Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tamil Cinema – Touring Talkies https://touringtalkies.co Sun, 05 May 2024 07:11:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tamil Cinema – Touring Talkies https://touringtalkies.co 32 32 விரைவில் வெளியாகவுள்ள கங்குவா ஃப்ர்ஸ்ட் சிங்கிள்… அடுத்தடுத்த படங்களென அதிரடி காட்டப்போகும் டி.எஸ்.பி! https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%99/ Sun, 05 May 2024 07:10:58 +0000 https://touringtalkies.co/?p=42240 புஷ்பா பட வெற்றிக்கு பிறகு, இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் பான் இந்திய அளவில் தனது கெத்தை காட்டி வருகிறார். சூர்யாவின் ‘கங்குவா’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, தனுஷின் ‘குபேரா’, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’, பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். அதோபோல் சூர்யாவின் ‘கங்குவா’வின் கிளிம்ஸ், போஸ்டர்கள் ஆகியவை அதிக கவனம் ஈர்த்து வரும் நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் […]

The post விரைவில் வெளியாகவுள்ள கங்குவா ஃப்ர்ஸ்ட் சிங்கிள்… அடுத்தடுத்த படங்களென அதிரடி காட்டப்போகும் டி.எஸ்.பி! appeared first on Touring Talkies.

]]>
புஷ்பா பட வெற்றிக்கு பிறகு, இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் பான் இந்திய அளவில் தனது கெத்தை காட்டி வருகிறார். சூர்யாவின் ‘கங்குவா’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, தனுஷின் ‘குபேரா’, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’, பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.

அதோபோல் சூர்யாவின் ‘கங்குவா’வின் கிளிம்ஸ், போஸ்டர்கள் ஆகியவை அதிக கவனம் ஈர்த்து வரும் நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகவிருப்பதால், இப்படத்திற்கு தனிக்கவனம் செலுத்தி பாடல்களை உருவாக்கியுள்ளார். விரைவில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் பின்னணி இசை வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் முடிந்த பிறகு பின்னணி இசை வேலைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷாலின் ‘ரத்னம்’ படத்திற்குப் பிறகு, இது டிஎஸ்பியின் அடுத்த பெரிய இசை படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல் அடுத்ததாக அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடல்கள் கொடுக்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டார் டிஎஸ்பி. ‘வீரம்’ படத்திற்குப் பிறகு அஜித்துடன் டிஎஸ்பி இணைந்திருப்பதால் புதுவிதமான இசையை எதிர்பார்க்கலாம்.

இப்படி தொடர்ந்து சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதுவும் ஐந்து மொழிகளில் வெளிவருகிறது என்பதால், பான் இண்டியா ஸ்டைலில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் நாகார்ஜுனாவின் இன்ட்ரோ மியூசிக்கும் வெளியாகியுள்ளது.

டி.எஸ்.பி.க்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளும் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதால், ‘புஷ்பா’ பாடல்களில் ஒவ்வொரு மொழிக்குமே பாடல் வரிகளில் தனி கவனம் எடுக்கிறார். இப்போது ‘புஷ்பா 2’, ‘குபேரா’, ‘கங்குவா’விற்கும் கடினமாக உழைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

The post விரைவில் வெளியாகவுள்ள கங்குவா ஃப்ர்ஸ்ட் சிங்கிள்… அடுத்தடுத்த படங்களென அதிரடி காட்டப்போகும் டி.எஸ்.பி! appeared first on Touring Talkies.

]]>
15 நிமிடங்கள் நடிக்க 20 கோடி வாங்கிய கமலுக்கு வலைவிரித்த ராஜமெளலி… https://touringtalkies.co/15-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-20-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99/ Sat, 04 May 2024 12:54:24 +0000 https://touringtalkies.co/?p=42217 உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படம் வெளிவர உள்ளன. இதற்கிடையே பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். இந்த கேரக்டர்காக நடிக்க கமல் 15 நிமிடங்களுக்கு 20 கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறாராம்.மேலும் இந்த கூட்டணியில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திசா பதானி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். […]

The post 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடி வாங்கிய கமலுக்கு வலைவிரித்த ராஜமெளலி… appeared first on Touring Talkies.

]]>
உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படம் வெளிவர உள்ளன. இதற்கிடையே பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல்.

