Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
veerappan – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Nov 2022 19:19:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png veerappan – Touring Talkies https://touringtalkies.co 32 32 “வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை” – பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு https://touringtalkies.co/no-ban-on-veerappan-web-series-bangaloru-court-gives-order/ Tue, 22 Nov 2022 19:17:39 +0000 https://touringtalkies.co/?p=27488 “சந்தன வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை” என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளை திரைப்படமாக்குவதில் வல்லவரான ரமேஷ், சந்தன வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இதில் வீரப்பன் பற்றி விரிவான தகவல்களை சொல்ல முடியவில்லை என்று கருதியதால் வீரப்பன் கதையை வெப் தொடராக இயக்க முடிவு […]

The post “வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை” – பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Touring Talkies.

]]>
சந்தன வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை” என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளை திரைப்படமாக்குவதில் வல்லவரான ரமேஷ், சந்தன வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இதில் வீரப்பன் பற்றி விரிவான தகவல்களை சொல்ல முடியவில்லை என்று கருதியதால் வீரப்பன் கதையை வெப் தொடராக இயக்க முடிவு செய்தார்.

படப்பிடிப்புக்கான பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில் வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்குத் தொடர்ந்தார். பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு கடந்த 15-11-2022 அன்று வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பின் சாரம்சமாக “வீரப்பன் கதையை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் தரப்பில் முத்துலட்சுமிக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீரப்பன் கதையை படமாக்குவதால் வீரப்பன், வீரப்பன் மனைவி, வீரப்பன் மகள் ஆகியோருக்கு எந்த கெட்டப் பெயரும் ஏற்படபோவதில்லை. எனவே வீரப்பன் கதையை படமாக்குவதில் எந்த தடையும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் பேசும்போது, ‘வனயுத்தம்’ படத்தில் வீரப்பன் கதையை முழுமையாக சொல்ல முடியவில்லை என்ற காரணத்தால் வெப் தொடராக இயக்க முடிவெடுத்தேன். தமிழ்நாட்டில் இதை எதிர்த்து முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இனி தமிழ்நாட்டில் வழக்கு தொடர முடியாது என்பதால் கர்நாடகாவில் வழக்கு தொடர்ந்தார். இப்போது அதிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

வீரப்பன் தொடரில் வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். க்ரிமினல் சைக்காலஜி படிக்கும் ஒரு மாணவி, வீரப்பன் பற்றிய ஆய்வில் இறங்கும்போது வீரப்பன் பற்றிய செய்திகளை அவரது கோணத்தில் சொல்வதுபோல கதை நகரும். அந்த மாணவியாக எனது மகள் விஜயதா நடிக்கிறார்.

ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் என்ற கணக்கில் மொத்தம் 20 மணி நேரம் வெப் தொடர் இருக்கும். இதுவரை நூறு நாட்கள் படப்பிடிப்பு நடத்தி 6 எபிசோட் தயாராகவுள்ளது. மொத்த பட்டப்பிடிப்பும் முடிந்து மார்ச் மாதத்திற்கு பிறகு வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர் தயாராகிறது. வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது”. என்றார்.

The post “வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை” – பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Touring Talkies.

]]>
காடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம் https://touringtalkies.co/veerappanin-kajaanaa-movie-preview-news/ Thu, 15 Apr 2021 06:39:15 +0000 https://touringtalkies.co/?p=14366 காடுகளின் பெருமையை நகைச்சுவை கலந்து கூறும் வகையில் உருவாகியிருக்கிறது ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம். ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவே நடித்துள்ளது. ‘ராட்சசி’ படத்தின் இயக்குநரான கௌதம்ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் யாசின் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் பற்றி இயக்குநர் யாசின் பேசுகையில், […]

The post காடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
காடுகளின் பெருமையை நகைச்சுவை கலந்து கூறும் வகையில் உருவாகியிருக்கிறது ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்.

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவே நடித்துள்ளது.

ராட்சசி’ படத்தின் இயக்குநரான கௌதம்ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்கள்.

புதுமுக இயக்குநர் யாசின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் யாசின் பேசுகையில், “காட்டிற்கும், மனிதனுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில்தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது.

இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள்.

அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம்தான் இந்த ‘வீரப்பனின் கஜானா’.

மேலும், தமிழ்நாட்டில் காடு என்றால் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும்தான். ஆகையால், அதை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

காட்டின் காவலனான வீரப்பன் சம்பந்தமான காட்சிகள் படத்தில் முக்கியமானதாக இருக்கும். குரங்கு, புலி, யானை என படம் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகள் முதல் அனைவரும் குதூகளித்து பார்க்கக் கூடிய படமாக இருக்கும்..” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் காட்டுப் பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

மேலும், இந்த வீரப்பனின் கஜானா’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

The post காடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>