Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
theatre – Touring Talkies https://touringtalkies.co Sat, 14 Oct 2023 05:41:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png theatre – Touring Talkies https://touringtalkies.co 32 32 லியோ: விஜய் ரசிகர்கள் சோகம்! https://touringtalkies.co/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95/ Sat, 14 Oct 2023 05:41:52 +0000 https://touringtalkies.co/?p=37126 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தயாரித்துள்ள, 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், 19ம் தேதி அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்தது. ஆனால், ‘இந்த நாட்களில்  காலை ஏழு மணி முதல் இரவு 1.30 மணி ஐந்து காட்சிகளை திரையிடலாம்’ என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் ரசிகர்களின் பாதுகாப்புக்கு திரையரங்க நிர்வாகம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் […]

The post லியோ: விஜய் ரசிகர்கள் சோகம்! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தயாரித்துள்ள, 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், 19ம் தேதி அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்தது.

ஆனால், ‘இந்த நாட்களில்  காலை ஏழு மணி முதல் இரவு 1.30 மணி ஐந்து காட்சிகளை திரையிடலாம்’ என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் ரசிகர்களின் பாதுகாப்புக்கு திரையரங்க நிர்வாகம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. கூடுதலான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதைத் தடுக்க, தனி குழுவையும் அமைத்து உள்ளது.

அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

The post லியோ: விஜய் ரசிகர்கள் சோகம்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி ரசிகர்கள் தாக்குதல்!  இளைஞர் படுகாயம் https://touringtalkies.co/jailer-fans-fight-in-theatre/ Fri, 11 Aug 2023 01:42:27 +0000 https://touringtalkies.co/?p=35203 ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் ஒரு திரையரங்கில், ஜெயிலர் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில்,  படத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து கோஷம் எழுப்பினர். படம் முடிந்து வெளியில் வந்த  அவர்களை ரஜினி ரசிகர்கள் சிலர்  ஒன்றாகச் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். அதில் ஒரு இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காட்சி சமூகவலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

The post ரஜினி ரசிகர்கள் தாக்குதல்!  இளைஞர் படுகாயம் appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் ஒரு திரையரங்கில், ஜெயிலர் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில்,  படத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

படம் முடிந்து வெளியில் வந்த  அவர்களை ரஜினி ரசிகர்கள் சிலர்  ஒன்றாகச் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். அதில் ஒரு இளைஞருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த காட்சி சமூகவலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ரஜினி ரசிகர்கள் தாக்குதல்!  இளைஞர் படுகாயம் appeared first on Touring Talkies.

]]>
‘ஜெயிலர்’ படத்தை எதிர்த்து ‘ஜெயிலர்’ பட இயக்குநர் போராட்டம் https://touringtalkies.co/jailer-director-protest-to-save-malayalam-cinema/ Thu, 03 Aug 2023 04:16:02 +0000 https://touringtalkies.co/?p=34986 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் சுனில் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இந்தப் படமும் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதனால் மலையாளத்தில் மட்டுமாவது ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை மாற்றுமாறு […]

The post ‘ஜெயிலர்’ படத்தை எதிர்த்து ‘ஜெயிலர்’ பட இயக்குநர் போராட்டம் appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் சுனில் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இந்தப் படமும் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதனால் மலையாளத்தில் மட்டுமாவது ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை மாற்றுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சக்கீர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்துக்குக் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாள ‘ஜெயிலர்’ படத்துக்கு 75 திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லை. இதனால் இதன் இயக்குநர் சக்கீர் மடத்தில், கேரள பிலிம் சேம்பர் அலுவலக வாயிலில் தனியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். கையில், ‘மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை வைத்திருந்தார். தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால், மலையாள சினிமா மூச்சுத் திணறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ‘ஜெயிலர்’ படத்தை எதிர்த்து ‘ஜெயிலர்’ பட இயக்குநர் போராட்டம் appeared first on Touring Talkies.

]]>
25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ‘வேட்டையாடு விளையாடு’ ! https://touringtalkies.co/kamal-haasan-starrer-vettaiyadu-villaiyadu-rerelease-got-good-response-in-theatre/ Tue, 18 Jul 2023 05:14:52 +0000 https://touringtalkies.co/?p=34456 2006-ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் கமலின் திரைவாழ்விலும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன. தமிழ் சினிமாவின் மிக முக்கிய […]

The post 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ‘வேட்டையாடு விளையாடு’ ! appeared first on Touring Talkies.

