Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
udhayanidhi stalin – Touring Talkies https://touringtalkies.co Wed, 24 Apr 2024 10:25:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png udhayanidhi stalin – Touring Talkies https://touringtalkies.co 32 32 கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/ Wed, 24 Apr 2024 10:24:13 +0000 https://touringtalkies.co/?p=41285 தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார். அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் […]

The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ appeared first on Touring Talkies.

]]>

தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார்.

அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் டைட்டிலுக்கும் ஒரு சம்பந்தமே இல்லாம கில்லின்னு பேர் வைக்கிறானுங்க என்றார்.இந்த படத்துக்கு தான் சரியாக உழைப்பாளர் தினம்னு பெயர் வச்சுருக்காங்க என்றார்.

இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் போன்ற நல்ல பெரிய இயக்குநர்களை பெரிய நடிகர்கள் அழைத்து படம் கொடுக்கிறேன்னு சொல்லி காலி பண்ணிடுறாங்க என பேச அந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பரியேறும் பெருமாள் எனும் நல்ல படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.

அதோபோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாரி செல்வராஜ்க்கு வெற்றியை தேடிதந்தது.இச்சமயத்தில் மாரி செல்வராஜை எந்த நடிகர் அழைத்துச் சென்று காலி செய்தார் என ரசிகர்கள் ராஜ் கபூருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ appeared first on Touring Talkies.

]]>
மாமன்னன் படத்துக்கு தடை கோரி வழக்கு! https://touringtalkies.co/case-against-udhayanidhi-stalin-maamannan-movie/ Tue, 20 Jun 2023 03:12:25 +0000 https://touringtalkies.co/?p=33628 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. ஜூன் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் ராம சரவணன் […]

The post மாமன்னன் படத்துக்கு தடை கோரி வழக்கு! appeared first on Touring Talkies.

]]>
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது.

ஜூன் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் ராம சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ராமசரவணன் தயாரிக்கும் ஏஞ்சல் என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. சில நாட்கள் ஷூட்டிங் முடிந்ததும் படம் கிடப்பில் போடப்பட்டது. படத்துக்கு உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் முடித்துவிடுவோம் என முன்பே ராம சரவணன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்”ஏஞ்சல் படத்தை முடிக்க 25 நாட்கள் கால்ஷீட் தந்துவிட்டு மாமன்னன் திரைப்படத்தை ரிலீஸ் செய்யலாம். அல்லது எனக்கு 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லைஎய்ன்றால் மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்” எனக் கூறி அவரது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

The post மாமன்னன் படத்துக்கு தடை கோரி வழக்கு! appeared first on Touring Talkies.

]]>
“அக்கறைகாட்டிய உதயநிதி ஸ்டாலின்” ; வசுந்தரா https://touringtalkies.co/udhayanidhi-stalin-vasundhara-kanne-kalaimane-interview/ Tue, 10 Jan 2023 04:18:28 +0000 https://touringtalkies.co/?p=29360 எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில்  நடித்த வசுந்தரா, தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் தலைக்கூத்தல் ஆகிய  திரைப்படங்கள்  விரைவில் வெளியாக  உள்ளன. இது குறித்து இவர் கூறும்போது, “இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறனின் அடுத்த படம் கண்ணே கலைமானே. இதில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.   இந்த படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான  காட்சிகள் இருக்கின்றன. […]

The post “அக்கறைகாட்டிய உதயநிதி ஸ்டாலின்” ; வசுந்தரா appeared first on Touring Talkies.

]]>
எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில்  நடித்த வசுந்தரா, தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

தற்போது, இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் தலைக்கூத்தல் ஆகிய  திரைப்படங்கள்  விரைவில் வெளியாக  உள்ளன.

இது குறித்து இவர் கூறும்போது, “இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறனின் அடுத்த படம் கண்ணே கலைமானே. இதில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.   இந்த படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான  காட்சிகள் இருக்கின்றன. கண்ணே கலைமானே படத்தில் பார்த்ததுபோலத்தான் எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார்.

