Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tamil – Touring Talkies https://touringtalkies.co Mon, 25 Mar 2024 07:09:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tamil – Touring Talkies https://touringtalkies.co 32 32 கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது தயக்கம் இல்லையா? பிரேமலு மமிதா பைஜூ Open Talk!!! https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%b0/ Mon, 25 Mar 2024 07:03:53 +0000 https://touringtalkies.co/?p=40124 தமிழ் படங்களுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் மலையாள படங்களின் ஹிட்-ஐ தொடங்கி வைத்த பெருமை பிரேமலு படத்திற்கு தான் சேரும்… பிரேமலு கேரளாவை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் கொடுத்ததால் தமிழிலும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இப்பட ஹீரோயின் மமிதா பைஜூ துருதுருவென இருக்கும் இவர் சரசரவென மூன்று மாநில இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். சென்னை வந்த கேரளத்து தேவதை பேட்டி அளித்த போது, தமிழ் நாட்டில் பிரேமலு படம் இந்த அளவுக்கு கொண்டாடப்படும் […]

The post கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது தயக்கம் இல்லையா? பிரேமலு மமிதா பைஜூ Open Talk!!! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் படங்களுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் மலையாள படங்களின் ஹிட்-ஐ தொடங்கி வைத்த பெருமை பிரேமலு படத்திற்கு தான் சேரும்…

பிரேமலு கேரளாவை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் கொடுத்ததால் தமிழிலும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இப்பட ஹீரோயின் மமிதா பைஜூ துருதுருவென இருக்கும் இவர் சரசரவென மூன்று மாநில இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்.

சென்னை வந்த கேரளத்து தேவதை பேட்டி அளித்த போது, தமிழ் நாட்டில் பிரேமலு படம் இந்த அளவுக்கு கொண்டாடப்படும் என்று நினைத்தீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லவே இல்லை, நாங்கள் கேரளாவில் ஹிட் கொடுக்கும் என்று நினைத்தோம். தமிழ்நாட்டில இந்த படத்த பத்தி சுத்தமா ஐடியாவே இல்லை. ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற மலையாள மக்களுக்காக சில ஸ்கிரீன்ல மட்டும் ரிலீஸ் ஆச்சு.ஆனா என்னாச்சு பாருங்க படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆகியும் தமிழ்நாட்டிலேயும் சரி கேரளாவுலையும் ஹவுஸ் ஃபுல்லா படம் ஓடிட்டு இருக்கு.இதெல்லாம் பாக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பிரேமலு பட வெற்றில நீங்க என்ன கத்துக்கிட்டிங்க ?

ஏற்கனவே சூப்பர் சரண்யா படத்துல நானும் இந்த படத்தோட ஹீரோ நஸ்லனும் நடிச்சிருக்கோம் இந்த படத்த இயக்குனதும் இதே பிரேமலு டைரக்டர் க்ரிஷ் எ.டி தான்.இந்த படம் ஷூட் பண்ண ஆரம்பிக்கும் போது டெக்னீசியன் என எல்லாரும் ஃபேமிலி மாதிரி ஆயிட்டோம். இந்த படம் ஹிட் ஆகணும்னு குடும்பமா நினைச்சோம் உழைச்சோம் ஹிட் ஆகிடுச்சு…

முன்னாடியே தமிழ் படத்துல நடிக்கிற ஆசை இருந்ததா? சேன்ஸ் கிடச்சதுனால ரிபெல் படத்துல நடிச்சீங்களா?

தமிழ் படத்துல நடிக்கணும் ஆசை முன்னாடியே இருந்துச்சு. எனக்கு தமிழ் மொழியும் தமிழ் படங்களும் ரொம்ப பிடிக்கும்‌. குடும்பமா உக்கார்ந்து மலையாள படங்கள் எந்தளவுக்கு பக்குறோமே அதே அளவுக்கு தமிழ் படங்களையும் பாப்போம்.சூர்யா விஜய் தனுஷ் அஜித் ஹீரோயின்ல அசின் ரொம்ப பிடிக்கும். அப்புறம் நயன்தாரா இவர்கள் எல்லாம் பார்க்கும் போது தமிழ் உலகத்துல நடிக்கணும் ஆசை சின்ன வயசுலயே வந்துடுச்சு. தமிழ் படத்துல நடிக்கணும் நான் ஆசைப்பட்டேன் சான்ஸ் கிடைக்குமான்னு எதிர்பார்த்தேன் அதுக்கேத்த மாதிரி சான்ஸ் கிடைச்சிருச்சு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.

