Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
tamil new m – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 Apr 2024 12:00:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png tamil new m – Touring Talkies https://touringtalkies.co 32 32 தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%a4/ Fri, 26 Apr 2024 12:00:46 +0000 https://touringtalkies.co/?p=41468 இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது ரத்னம் திரைப்படம்.படம்‌ இன்று ரிலீஸ்க்கு தயாராக இருந்த நிலையில் நேற்று கடைசி நேரத்தில் ரிலீஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இன்று படம் வெளியான நிலையில் நேற்று மாலைக்கு முன்னர் வரை பல திரையரங்கில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்கவே என்ன காரணம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் சதி செய்வதாக […]

The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது ரத்னம் திரைப்படம்.படம்‌ இன்று ரிலீஸ்க்கு தயாராக இருந்த நிலையில் நேற்று கடைசி நேரத்தில் ரிலீஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இன்று படம் வெளியான நிலையில் நேற்று மாலைக்கு முன்னர் வரை பல திரையரங்கில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்கவே என்ன காரணம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் சதி செய்வதாக விஷாலே வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை கிளப்பியது.

தமிழ்நாட்டில் ரத்னம் திரைப்படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறாங்க என்றும் இதுக்கு பேர் கட்ட பஞ்சாயத்து என நடிகர் விஷால் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்தார்‌.இப்படி ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடிச்சிருக்கேன். என்னுடைய நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.இப்படி கடைசி நேரத்தில் இப்படி பண்ணால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், கடைசி நேரத்தில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியான நடைமுறை அல்ல என விஷால் எச்சரித்து பேசியிருந்தார்.

குறிப்பிட்ட திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் கடிதம் ஒன்றை கடைசி நேரத்தில் கொடுத்தால் படத்தை வெளியிடாமல் தடுப்பீங்களா? எனவும் காலையில் இருந்து உங்களுக்கு கொள்ள போன் செய்கிறேன்.ஆனால் நீங்கள் வெயிட்டிங்கிலேயே வைத்து வருகிறீர்கள். பண்ணுங்க, எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணுங்க, என்று கூறியிருந்தார் எனக்கே இந்த நிலைமை அப்படி என்றால் மற்ற சாதாரண நடிகர்களுக்கு என்ன நிலை தமிழ் சினிமாவில் தெரிந்து கொள்ளட்டும் என்று பேசியிருந்தார்.

அதன்பின்னர், நேற்று மாலை ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்து இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரத்னம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.

]]>