 சண்டைக்காட்சிகளின்போது யாருக்கும் அடிபட்டுவிடக் கூடாது என உதயநிதி கவனம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது.  

அதேபோல லென்ஸ் படத்தை இயக்கிய ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) டைரக்ஷனில் தற்போது தலைக்கூத்தல் என்கிற படத்தில் நடித்துள்ளேன்.

சில கிராமங்களில் வயதான உடல்நலம் பாதிக்கப்பட்ட பெரியவர்களை தலைக்கூத்தல் என்கிற முறையில் நடத்தும் நடைமுறை உள்ளது.   இதன் மூலம் அவர்கள் வலி இல்லாமல் மரணிப்பார்களாம். அதை மையப்படுத்திதான் இப்படம் உருவாகி உள்ளது.

இதுதவிர லட்சுமி நாராயணன் என்பவர் இயக்கத்தில் திரில்லர் ஜானரில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன்” என்கிறார் வசுந்தரா.

The post “அக்கறைகாட்டிய உதயநிதி ஸ்டாலின்” ; வசுந்தரா appeared first on Touring Talkies.

]]>
“மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு https://touringtalkies.co/mamannan-film-is-my-last-film-minister-udayanidhis-announcement/ Wed, 14 Dec 2022 11:04:32 +0000 https://touringtalkies.co/?p=28587 நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன்’ படமே எனது கடைசி படம். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்றைய சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள […]

The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன் படமே எனது கடைசி படம். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்றைய சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை நடைபெற்றது. உதயநிதிக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‛‛தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்றுவதே எனது லட்சியம். என் மீது வரும் விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமான என்னுடைய செயல்களால் மட்டுமே பதில் சொல்லுவேன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள மாமன்னன்’ படமே எனது கடைசி திரைப்படம். இனி படங்களில் நடிக்க மாட்டேன். கமல் ஸார் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். அவரிடமும் அதை தெரிவித்துவிட்டேன். அவரும் ஏற்றுக் கொண்டார்…” என்றார் உதயநிதி.

The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kalaga-thalaivan-movie-review/ Sat, 19 Nov 2022 01:05:35 +0000 https://touringtalkies.co/?p=27265 கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?.. வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது. இன்னொரு புறம் […]

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?..

வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது.

இன்னொரு புறம் வஜ்ரா கம்பெனியின் பல சீக்ரெட் விசயங்களை சிலர் வெளியில் போட்டி கம்பெனிக்கு விற்கிறார்கள் என்ற விசயம் வஜ்ரா மேனேஜ்மெண்ட்க்கு தெரிய வருகிறது. அவர்கள் மெகா வில்லன் ஆரவ்விடம் கம்பெனி ரகசியங்களை திருடுபவர்களைப் பிடிக்கச் சொல்கிறார்கள்.

ஆரவ் தனது கொடூரமான விசாரணைகளை நடத்துகிறார். அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் பலரையும் ரத்தம் தெறிக்க தெறிக்க விசாரிக்கிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் கலையரசன் மாட்டுகிறார். அடுத்ததாக அதில் மாட்ட இருப்பவர் உதய்நிதி ஸ்டாலின் என்ற சூழல் வருகிறது. அச்சூழலை உதய்ணா எப்படிச் சமாளித்தார்? வஜ்ரா கம்பெனியின் ரகசியங்கள் யாவை? அதை வெளி கம்பெனிக்கு விற்க வேண்டிய காரணம் என்ன? என பல கேள்விகளுக்குப் படம் பதிலளிக்கிறது

அலட்டிக் கொள்ளாத அமைதியான நடிப்பால் உதயநிதி ஸ்டாலின் ஈர்க்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் ஆச்சர்யப்படுத்தியது நடிகர் ஆரவ்வின் நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முகபாவங்களும் உடல்மொழியும் நல்ல வில்லனுக்கான சமிக்‌ஞயை காட்டுகிறது. வாழ்த்துகள் ராசா. அடுத்ததாக நிதி அகர்வால். காதல் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் இரண்டிலுமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். கலையரசனுக்கு பெரிதாக வெளி இல்லாவிட்டாலும் கிடைத்திருக்கும் சிறு வாய்ப்பையும் சரியாகவே பயன்படுத்தியுள்ளார்