]]>
2006-ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் கமலின் திரைவாழ்விலும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன. தமிழ் சினிமாவின் மிக முக்கிய க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக இப்படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டபோதும் அந்தப் படங்களைத் தாண்டிய வரவேற்பு ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கு கிடைத்து வருகிறது. ‘4k print’-ல் 7.1 ஆடியோவுடன் மெருகேற்றப்பட்ட காட்சி அனுபவத்தை ரசிகர்கள் வார விடுமுறை நாட்களில் கொண்டாடி வருகின்றனர். 24 நாட்களை கடந்தும் படம் இன்றும் 10-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. மொத்தமாக படம் ரூ.1 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ‘வேட்டையாடு விளையாடு’ ! appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்? https://touringtalkies.co/maaveeran-and-thandatti-padmini-theatre-ott-movie-details-thease-week-release/ Fri, 14 Jul 2023 01:42:14 +0000 https://touringtalkies.co/?p=34348 இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் படங்கள்… திரையரங்க வெளியீடு: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன், ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபா ப்ளாக் ஷீப்’ இதர மொழி படங்களைப் பொறுத்தவரை, ஆனந்த் தேவரகொண்டாவின் தெலுங்குபடமான ‘பேபி’ மற்றும் குஞ்சாக்கோ போபனின் ‘பத்மினி’ மலையாள படம் . ஓடிடி ரிலீஸ்: பசுபதியின் ‘தண்டட்டி’ திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், ஸ்ரீகாந்த் ஜி […]

The post இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்? appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் படங்கள்…

திரையரங்க வெளியீடு: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன், ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபா ப்ளாக் ஷீப்’

இதர மொழி படங்களைப் பொறுத்தவரை, ஆனந்த் தேவரகொண்டாவின் தெலுங்குபடமான ‘பேபி’ மற்றும் குஞ்சாக்கோ போபனின் ‘பத்மினி’ மலையாள படம் .

ஓடிடி ரிலீஸ்: பசுபதியின் ‘தண்டட்டி’ திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், ஸ்ரீகாந்த் ஜி ரெட்டியின் ‘மென் டூ’ ஆஹா ஓடிடியிலும், அந்தோணி ராமோஸின் ‘ட்ரான்ஸ்ஃபார்மெர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்’ அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் இன்று வெளியாகின்றன.

இணையதள தொடர்: கஜோல் நடித்துள்ள ‘தி ட்ரையல்’  வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகிறது

The post இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்? appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! https://touringtalkies.co/list-of-theatre-and-ott-releases-this-week/ Wed, 17 May 2023 05:10:04 +0000 https://touringtalkies.co/?p=32542 பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2. சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் […]

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின.

தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.

இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2.

சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படமும் இந்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்காக FAST X திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வின் டீசல், ஜஸ்டின் லின், ஜேசன் மோமோ, அலன் ரிச்சசன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் ஆந்தாலஜி தொடராக உருவாகியுள்ள ‘மாடர்ன் லவ் சென்னை’ நாளை முதல் (மே 18) அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குநர்கள் இந்த தொடரை இயக்கியுள்ளனர். இளையராஜா, யுவன், ஜிவி பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இந்த தொடருக்கு இசையமைத்துள்ளனர்.

மேலும், மஹத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வரும் 19ம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடியில் ரிலீஸாகிறது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாள் பத்மநாபன்  இயக்கியுள்ளார்.

இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் பூக்களம் படம் டிஸ்னி பிளஸ் தளத்திலும், அயல்வாசி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்துள்ள சென்டிமீட்டர் டென்ட்கொட்டா ஓடிடியிலும் வெளியாகிறது.

தெலுங்கில் விருபாக்ஷா திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ஏஜெண்ட் படம் சோனி லிவ் ஓடிடியிலும் வெளியாகிறது. அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிஸ்ஸிங், தி சன், மியூட்டட் வெப் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதுதவிர இன்னும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>