உங்க முதல் தமிழ் படத்தோட எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு?

எல்லாரும் என்ன கம்ஃபர்டபிளா பாத்துகிட்டாங்க. டைரக்டர் நிதேஷ்க்கு இது முதல் படமாக இருந்தாலும் அவரு ரொம்ப மெச்சூர்டா எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற அளவுக்கு நல்லா நடந்து கொண்டாரு. காலேஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏகப்பட்ட பேர் இருந்தாங்க எல்லாரையும் பயங்கர குல ஹேண்டில் பண்ணார்‌. இந்த படத்துல நான் இருந்து மலையாள பொண்ணாவே நடிச்சிருக்கறதுனால எனக்கு மொழி பிரச்சனையும் இல்லை தமிழ்ல பேசும்போது மலையாள டச் இருந்தா பிரச்சினை இல்லனு சொன்னதுனால ஷூட்டிங் ஸ்பாட் நல்லாவே போச்சு.

ஜி.வி யோட ஒன்னா நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு? கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது எதும் தயக்கம் இல்லையா?

நான் ஜி.வி.யோட மிகப்பெரிய ரசிகை அவரோட மியூசிக் ரொம்ப பிடிக்கும் குறிப்பா சொல்லனும்னா அவருடைய எமோஷனல் பாடல் பிஜிஎம் இன்னும் முடியுமா சொல்லணும்னா பிறை தேடும் இரவிலே பாட்டு என்னோட ஆல் டைம் ஃபேவரைட்‌ ‘வாவ் என்ன வாய்ஸ்’ எனக்கு எமோஷனலா எப்போதுமே கனெக்ட் ஆகுற பாட்டு. அப்புறம் திரிஷா இல்லனா நயன்தாரா படத்துல கயல் ஆனந்தியை பார்க்கும்போது ஒரு பிஜிஎம் வரும் அந்த பிஜிஎம் திருப்பி திருப்பி கேட்பேன். ஜஸ்ட் நடிப்பு தானே அதுனால தயக்கம் இல்லை. ஜிவி. நல்ல மனுஷன் என்ன கம்ஃபர்டபிளா இருக்க வச்சாரு.அவர் சமூக விஷயங்களுக்காக குரல் கொடுக்கிறது எல்லாம் மிகப்பெரிய விஷயம் என்றார்.

The post கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது தயக்கம் இல்லையா? பிரேமலு மமிதா பைஜூ Open Talk!!! appeared first on Touring Talkies.

]]>
  2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! https://touringtalkies.co/rewind-2023-box-office-collection-list-in-tamil-cinema/ Thu, 21 Dec 2023 01:39:33 +0000 https://touringtalkies.co/?p=39042 t‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்து பார்ப்போம். லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் […]

The post   2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
t‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்து பார்ப்போம்.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.341 கோடியை வசூலித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.

ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினியின் மாஸ் காட்சிகளால் படம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. இதனால் படம் உலகம் முழுவதும் ரூ.610 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடியை வசூலித்தது.

வாரிசு: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீரியல் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்தது.

துணிவு: அஜித்தின் ‘துணிவு’ வங்கிகளின் அத்துமீறல்களை பேசியிருந்தது. படத்தின் மைய கதை வரவேற்பை பெற்றபோதிலும், அதைச்சுற்றி எழுதியிருந்த கமர்ஷியல் திரைக்கதை வலுசேர்க்கவில்லை. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் ‘வாத்தி’ அரசுப்பள்ளிகளை அழித்தொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசிய இப்படம் அதன் ஓவர் சென்டிமென்ட் எமோஷன்களால் தடுமாறியது. ஜி.வி.பிரகாஷின் இசை பலம் சேர்த்தது. சம்யுக்தா, சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரூ.120 கோடி வசூலித்தது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ அதன் ஜாலியான திரைக்கதையால் வரவேற்பை பெற்றது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் எங்கேஜிங் திரைக்கதையால் படம் ரூ.110 வரை வசூலித்து விஷாலுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் சிக்கல்களையும், அம்மக்களின் வலியையும் பேசியது. பாரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். அதிதி ஷங்கர், யோகிபாபு நடித்துள்ள இப்படம் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது.