இப்படத்திற்கு இசை அமைத்து ஒரு ரீ.என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களும் கேட்கும் வகையில் இருக்கிறது. முதலில் ஒரு ரீலுக்கு மட்டும் நிறைய வாசித்துத் தள்ளிவிட்டார். காதெங்கும் ஒரே சவுண்ட்ஸ். ஒளிப்பதிவில் இப்படம் கூடுதல் அழகோடு மிளிர்கிறது. திருச்சி ரெயில்நிலைய காட்சிகளை மிக அழகாக எடுத்திருக்கிறார் கேமராமேன். படத்தில் அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸ் தீப்பொறி பறக்கும் திக் திக் நிமிடங்கள். அந்த சீக்வென்ஸ் மற்ற எல்லாவற்றையும் விட நன்றாக வொர்க்காகியுள்ளது. எடிட்டர் பின் பாதியில் கொஞ்சம் கத்தரியைப் போட்டிருக்கலாம்

வந்த கதையோ,நொந்த கதையோ எந்த கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான திரைக்கதையாக்கினால் படம் பக்கா மெட்டிரியல் ஆகிவிடும். அந்தத் திரைக்கதை வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாக கைவந்துள்ளது. காதல் காட்சிகள் மட்டும் படத்தின் வேகத்திற்கு கொஞ்சம் தடை போடுகிறது. அவற்றை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம்.

ஆனாலும் இந்த ‘கலகத் தலைவன்’ உலகப் லிட்டிக்ஸ் பேசி அழகுத் தலைவனாக மிளிர்கிறான். மிகக் குறைவான குறைகளே படத்தில் இருப்பதால் நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

RATING : 4 / 5

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் https://touringtalkies.co/chief-minister-m-k-stalin-greeted-the-movie-kalagath-thalaivan/ Thu, 17 Nov 2022 18:04:59 +0000 https://touringtalkies.co/?p=27212 ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை படக் குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  ‘கலகத் தலைவன்’ படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி […]

The post ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை படக் குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார்.

படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  ‘கலகத் தலைவன்’ படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நாளை நவம்பர் 18-ம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’.

The post ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
“ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் https://touringtalkies.co/udhayanidhi-said-he-didnt-like-heroines-or-whoever-they-were-shown-director-mizhy-thirumeni-broke-the-secret/ Thu, 10 Nov 2022 17:56:04 +0000 https://touringtalkies.co/?p=26933 இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதியும், நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”2019-ம் ஆண்டே இந்த ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன். ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார்” என்றார் […]

The post “ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதியும், நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”2019-ம் ஆண்டே இந்த ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன். ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார்” என்றார் உதயநிதி.

அப்போது இடைமறித்த இயக்குநர் மகிழ் திருமேனி.. “இந்தப் படம் ஆரம்பித்த உடனேயே இரண்டு முறை கொரோனா லாக் டவுன் வந்துவிட்டது. அதன் பின்னர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுவிட்டார். அதன் பிறகு எனக்கு இரண்டு முறை கொரோனா வந்தது. மேலும் எந்த ஹீரோயினையும் பிடிக்கவில்லை என்றார் உதயநிதி. அதனால் ஹீரோயினியைும் இன்னொரு பக்கம் தேடிக் கொண்டே இருந்தேன். இது போன்ற காரணங்களால் இந்தப் படம் தள்ளிக் கொண்டு போனது.” என்றார்.

அதன் பின்னர் மீண்டும் உதயநிதி பேசும்போது, இயக்குநர் மகிழ் திருமேனி 90 நாட்கள் படத்தை எடுத்தார் என்றால்.. மாரி செல்வராஜ் 120 நாட்கள் மேலாக ‘மாமன்னன்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் என்னை வச்சி செய்கின்றனர்.

