Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
TFPC Union – Touring Talkies https://touringtalkies.co Wed, 04 Nov 2020 11:15:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png TFPC Union – Touring Talkies https://touringtalkies.co 32 32 தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? https://touringtalkies.co/new-tamil-movies-will-release-on-coming-deepavali-day/ Wed, 04 Nov 2020 11:14:42 +0000 https://touringtalkies.co/?p=9690 ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். “தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட […]

The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.

]]>
‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

“தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும்’ “வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்களும் கட்ட மாட்டார்கள்…” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

கியூப் நிறுவனமோ தற்போது தாங்கள் வாங்கி வரும் கட்டணத்தை பாதியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவும், இந்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதிவரைக்கும்தான் செல்லுமாம். இந்த அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் தியேட்டர்களை திறப்பது என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து, இன்று அல்லது நாளை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தாலும், பேசுவதற்குத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

“திரையீட்டுக் கட்டணம் என்பது கியூப் நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. இதில் நாங்கள் பேசி என்ன ஆகப் போகுது.. எங்களிடம் எதற்காக வர வேண்டும்..?” என்று துவக்கத்திலேயே கதவைச் சாத்திவிட்டனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

தற்போதைய நிலையில் இந்தத் தீபாவளிக்கு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற திரைப்படம், இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘பிஸ்கோத்’ என்ற திரைப்படம், ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படம், ‘இரண்டாம் குத்து’ என்ற திரைப்படம் ஆகிய 4 படங்கள் மட்டுமே இப்போதைக்கு கியூவில் நிற்கின்றன.

ஆனால், இவற்றைத் தயாரித்த தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் தங்களுடைய படத்தை வெளியிட மாட்டார்கள் என்பது உறுதி. இதனால் இந்தப் பிரச்சினையை எப்படி பேசித் தீர்ப்பது என்பது பற்றி தங்களுடைய உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது என்றால் அந்த நாளைக்கு 15 நாட்களுக்கு முன்பேயே அதன் விளம்பர வேலைகள் துவங்கிவிடும். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். தொடர்ந்து டிவி, ரேடியோ, பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று அனைத்திலும் விளம்பரங்களும் வெளிவந்துவிடும்.

ஆனால், வரும் நவம்பர் 12-ம் தேதியான தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இருக்கும் இந்த 4 படங்களுமே இப்போதுவரையிலும் எந்தவொரு ஸ்டெப்பையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தக் கடினமான சூழ்நிலையில் வரும் தீபாவளியன்று புதிய படங்களை ரசிகர்கள் பார்ப்பது.. தியேட்டர்காரர்கள் மற்றும் கியூப் நிறுவனத்தின் கைகளில்தான் உள்ளது.

The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! https://touringtalkies.co/tamil-film-producers-council-election-2020-news/ Sat, 24 Oct 2020 11:19:52 +0000 https://touringtalkies.co/?p=9225 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.

ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.

ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டி…! https://touringtalkies.co/trajendar-will-contest-in-tfpc-union-election-2020/ Wed, 14 Oct 2020 08:22:33 +0000 https://touringtalkies.co/?p=8751 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் பிரபல இயக்குநரும், இசையமைப்பாளரும், நடிகரும், விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அடுத்த மாதம் நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நாளை முதல் வழங்கப்படவுள்ள நிலையில் இத்தேர்தலில் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். “மன்னன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் மன்னன், செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். எங்களது அணியில் இடம் பெறும் மற்ற நபர்கள் […]

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டி…! appeared first on Touring Talkies.

]]>

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் பிரபல இயக்குநரும், இசையமைப்பாளரும், நடிகரும், விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அடுத்த மாதம் நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நாளை முதல் வழங்கப்படவுள்ள நிலையில் இத்தேர்தலில் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

மன்னன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் மன்னன், செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். எங்களது அணியில் இடம் பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

இது பற்றி தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்தான் என்னுடைய தாய் வீடு. ஆகவே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தற்போது அறிவிக்கப்ப்டடுள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். என்னுடன் நண்பர் மன்னனும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்..

கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக முடிக் கிடக்கும் திரையரங்குகளை 50 சதவிதம் பார்வையாளர்களுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படவுள்ள இந்தச் சூழலில், திரையரங்கு டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 12% GST வரியை மத்திய அரசு ரத்து செய்து தண்ணீர் இல்லாத தாமரை போல் வாடும் இந்திய திரையுலகை வாழ வைக்க வேண்டும்.

அதேபோல், தமிழகத்தில் வசூலிக்கப்படும் 8%  உள்ளாட்சி கேளிக்கை (LBT) வரியை தமிழக அரசும் ரத்து செய்ய வேண்டும்.

உலகம் முழுவதும் VPF (Virtual Print Fee) கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் இந்தக் கட்டணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டணமும் முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும்…” என்றும் டி.ராஜேந்தர் கோரிக்கை வைத்துள்ளார்.

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டி…! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..! https://touringtalkies.co/tamil-film-producers-council-2020-election-dates-announcement/ Fri, 09 Oct 2020 06:08:10 +0000 https://touringtalkies.co/?p=8483 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. ஆனால் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் […]

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.

]]>

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. ஆனால் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது. அதன்படி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைமுறைகளுக்கான தேதிகள் நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு அடுத்த மாதம், நவம்பர் 22-ம் தேதியன்று சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை :

வேட்பு மனுவிற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 15 முதல் 23-ம் தேதி மாலை 3.30 மணி வரையிலும் சங்க அலுவலகத்தில் தரப்படும். 100 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை அக்டோபர் 16 முதல் 23-ம் தேதி மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.

வேட்பு மனுக்களை பரிசீலைனை செய்வது அக்டோபர் 23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

வேட்பு மனுக்களை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 29-ம் தேதி மாலை 4 மணிவரையிலும் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

அக்டோபர் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

அக்டோபர் 30-ம் தேதியன்று தேர்தலில் நிற்கும் இறுதி வேட்பாளர் பட்டியல்.. தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வாக்குப் பதிவு நவம்பர் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை, அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விபரங்கள் :

தலைவர் பதவிக்கு – ஒரு லட்சம் ரூபாய் மட்டும்

மற்ற நிர்வாகப் பதவிகளுக்கு – ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – ரூபாய் பத்தாயிரம் மட்டும்.

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.

]]>