மாமன்னன்: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு நடித்த படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. மாரிசெல்வராஜ் ஹீரோயிசத்துக்குள் சிக்கிவிட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.அரசியலுக்குள் நிலவும் சாதிய முரண்பாடுகளை பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்தது.

போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த ‘போர் தொழில்’ த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஜூன் 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. அதேபோல, ‘குட் நைட்’, ‘டாடா’, ‘அயோத்தி’ படங்கள் அடுத்தடுத்து ரூ.50 கோடிக்குள்ளான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

The post   2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! https://touringtalkies.co/anurag-kashyap-to-debut-as-a-director-in-tamil/ Sat, 09 Dec 2023 04:20:49 +0000 https://touringtalkies.co/?p=38664 பாலிவுட்டில், ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு கவனத்துக்குரிய படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ராகுல் பாட், சன்னி லியோன் நடித்துள்ள ‘கென்னடி’ படம் இவரது அடுத்த படைப்பாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் வெளியான ‘லியோ’வில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார். இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் படம் […]

The post தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட்டில், ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு கவனத்துக்குரிய படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ராகுல் பாட், சன்னி லியோன் நடித்துள்ள ‘கென்னடி’ படம் இவரது அடுத்த படைப்பாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் வெளியான ‘லியோ’வில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார்.

இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் படம் இயக்க உள்ளதாகவும், அதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், “அனுராக் காஷ்யப் என்னை அவர் படத்தில் நடிக்க கூப்பிட்டார்” என தெரிவித்திருந்தார். இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! appeared first on Touring Talkies.

]]>
தொடங்கியது பிக்பாஸ் 7:  2வது வீட்டிற்கு செல்பவர்கள் இவர்கள் தான்! https://touringtalkies.co/big-boss-7-tamil/ Mon, 02 Oct 2023 04:28:14 +0000 https://touringtalkies.co/?p=36799 விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது […]

The post தொடங்கியது பிக்பாஸ் 7:  2வது வீட்டிற்கு செல்பவர்கள் இவர்கள் தான்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, பிரதீப் ஆண்டனி, வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷூ, விஷ்ணுவிஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, சரவண விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, அனன்யா ராவ், நிக்ஸன் உள்ளிட்ட 18 பேர் இந்த பிக் பாஸ் 7-ல் களமிறங்கியுள்ளனர்.

முன்னதாகவே கமல்ஹாசன் பல புரோமோக்களில் இந்த சீசனில் புதிதாக 2 வீடு என்று அறிவித்திருந்தார். அதன் படி மொத்தமாக 18 பேரும் நேற்று ஒரே வீட்டிற்குள் சென்ற நிலையில், இந்த வாரம் 2வது வீட்டிற்குள் செல்லவுள்ள 6 போட்டியாளர்களின் விவரத்தை விஜய் தொலைக்காட்சி புரோமோவாக வெளியிட்டுள்ளது.

இந்த வார தலைவராக நேற்று விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் வினுஷா, ஐஷு, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், ரவீனா, நிக்ஸன் ஆகிய 6 பேரும் வேறுவழியாக 2வது வீட்டிற்குள் செல்கின்றனர். இவர்கள் 6 பேரும் அடுத்த அறிவிப்பு வரும்வரை வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

The post தொடங்கியது பிக்பாஸ் 7:  2வது வீட்டிற்கு செல்பவர்கள் இவர்கள் தான்! appeared first on Touring Talkies.