மகிழ் இயக்கிய ‘தடம்’ படத்திலேயே முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி நடிக்க விடவில்லை. இங்கு வருவோர் எல்லாரும் அவரைப் பார்த்துதான் வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்தான் அனைவருக்கும் சம்பளம் நிர்ணயம் செய்கிறார். அந்தப் பாசம்தான் எல்லாருக்கும்…” என்றார் உதயநிதி.

The post “ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் https://touringtalkies.co/kamal-and-manirathnam-rejoins-a-new-movie/ Sun, 06 Nov 2022 14:36:20 +0000 https://touringtalkies.co/?p=26676 நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி. நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. […]

The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி.

நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. இப்போது 35 ஆண்டு காலம் கழித்து இருவரும் இந்தப் படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “35 வருடங்களுக்கு முன், மணிரத்னத்துடன் நாயகன் படத்தில் பணிபுரியத் தொடங்கும்போது, இ​தே அளவு உற்சாகமாக இருந்தேன். தற்போதும் அதே மனநிலை என்னுடன் ஒத்துழைப்பது ஊக்கமளிக்கிறது. இந்த தூண்டுதலில் திரு.ரஹ்மானும் அடங்குவர். திரு.உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுக்கவிருக்கும் இந்தப் படத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து மணிரத்னம் பேசும்போது, “கமல் ஸாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..” என்றார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விக்ரம் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன்-2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனின் 234-வது படத்தை வழங்குவதற்காக கமல் சாருடன் இணைவது எனக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. சிறப்பான கதையில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கமல் சார் மற்றும் மணி சார் இருவருமே உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்கள், இந்த இரண்டு சாதனையாளர்களின் தீவிர ரசிகனாகவும் நான் இருந்து வருகிறேன். இந்த சிறந்த வாய்ப்புக்கு கமல் ஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.”

இந்தப் படம் அடுத்தாண்டு மத்தியில் துவங்கி 2024-ம் ஆண்டு வெளியாகுமாம்.

The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.

]]>
உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது https://touringtalkies.co/maamannan-movie-shooing-was-wrapped/ Wed, 14 Sep 2022 18:04:42 +0000 https://touringtalkies.co/?p=24517 உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவு பெற்றது. […]

The post உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது appeared first on Touring Talkies.

]]>
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவு பெற்றது. படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை கேக் வெட்டி கொண்டாடினர்.

The post உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது appeared first on Touring Talkies.

]]>
“பான் இந்தியா படங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே அமீர்கான் அறிமுகப்படுத்தினார்” – உதயநிதி பேச்சு https://touringtalkies.co/aamir-khan-launched-pan-india-films-20-years-ago-udhayanidhi-talk/ Mon, 08 Aug 2022 06:00:54 +0000 https://touringtalkies.co/?p=23654 ”நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் […]

The post “பான் இந்தியா படங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே அமீர்கான் அறிமுகப்படுத்தினார்” – உதயநிதி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
”நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’.

அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் அமீர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நாக சைதன்யா, மோனாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். பாரஸ்ட் கெம்ப்’ எனும் ஆங்கில படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார்.

இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரமாண்டமாக வெளியிடுகிறது.

இதையொட்டி நேற்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான அமீர்கான், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன், நடிகை மோனாசிங், படத்தினை தயாரித்திருக்கும் வயாகாம் 18 எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ” நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு அமீர்கானின் ‘ரங்கீலா’ படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன்.

தற்போது மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பல முறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

இத்தருணத்தில்தான் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த லால் சிங் சத்தா’ படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம்.

திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ‘லால் சிங் சத்தா’ படத்தினை நீங்கள்  வெளியிட வேண்டும் என கோரிக்கை  வைத்தார். உடனே சரி” என்று ஒப்புக் கொண்டேன்.

அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம். முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததைவிட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.

பான் இந்தியா என்ற வார்த்தையை தற்போதுதான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை  அறிமுகப்படுத்தி,  வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்.” என்றார்.

The post “பான் இந்தியா படங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே அமீர்கான் அறிமுகப்படுத்தினார்” – உதயநிதி பேச்சு appeared first on Touring Talkies.

]]>