Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
thirupathy brothers – Touring Talkies https://touringtalkies.co Sun, 01 Nov 2020 11:30:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png thirupathy brothers – Touring Talkies https://touringtalkies.co 32 32 பாலாஜி சக்திவேலின் ‘ரா ரா ராஜசேகர்’ படம் என்னதான் ஆச்சு..? https://touringtalkies.co/whats-the-position-of-balaji-sakthivels-ra-ra-rajasekhar-movie/ Sun, 01 Nov 2020 11:30:18 +0000 https://touringtalkies.co/?p=9570 ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ போன்ற அழகான திரைப்படங்களை தந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் என்ன ஆனார்..? அவரது இயக்கத்தில் உருவாகி வந்த ‘ரா ரா ராஜசேகர்’ படம் என்ன ஆச்சு..? என்ற கேள்வி தமிழ்த் திரை ரசிகர்களிடையே பெரும் கேள்வியாக உள்ளது. ‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் 2014-ம் ஆண்டு ‘ரா ரா ராஜசேகர்’ படத்தைத் துவக்கினார். இந்தப் படத்தைத் தயாரித்தது இயக்குநர் லிங்குசாமியின் […]

The post பாலாஜி சக்திவேலின் ‘ரா ரா ராஜசேகர்’ படம் என்னதான் ஆச்சு..? appeared first on Touring Talkies.

]]>
‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ போன்ற அழகான திரைப்படங்களை தந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் என்ன ஆனார்..? அவரது இயக்கத்தில் உருவாகி வந்த ‘ரா ரா ராஜசேகர்’ படம் என்ன ஆச்சு..? என்ற கேள்வி தமிழ்த் திரை ரசிகர்களிடையே பெரும் கேள்வியாக உள்ளது.

‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் 2014-ம் ஆண்டு ‘ரா ரா ராஜசேகர்’ படத்தைத் துவக்கினார்.

இந்தப் படத்தைத் தயாரித்தது இயக்குநர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம்.

இந்தப் படத்தில் லிங்குசாமியின் சகோதரியின் மகனான விஜய் முருகன் நாயகனாக நடித்தார். ஸ்ருதி ஹரிஹரன் நாயகியாக அறிமுகமானார். சுபிக்சாவும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல ராமமூர்த்தியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘காதல்’ படம் போலவே இத்திரைப்படமும் காதலைப் பிரிக்கும் ஜாதிய வெறியைப் பற்றிப் பேசுகிறது. காதல் ஜோடிகளின் கனவு ஜாதி வெறியால் உருவாகும் ஆணவக் கொலையினால் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அனைத்து ஜாதிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளும்வகையில் நமக்குள்ளேயே இருக்கும் ஒரு மனித நேய குணத்தை அறிவுறுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். காதல்’ படத்தில் தண்டபாணி வில்லன் என்றால், இந்தப் படத்தில் வேல ராமமூர்த்தி வில்லன்.

2014-ல் துவங்கி கிட்டத்தட்ட 6 ஆண்டு காலம் பயணித்தும் இத்திரைப்படம் இதுவரைக்கும் திரைக்கு வராதது காரணம் என்னவென்றால் படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதே காலக்கட்டத்தில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து, அவைகளின் பணப் பிரச்சினையில் சிக்கி.. பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதால் இந்தப் படமும் அந்தச் சிக்கலில் சிக்கிக் கொண்டது.

இப்போது இந்தப் படத்திற்கு இன்னமும் 4 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறதாம். “அதை முடித்துவிட்டால் படம் முடிந்துவிடும். நிச்சயமாக அடுத்த வருடம் படத்தை எதிர்பார்க்கலாம்…” என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி.

இந்த ரா ரா ராஜசேகர்’ படம் தவிர, ‘யார் இவர்கள்’ என்ற படத்தையும் பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிறார். அத்திரைப்படமும் முழுமையாகத் தயாராகி ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படமும் 2021-ம் ஆண்டில் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பாலாஜி சக்திவேலின் ‘ரா ரா ராஜசேகர்’ படம் என்னதான் ஆச்சு..? appeared first on Touring Talkies.

]]>