Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vijay park hotel – Touring Talkies https://touringtalkies.co Tue, 20 Oct 2020 06:22:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vijay park hotel – Touring Talkies https://touringtalkies.co 32 32 “நான் சம்பளத்துல கறார் இல்லீங்க…” – நடிகர் யோகிபாபுவின் விளக்கம் https://touringtalkies.co/actor-yogi-babus-speech-in-pei-mama-movie-audio-function/ Tue, 20 Oct 2020 06:20:33 +0000 https://touringtalkies.co/?p=9038 பாக்யா சினிமாஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பனின் தயாரிப்பில் சக்தி சிதம்பரம்  இயக்கியுள்ள படம் ‘பேய் மாமா’. நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய் பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, படத்தின் இசையை […]

The post “நான் சம்பளத்துல கறார் இல்லீங்க…” – நடிகர் யோகிபாபுவின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
பாக்யா சினிமாஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பனின் தயாரிப்பில் சக்தி சிதம்பரம்  இயக்கியுள்ள படம் ‘பேய் மாமா’.

நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய் பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, படத்தின் இசையை வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

விழாவில் படத்தின் நாயகனான நடிகர் யோகிபாபு பேசும்போது, “ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனா நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு. இந்தப் படத்தின் கதை முதலில் வடிவேல் சாருக்காக எழுதியது..’ என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் பயந்து போனேன். வடிவேல் சார் ஒரு ஜீனியஸ். அவர் கேரக்டர் எனக்கு எப்படி சார் செட்டாகும்?’ன்னு கேட்டேன். எனக்கேற்றபடி சில மாறுதல்களை செய்திருப்பதாகச் சொன்னார். பின்னர்தான் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

இயக்குநர் சக்தி சிதம்பரம் சார், டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு அதற்காக எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் இப்போதும், எப்போதும் காமெடியன்தான்.. காமெடியன்தான்.நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது. என் மேனஜரிடம் வேண்டுமானால் கேட்டுக்குங்க. சமீபத்தில்கூட ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் பொண்ணு வந்து, ‘ஒரு கதை பண்ணிருக்கேன். நீங்க பண்ணிக் கொடுக்கணும். ஆனால், என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தால்தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்’ன்னு சொல்லிச்சு. நான் உடனே ‘ப்ரீயாவே நடிச்சித் தர்றேம்மா.. உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்…’ என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்.  இந்தப் படம் வெற்றி அடைய உங்கள் எல்லாரோட ஆதரவும் அன்பும் வேணும்…” என்றார்.

The post “நான் சம்பளத்துல கறார் இல்லீங்க…” – நடிகர் யோகிபாபுவின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>