]]>
எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் https://touringtalkies.co/this-is-what-my-name-means-in-tamil-actress-simran/ Tue, 11 Jul 2023 08:30:32 +0000 https://touringtalkies.co/?p=34268 தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.  எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். […]

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.

 எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். தமிழில் சிம்ரன் என்ற பெயருக்கு  அர்த்தம் ’தியானம்’ என்று பொருள் என அந்த பேட்டியில் சிம்ரன் கூறியிருந்தார்.

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
‘தமிழர்களுக்கு தமிழ் தெரியலே!”: ஊர்வசி ஆதங்கம்  https://touringtalkies.co/tamils-dont-know-tamil-urvasi-athangam/ Wed, 14 Jun 2023 02:02:49 +0000 https://touringtalkies.co/?p=33469 சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில், ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’.இதன் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி, “தமிழ்தான் மூத்த மொழி.. இதிலிருந்துதான் மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பிரிந்து சென்றன. தற்போது மலையாளத்தில்தான் தமிழ் வாழ்கிறது. அகம், புறம் போன்ற நல்ல – பழமையான தமிழ்ச் சொற்களை மலையாளிகள்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தமிழர்கள், தமிழை சரியாக பேசுவதே இல்லை. அதிலும் சென்னைத் தமிழ் மிக மோசம்” […]

The post ‘தமிழர்களுக்கு தமிழ் தெரியலே!”: ஊர்வசி ஆதங்கம்  appeared first on Touring Talkies.

]]>
சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில், ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’.இதன் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி, “தமிழ்தான் மூத்த மொழி.. இதிலிருந்துதான் மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பிரிந்து சென்றன. தற்போது மலையாளத்தில்தான் தமிழ் வாழ்கிறது. அகம், புறம் போன்ற நல்ல – பழமையான தமிழ்ச் சொற்களை மலையாளிகள்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தமிழர்கள், தமிழை சரியாக பேசுவதே இல்லை. அதிலும் சென்னைத் தமிழ் மிக மோசம்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

 

The post ‘தமிழர்களுக்கு தமிழ் தெரியலே!”: ஊர்வசி ஆதங்கம்  appeared first on Touring Talkies.

]]>
தொடர்ந்து தமிழில் ஆர்வம் காட்டும் கீரவாணி! https://touringtalkies.co/music-composer-keeravani-who-continues-to-show-interest-in-tamil/ Tue, 13 Jun 2023 05:12:56 +0000 https://touringtalkies.co/?p=33425 ‘அழகன்’, ‘ நீ பாதி நான் பாதி’ , ‘வானமே எல்லை’ , ‘ஜாதிமல்லி’  என பல படங்ளில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் மரகதமணி. இவர்தான் கீரவாணி என்கிற பெயரில் தெலுங்கில் பல ஹிட்களை கொடுத்தவர். சமீபத்தில் நாக்கு முக்க பாடலுக்கு இசை அமைத்து ஆஸ்கர் விருது வாங்கியவர். இந்நிலைில், ‘ஜென்டில்மேன் 2’  படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்த பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். இது குறித்து அவர், “நீண்ட காலத்துக்குப் […]

The post தொடர்ந்து தமிழில் ஆர்வம் காட்டும் கீரவாணி! appeared first on Touring Talkies.

]]>
‘அழகன்’, ‘ நீ பாதி நான் பாதி’ , ‘வானமே எல்லை’ , ‘ஜாதிமல்லி’  என பல படங்ளில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் மரகதமணி. இவர்தான் கீரவாணி என்கிற பெயரில் தெலுங்கில் பல ஹிட்களை கொடுத்தவர். சமீபத்தில் நாக்கு முக்க பாடலுக்கு இசை அமைத்து ஆஸ்கர் விருது வாங்கியவர்.

இந்நிலைில், ‘ஜென்டில்மேன் 2’  படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்த பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இது குறித்து அவர், “நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழுக்கு வந்தாலும் பெரும் வரவேற்பு கிடைப்பது ஆனந்த அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்து உள்ளார்.

