாக்க்ஷி, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

சாக்‌ஷி, “இந்தப்படம் ஒரு புதுமையான அனுபவம் தரும் படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ரஜித் கண்ணா, “நாயகிக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்படுகிறது.  தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனை காப்பாற்றுவதா,  தனக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நண்பனை காப்பாற்றுவதா  என்பதுதான் அந்த சிக்கல்.

கட்டிடங்கள் உருவாகும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக நல்ல அனுபவம் தரும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

 

The post காதலனா, நண்பனா?: தவிக்கும் சாக்‌ஷி ‘சாரா’! appeared first on Touring Talkies.

]]>
“சின்ன படங்களுக்கு மரியாதையே இல்லே!” நடிகர் விஜய் விஷ்வா ஆதங்கம் https://touringtalkies.co/vijay-vishwa-has-no-respect-for-small-budget-films/ Sat, 18 Feb 2023 14:18:10 +0000 https://touringtalkies.co/?p=30439 நடிகர் விஜய் விஷ்வா தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், “என்னை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநரையோ தயாரிப்பாளரையோ குறை சொல்ல மாட்டேன் . அவர்கள் சொன்ன கதையில் அவர்கள் தயாரிப்புத் திட்டத்தில் நான் நம்பிக்கை வைத்து நடித்தேன்.அவர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகத்தான் செய்தார்கள் என்று தான் சொல்வேன். இயக்குவதில் இயக்குநரும் செலவுகளைச் செய்வதில் தயாரிப்பாளரும் எந்தக் குறைகளையும் வைக்கவில்லை. அந்த வகையில் நான் நடித்து சமீப காலங்களில் கேரள நாட்டிளம் பெண்களுடனே,டூரிங் டாக்கீஸ், […]

The post “சின்ன படங்களுக்கு மரியாதையே இல்லே!” நடிகர் விஜய் விஷ்வா ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் விஷ்வா தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர், “என்னை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநரையோ தயாரிப்பாளரையோ குறை சொல்ல மாட்டேன் . அவர்கள் சொன்ன கதையில் அவர்கள் தயாரிப்புத் திட்டத்தில் நான் நம்பிக்கை வைத்து நடித்தேன்.அவர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகத்தான் செய்தார்கள் என்று தான் சொல்வேன். இயக்குவதில் இயக்குநரும் செலவுகளைச் செய்வதில் தயாரிப்பாளரும் எந்தக் குறைகளையும் வைக்கவில்லை.

அந்த வகையில் நான் நடித்து சமீப காலங்களில் கேரள நாட்டிளம் பெண்களுடனே,டூரிங் டாக்கீஸ், சாயம் என மூன்று படங்கள் வந்திருந்தாலும் அவை மக்களைச் சரியாக சென்றடையவில்லை என்று சொல்ல வேண்டும்.

அதற்குத் திரை உலகில் காட்டப்படும் பெரிய படம், சிறிய படம் என்ற பாகுபாடு ஒரு காரணம் என்பேன்.

சிறிய படங்களுக்கு பின்னாலும் இயக்குநர்கள் , நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று நூறு குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் இருக்கிறது. ஆனால் இது போன்ற படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. கிடைத்தாலும் மாலைக் காட்சிகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. பெரிய படங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள்.

போஸ்டர் ஒட்டுவதில் கூட இந்தப் பாகுபாடு இருக்கிறது. அதிகாலை 2 மணிக்கு எனது போஸ்டர் ஓட்டினால் இரண்டு பத்துக்கு இன்னொரு படத்தின் போஸ்டரை அதன் மேலேயே ஒட்டுகிறார்கள்.

சிறிய படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்கவும், மாலைக் காட்சிகள் கிடைக்கவும் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும். சிறிய படங்கள் ஓடுவதற்கு ஒரு வார காலமாவது அவகாசம் தர வேண்டும்” என்றார் விஜய் விஷ்வா.

The post “சின்ன படங்களுக்கு மரியாதையே இல்லே!” நடிகர் விஜய் விஷ்வா ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் விஷ்வா நடிக்கும் புதிய திரைப்படம் ‘The Book Of Enoch’ https://touringtalkies.co/actor-vijay-vishwas-new-movie-the-book-of-enoch/ Thu, 07 Oct 2021 03:52:53 +0000 https://touringtalkies.co/?p=18556 ‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமான நடிகர் விஜய் விஷ்வா அதற்கடுத்து ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’, ‘மாயநதி’, ‘பிளஸ் ஆர் மைனஸ்’, ‘இரயான்’, ‘அந்த ஒரு நாள்’, ‘நாடகம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் துவங்கியுள்ளது. ‘ஹாண்ட் ஆப் காட்’ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராபின் சாமுவேல் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘தி புக் ஆஃப் ஏனோக்’  என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு பிரவீன் எஸ்.ஏ இசை அமைக்கிறார். […]

The post நடிகர் விஜய் விஷ்வா நடிக்கும் புதிய திரைப்படம் ‘The Book Of Enoch’ appeared first on Touring Talkies.

]]>
‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமான நடிகர் விஜய் விஷ்வா அதற்கடுத்து ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’, ‘மாயநதி’, ‘பிளஸ் ஆர் மைனஸ்’, ‘இரயான்’, ‘அந்த ஒரு நாள்’, ‘நாடகம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் துவங்கியுள்ளது.

‘ஹாண்ட் ஆப் காட்’ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராபின் சாமுவேல் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

‘தி புக் ஆஃப் ஏனோக்’  என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு பிரவீன் எஸ்.ஏ இசை அமைக்கிறார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் வெயிலோன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளியைப் பயன்படுத்துவது, தனிமைப்படுத்திக் கொள்வது.. என்பதெல்லாம் இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக  100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது.

‘இன்ப்ளுயன்சா வைரஸ்’ என்ற அந்தக் கொடிய நோய் கொத்துக் கொத்தாக மனிதர்களை அழித்தது. இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றது.

ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதுதான் இந்த ‘தி புக் ஆஃப் ஏனோக்'(The Book of Enoch) படத்தின் கதை.

இந்த படத்தின் பூஜை நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.  

சென்னை, திருத்தணி, வேலூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

The post நடிகர் விஜய் விஷ்வா நடிக்கும் புதிய திரைப்படம் ‘The Book Of Enoch’ appeared first on Touring Talkies.

]]>