இந்த கேரக்டர்காக நடிக்க கமல் 15 நிமிடங்களுக்கு 20 கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறாராம்.மேலும் இந்த கூட்டணியில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திசா பதானி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் படக்குழுவினர் இறுதிகட்ட பணிகள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கமலின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் மிரட்டி இருக்கிறார். சும்மாவே கமல், நடிப்பில் பிச்சு உதறுவார். அப்படிப்பட்டவருக்கு இப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தால் சொல்லவா செய்யணும். அதனால் தான் கமலின் அசுர நடிப்பை பார்த்து ராஜமவுலி வியந்து போட்டுள்ளாராம்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் புது படம் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்க வேண்டும் என்று ராஜமவுலி கிட்டத்தட்ட ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கு ப்ளான் போட்டு வைத்துள்ளாரா‌ம்‌ ராஜ மௌலி. இதற்கான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் கமல், தக் லைப் படத்தை முடித்துவிட்டு ராஜமௌலியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடி வாங்கிய கமலுக்கு வலைவிரித்த ராஜமெளலி… appeared first on Touring Talkies.

]]>
அடுத்தப்படம் ரெடி! T.J.ஞானவேல் போட்ட ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-t-j-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87/ Sat, 04 May 2024 12:43:05 +0000 https://touringtalkies.co/?p=42216 ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வரும் சூழலில் இந்த படத்தை விரைவில் நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்தில் டிஜே ஞானவேல் ஒரு பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வேட்டையன் திரைப்படம் […]

The post அடுத்தப்படம் ரெடி! T.J.ஞானவேல் போட்ட ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வரும் சூழலில் இந்த படத்தை விரைவில் நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்தில் டிஜே ஞானவேல் ஒரு பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்துள்ள சூழலில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்தார் ரஜினிகாந்த். அவரும் அமிதாப் பச்சனும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படங்கள் நேற்று வெளியாகி ட்ரெண்ட் ஆகின.

சூர்யா நடித்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் டிஜே ஞானவேல். போலி என்கவுண்டருக்கு எதிரான படம் வேட்டையன் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல கல்வியில் நடந்து வரும் ஊழல் குறித்தும் இந்த படம் பேச‌ இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு முக்கிய சந்திப்பில் ஏற்பட்ட நட்பில் டிஜே ஞானவேல் நானிக்கு ஒரு கதையை சொன்னதாகவும் அது அவரை மிகப்பெரிய அளவில் கவர்ந்த சூழலில் அந்த படத்தில் நடிக்க அவர் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை ஞானவேல் விரைவில் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இவர் ரஜினியின் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக நானியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

The post அடுத்தப்படம் ரெடி! T.J.ஞானவேல் போட்ட ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கவினை இயக்குகிறாரா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? கவின் உடைத்த சீக்ரெட்… https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d/ Sat, 04 May 2024 12:31:58 +0000 https://touringtalkies.co/?p=42202 லிப்ட் மற்றும் டாடா படங்களில் நடித்த கவின் அடுத்ததாக ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படம் தொடர்பான புரமோஷன்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளின் வெளியாகிறது. நேற்று அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தளபதி விஜய் போலவே கவின் நடந்து வருவதாகவும் ரசிகர்களை பார்த்து கை அசைப்பதாகவும் ஏகப்பட்ட கமெண்டுகள் ட்விட்டர் பக்கத்தில் கிளப்பி விட்டனர் ரசிகர்கள். ஸ்டார் […]

The post கவினை இயக்குகிறாரா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? கவின் உடைத்த சீக்ரெட்… appeared first on Touring Talkies.

]]>
லிப்ட் மற்றும் டாடா படங்களில் நடித்த கவின் அடுத்ததாக ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படம் தொடர்பான புரமோஷன்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளின் வெளியாகிறது. நேற்று அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தளபதி விஜய் போலவே கவின் நடந்து வருவதாகவும் ரசிகர்களை பார்த்து கை அசைப்பதாகவும் ஏகப்பட்ட கமெண்டுகள் ட்விட்டர் பக்கத்தில் கிளப்பி விட்டனர் ரசிகர்கள்.

ஸ்டார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினிடம் ஒரு படம் வெற்றி அடைந்த உடன் அதிகமாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது அது பற்றி உங்களின் கருத்து என்ன என பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு கவின் எந்த ஒரு தயாரிப்பாளரும் நடிகரின் மார்க்கெட் தெரியாமல் சம்பளத்தை முடிவு செய்து கொடுக்கமாட்டார்கள். நான் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் போது ஆரம்பத்தில் என் சம்பளம் வெறும் 1000 ரூபாய் தான். அந்த சீரியல் முடிக்கும் போது என்னுடைய சம்பளம் 6000 ஆக மாறியது. ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு நீங்கள் சென்றால் கூட சம்பள உயர்வு எதிர்பார்க்கிறீர்களா மாட்டீர்களா என நெத்தியடியாக ஒரு பதிலை கூறினார்.