 

 

The post தொடர்ந்து தமிழில் ஆர்வம் காட்டும் கீரவாணி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் மீண்டும் கங்கனா – மாதவன் ஜோடி https://touringtalkies.co/kangana-ranaut-again-in-tamil-to-share-screen-with-madhavan/ Thu, 08 Jun 2023 01:35:22 +0000 https://touringtalkies.co/?p=33257 இந்தி நடிகை கங்கனா ரனாவத், தமிழில் ஜெயம் ரவியின் ‘தாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தற்போது பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இண்டியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி  உள்ளார்.  இதில் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மாதவனும் கங்கனாவும் ‘தனு வெட்ஸ் மனு’ என்ற இந்தி படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தனர். ஆகவே […]

The post தமிழில் மீண்டும் கங்கனா – மாதவன் ஜோடி appeared first on Touring Talkies.

]]>
இந்தி நடிகை கங்கனா ரனாவத், தமிழில் ஜெயம் ரவியின் ‘தாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தற்போது பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இண்டியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி  உள்ளார்.  இதில் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாதவனும் கங்கனாவும் ‘தனு வெட்ஸ் மனு’ என்ற இந்தி படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தனர். ஆகவே புதிய படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

The post தமிழில் மீண்டும் கங்கனா – மாதவன் ஜோடி appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் கிளைக்கதை:  தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவானது தெரியுமா? https://touringtalkies.co/ponnis-selvan-branch-story-did-you-know-that-apart-from-tamil-it-was-also-made-in-sinhala/ Sun, 04 Jun 2023 23:28:25 +0000 https://touringtalkies.co/?p=33163 கல்கி எழுதி மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிசா உள்ளிட்டோர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி அடைந்தது தெரிந்த செய்தி. பொ.செ. ராஜராஜ சோழனின் கதை. ராஜராஜனுக்கு முந்தைய பார்த்திப சோழனின் கதையையும் கல்கி எழுதினார்.  அதுவும் திரைப்படமாக வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது இந்தத் தலைமுறைக்கு தெரியாது. பல்லவ மன்னன் நரசிம்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் அவனை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைகிறான். பின்னர் சோழ நாடு எப்படி பார்த்திபனின் மகன் […]

The post பொன்னியின் செல்வன் கிளைக்கதை:  தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவானது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கல்கி எழுதி மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிசா உள்ளிட்டோர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி அடைந்தது தெரிந்த செய்தி.

பொ.செ. ராஜராஜ சோழனின் கதை. ராஜராஜனுக்கு முந்தைய பார்த்திப சோழனின் கதையையும் கல்கி எழுதினார்.  அதுவும் திரைப்படமாக வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது இந்தத் தலைமுறைக்கு தெரியாது.

பல்லவ மன்னன் நரசிம்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் அவனை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைகிறான். பின்னர் சோழ நாடு எப்படி பார்த்திபனின் மகன் விக்கிரமனின் பராக்கிரமத்தால் விடுதலை அடைந்தது என்பதே, கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலின் கதை.

இந்த நாவல், அதே பெயரில் 1960ல் திரைப்பமாக உருவானது.

யேகானந்த இயக்க, ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி பிரதான கதாபாத்திரங்களில் நடித்தனர். தமிழ், தெலுங்கு, சிங்கள ஆகிய மொழிகளில் வெளியானது.

இப்படமும் பெரிய வெற்றி பெற்றது!

The post பொன்னியின் செல்வன் கிளைக்கதை:  தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவானது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பேச மறுத்த கீர்த்தி சுரேஷ்! https://touringtalkies.co/keerthy-suresh-answer-when-reported-asked-to-speak-in-tamil-tirupatih/ Wed, 31 May 2023 00:19:03 +0000 https://touringtalkies.co/?p=32991 தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம், தமிழில் பேசுமாறு செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், ‘திருப்பதியில் இருக்கேனே’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார். இந்தப்  வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

The post தமிழில் பேச மறுத்த கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம், தமிழில் பேசுமாறு செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், ‘திருப்பதியில் இருக்கேனே’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார். இந்தப்  வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

The post தமிழில் பேச மறுத்த கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>