Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
TRajendar – Touring Talkies https://touringtalkies.co Fri, 30 Oct 2020 09:08:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png TRajendar – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ராஜினாமா கடிதத்தைத் தயார் நிலையி்ல் வைத்திருக்கிறேன்…” – டி.ராஜேந்தர் பேச்சு https://touringtalkies.co/tfpa-election-2020-t-rajendar-team-press-meet-news/ Fri, 30 Oct 2020 09:07:37 +0000 https://touringtalkies.co/?p=9500 அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். செயலாளர்கள் பதவிக்கு மன்னன், என்.சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் போட்டியிடுகின்றனர்.  பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.முருகன், பி.டி.செல்வக்குமார் இருவரும் போட்டியிடுகின்றனர். மேலும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, ஏ.எம்.ரத்னம், என்.பிரபாகரன், அசோக் சாம்ராஜ், மனோஜ்குமார், மனோபாலா, ஷக்தி சிதம்பரம், எம்.திருமலை, சரவணன், […]

The post “ராஜினாமா கடிதத்தைத் தயார் நிலையி்ல் வைத்திருக்கிறேன்…” – டி.ராஜேந்தர் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். செயலாளர்கள் பதவிக்கு மன்னன், என்.சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் போட்டியிடுகின்றனர்.  பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.முருகன், பி.டி.செல்வக்குமார் இருவரும் போட்டியிடுகின்றனர்.

மேலும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, ஏ.எம்.ரத்னம், என்.பிரபாகரன், அசோக் சாம்ராஜ், மனோஜ்குமார், மனோபாலா, ஷக்தி சிதம்பரம், எம்.திருமலை, சரவணன், டி.டி.ராஜா, ரிஷிராஜ், ஸ்ரீதர், செந்தில் குமார், ஜான் மேக்ஸ், பாபு கணேஷ், கே.ஜி.பாண்டியன், இசக்கிராஜா, மதுரை செல்வம், ராஜா, பிரபாதிஷ் சாம்ஸ், திருக்கடல் உதயம், ஆர்.சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி.ராஜேந்தர் இந்தக் கூட்டத்தில் பேசும்போது, “நான் தற்போது தலைவராக உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அனுமதியுடன்தான் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இதற்காக எங்களது சங்கத்தின் சட்டத் திட்டத்தில் தேவையான திருத்தத்தைச் செய்து அதற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழுவிலும் ஒப்புதல் பெற்றுவிட்டோம். பொதுக்குழுவில் மட்டும்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

100 பேருக்கும் மேல் கூட்டமாகக் கூடக் கூடாது என்று தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக உத்தரவிட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை முடிந்தவுடன் எங்களது விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டப்பட்டு எங்களுடைய சட்டத் திருத்தத்திற்கு நாங்கள் ஒப்புதல் பெற்றுவிடுவோம்.

அப்படி எங்களுடைய பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லையெனில் நாங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பதவியில் இருந்து விலகிவிடுவோம். அதற்கான ராஜினாமா கடிதத்தைக்கூட தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

நாங்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால், சிறு பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடுவோம். திரையரங்குகளில் வசூலிக்கப்படும் உள்ளாட்சி கேளிக்கை வரியை நீக்க முதல்வருக்கும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய பிரதமருக்கும் கோரிக்கை வைப்போம். சிறு தயாரிப்பாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்போம். வி.பி.எப்., கட்டணத்தை ரத்து செய்யப் போராடுவோம்.

தமிழ்த் திரையுலகின் மூத்தத் தயாரிப்பாளர்களான எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு, முரளிதரன், ஆர்.பி.சவுத்ரி, கமீலா நாசர், ஏ.எல்.அழகப்பன், கேயார் போன்றோரை இணைத்து சங்கத்தில் ஒரு உயர்மட்ட ஆலோசனை குழுவை அமைப்போம். அவர்களது ஆலோசனையின்படி சங்கத்தை நடத்துவோம்.

முந்தைய நிர்வாகத்தினர் முறைகேடாக செலவு செய்திருந்த சங்கப் பணத்தைத் திரும்பப் பெறுவோம். தயாரிப்பாளர்களின் நலனுக்காக பேச வேண்டிய நேரத்தில்.. பேச வேண்டிய இடத்தில்.. பேச வேண்டிய விதத்தில் பேசுவோம்…” என்றார்.

The post “ராஜினாமா கடிதத்தைத் தயார் நிலையி்ல் வைத்திருக்கிறேன்…” – டி.ராஜேந்தர் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! https://touringtalkies.co/tamil-film-producers-council-election-2020-news/ Sat, 24 Oct 2020 11:19:52 +0000 https://touringtalkies.co/?p=9225 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.

ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.

ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
“கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் காப்பாற்றத்தான் நான் போட்டியிடுகிறேன்….” – டி.ராஜேந்தர் விளக்கம் https://touringtalkies.co/producer-t-rajendar-interview-about-tfpc-election-2020/ Fri, 23 Oct 2020 08:16:30 +0000 https://touringtalkies.co/?p=9157 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 தேர்தலில் போட்டியிட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணியினர் இன்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். டி,ராஜேந்தர் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு மன்னன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு பி.டி.செல்வக்குமாரும், துணைச் செயலாளர் பதவிக்கு போஸும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மனோபாலா, சரவணன், மனோஜ்குமார், ஆர்.வி.உதயக்குமார், ஷக்தி சிதம்பரம், திருமலை, […]

The post “கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் காப்பாற்றத்தான் நான் போட்டியிடுகிறேன்….” – டி.ராஜேந்தர் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 தேர்தலில் போட்டியிட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணியினர் இன்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

டி,ராஜேந்தர் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு மன்னன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார்.

மேலும் துணைத் தலைவர் பதவிக்கு பி.டி.செல்வக்குமாரும், துணைச் செயலாளர் பதவிக்கு போஸும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மனோபாலா, சரவணன், மனோஜ்குமார், ஆர்.வி.உதயக்குமார், ஷக்தி சிதம்பரம், திருமலை, கே.ஜி.பாண்டியன், செல்வம், அசோக் சாம்ராஜ், ஷாம், ஸ்ரீதர், வை.ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நாற்காலியில் அமர்வதற்காக என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

இந்தத் தலைவர் பதவியில் உட்காரத் தகுதியுள்ள ஒரு நபராக, தயாரிப்பாளராக, போராளியாக, பேச்சாளனாக, விஷயம் அறிந்தவனாக.. எந்தச் சபையிலும் பேசக் கூடியவனாக.. சட்டத்தோடு சொல்ல வேண்டும்.. அடக்கத்தோடு சொல்ல வேண்டும்.. உரக்கச் சொல்ல வேண்டும்.. ஒரு தந்தையாக சொல்ல வேண்டும் என்ற தகுதியுடைய ஒருவர் வேண்டும் என்பதால் இவர்களெல்லாம் சேர்ந்து என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இருக்கின்ற நிதி மிகவும் குறைவாக இருப்பதால் அதை வெளியில் சொல்வதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை. சங்கம் இப்போது கோமா ஸ்டேஜில் உள்ளது.

இந்தக் கோமா ஸ்டேஜில் இருக்கும் சங்கத்தை சினிமா ஸ்டேஜாக மாற்றவும், அடிமட்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தி செயல்பட வைக்கவும்தான் எனது அணி நிச்சயமாகச் செயல்படும்.

இந்தச் சங்கத்தில் இருந்து சிலர் விலகி வேறு சங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அது நடப்பு சங்கம் என்பதால் எங்களுடைய சங்கத்தைக் கிடப்பில் போட முடியாது. இந்தச் சங்கத்தைத் தூக்கி நிறுத்தி துடிப்போடு செயல்பட வைப்போம் என்பதற்காகத்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

இப்போதைய கொரோனா காலத்திற்குப் பின்பு தமிழ்த் திரைப்பட துறையில் பல மாற்றங்கள் ஆகியிருக்கிறது. பல கோரிக்கைள் எழுந்திருக்கின்றன. தியேட்டர்களில் படத்தை வெளியிட கியூப் நிறுவனத்திற்குக் கட்ட வேண்டிய திரையிடல் கட்டணத்தை நாங்கள் கட்ட மாட்டோம் என்று முன்பேயே தயாரிப்பாளர்கள் சங்கம் சொல்லியிருக்கிறது. புதிதாகத் துவக்கப்பட்ட  தயாரிப்பாளர்கள் சங்கமும் சொல்லியிருக்கிறது. எங்களுடைய விநியோகஸ்தர்கள் சங்கமும் இதையேதான் சொல்கிறது.

இதனால் சில கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்து முன் வைத்து போராட வேண்டியிருப்பதால்.. இரண்டு மாடுகளும் ஒன்று போல இருந்தால்தான் வண்டி ஓடும் என்பதால்தான் நான் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தாலும் எங்களுடைய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி சட்ட விதிகளை திருத்தி அனுமதி பெற்று இந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் போட்டியிடுகின்றேன். நாங்கள் நிச்சயமாக ஜெயிப்போம். நல்ல நிர்வாகத்தைத் தருவோம்..” என்றார்.

The post “கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் காப்பாற்றத்தான் நான் போட்டியிடுகிறேன்….” – டி.ராஜேந்தர் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>