அதோபோல் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இன்னமும் அந்த படம் எப்போது துவங்கும் யார் ஹீரோ என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அது தொடர்பான கேட்க்கப்பட்ட கேள்விக்கு , ஜேசன் சஞ்சய் என்னை வந்து சந்தித்து கதை சொன்னது உண்மைதான் தான் ஆனால் நான் சில படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறியதால் அவரும் டிஸ்கஷன் செய்து விட்டு வருவதாக சொன்னார்.அதற்கு பிறகு இருவரும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

The post கவினை இயக்குகிறாரா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? கவின் உடைத்த சீக்ரெட்… appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? https://touringtalkies.co/%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87/ Sat, 04 May 2024 12:24:48 +0000 https://touringtalkies.co/?p=42203 பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் இப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் திரைப்படத்தில் இந்தியன் 2 படம் தொடர் சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு செய்தார்கள்.பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் […]

The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.

]]>
பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் இப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் திரைப்படத்தில் இந்தியன் 2 படம் தொடர் சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு செய்தார்கள்.பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என கூறப்படுகிறது.

அதாவது அந்த பாடல் இந்த படத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர் சங்கர்.மிகப்பெரிய செலவில் அப்படாலை எடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி உள்ள நிலையில் இது குறித்து‌லைக்கா-விடம் பேசிய போது அவர் அந்தப் பாடலை வேண்டாம் என சொன்னதாக சொல்லப்படுகிறது.

இப்போது நிதி நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் பநீங்கள் சொல்றபடி எல்லாம் ஒரு பாட்டுக்காக அவ்வளவு செலவு பண்ண வாய்ப்பு இல்லை என கூறிய இயக்குனர் சங்கர்-க்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளதாம்.இதனால் இந்த பாடல் இல்லாமல் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண முடியாத நிலைமையில் சங்கர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்பிரச்சனையை சரி செய்து பாடலை உள்ளே கொண்டு வந்து படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறாராம் ஆனால் இப்படம் கடைசி வரை வருமா வராதா என ரசிகர்கள் கேள்விகளை குவித்து வருகின்றனர்.

The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.

]]>
தனது முதல் படத்திலேயே கவினை வச்சு செய்த நெல்சன்… கெட்டப்பை கண்டு குமுறும் ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%b5/ Sat, 04 May 2024 11:35:23 +0000 https://touringtalkies.co/?p=42196 ஃபிலமண்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நெல்சன் தொடங்கி உள்ளார். இது குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் புரமோ தற்போது வழக்கம் போல நெல்சன் ஸ்டைலில் செம காமெடியாக வெளியாகி இருக்கிறது.இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நமக்கு பிடித்த மாதிரியான படங்களை செய்ய வேண்டும் என்றால் நாமே தயாரித்தால் தான் உண்டு என அவர் […]

The post தனது முதல் படத்திலேயே கவினை வச்சு செய்த நெல்சன்… கெட்டப்பை கண்டு குமுறும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
ஃபிலமண்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நெல்சன் தொடங்கி உள்ளார். இது குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் புரமோ தற்போது வழக்கம் போல நெல்சன் ஸ்டைலில் செம காமெடியாக வெளியாகி இருக்கிறது.இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நமக்கு பிடித்த மாதிரியான படங்களை செய்ய வேண்டும் என்றால் நாமே தயாரித்தால் தான் உண்டு என அவர் பேட்டி ஒன்றில் சொன்ன நிலையில், அவரை ரெடின் கிங்ஸ்லி தயாரிப்பாளராக கோர்த்து விட்டது போல இந்த புரமோ வெளியாகி இருக்கிறது.

நெல்சன் வழக்கம் போல தனது ஸ்டைல் புரமோவை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, சிவபாலன் மற்றும் கவின் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் இன்ட்ரோ வீடியோ செம காமெடியாக இருக்கிறது.

கவினின் புதிய கெட்டப் இந்த படத்தில் பார்க்கப் போறீங்க என நெல்சனுக்கு பில்டப் கொடுக்க கவினை பொம்பள கெட்டப்பிலேயே பார்த்துட்டேன். இன்னும் நான் அம்மணமாதான் பார்க்கல என நெல்சன் சொல்லி விட்டு ரெடின் கிங்ஸ்லி சர்ப்ரைஸ் என கண்களை எல்லாம் பொத்திக் கொண்டு அவரை அழைத்து வர பிச்சைக்கார கெட்டப்பில் கவின் இருப்பதை பார்க்கவே பரிதாபமாக இருக்கு என்றும் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

The post தனது முதல் படத்திலேயே கவினை வச்சு செய்த நெல்சன்… கெட்டப்பை கண்டு குமுறும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே… வைரலாகும் இளையராஜா யுவன் புகைப்படம்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/ Sat, 04 May 2024 11:19:40 +0000 https://touringtalkies.co/?p=42191 தொடர்ந்து தன்னுடைய இசை மற்றும் பாடல்கள் மூலம் தான் எப்போதும் இசைஞானி தான் என்பதை உணர்த்தி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய இசையால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.தற்போது யுவன் சங்கர் ராஜா விஜயின் கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிலையில் இளையராஜா தான் மொரிஷியஸ் தீவில் உள்ளதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவும் […]

The post தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே… வைரலாகும் இளையராஜா யுவன் புகைப்படம்… appeared first on Touring Talkies.

]]>
தொடர்ந்து தன்னுடைய இசை மற்றும் பாடல்கள் மூலம் தான் எப்போதும் இசைஞானி தான் என்பதை உணர்த்தி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய இசையால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.தற்போது யுவன் சங்கர் ராஜா விஜயின் கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிலையில் இளையராஜா தான் மொரிஷியஸ் தீவில் உள்ளதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவும் மொரிஷியஸ் வந்துள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்து மொரிசியசில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இளையராஜா.

ஒரு புகைப்படத்தை இளையராஜா பதிவிட்டுள்ளார் அதில் யுவன் சங்கர் ராஜாவிற்கு இளையராஜா சாப்பாடு ஊட்டி விடுவது போல காணப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவும் மிகவும் ஆர்வமுடன் தன்னுடைய தந்தையின் கைகளால் சாப்பாட்டை வாங்கி சுவைப்பதாக இந்த புகைப்படத்தில் காணப்பட்டது. இந்தப் புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

The post தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே… வைரலாகும் இளையராஜா யுவன் புகைப்படம்… appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் இணையும் ஜோ பட ஜோடி ! ஆண்களை பற்றி பேச வரும் படம்… https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%9c%e0%af%8b/ Sat, 04 May 2024 11:05:11 +0000 https://touringtalkies.co/?p=42183 ‘ஜோ’ படத்தின் அசத்தலான வெற்றிக்கு பின் ரியோ ராஜுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் ஜோ பட ஹீரோயினுடன் ரியோ ராஜ் இணைந்த புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் “பிளாக்‌ ஷீப்” […]

The post மீண்டும் இணையும் ஜோ பட ஜோடி ! ஆண்களை பற்றி பேச வரும் படம்… appeared first on Touring Talkies.

]]>
‘ஜோ’ படத்தின் அசத்தலான வெற்றிக்கு பின் ரியோ ராஜுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் ஜோ பட ஹீரோயினுடன் ரியோ ராஜ் இணைந்த புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் “பிளாக்‌ ஷீப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

அதே போல், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்‌ ஷீப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் நடிக்கவுள்ளாரகக்ள்.இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படம் திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும் என சொல்லி தன்னம்பிக்கையோடு சிரிக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேல். எனவே இப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மீண்டும் இணையும் ஜோ பட ஜோடி ! ஆண்களை பற்றி பேச வரும் படம்… appeared first on Touring Talkies.

]]>
அவருக்கே இவர் பாடம் எடுப்பாரு…பாலவை மிஞ்சிய இயக்குனர்… https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa/ Sat, 04 May 2024 10:48:32 +0000 https://touringtalkies.co/?p=42175 பாலா மிகவும் கண்டிப்பான இயக்குனர் என்றும் நடிகர், நடிகைகளை சித்ரவதை செய்வதாகவும், சில சமயங்களில் கோபத்தில் அடிப்பதாகவும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. உண்மையைச் சொல்வதென்றால் தமிழ் சினிமாவில் பாலாவை விட கடுமையான இயக்குனர்கள் இருக்கிறார்களாம். ஆனால் இவருக்கு மேலாக கண்டிப்பான இயக்குநர் ஹரி என்கிறார்கள்.அவரது இயக்கத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால், அதில் வரும் நடிகர்கள் அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பெரிய நடச்சத்திரங்கள் சின்ன நட்சத்திரங்கள் என அவரிடம் பாரபட்சம் எல்லாம் […]

The post அவருக்கே இவர் பாடம் எடுப்பாரு…பாலவை மிஞ்சிய இயக்குனர்… appeared first on Touring Talkies.

]]>
பாலா மிகவும் கண்டிப்பான இயக்குனர் என்றும் நடிகர், நடிகைகளை சித்ரவதை செய்வதாகவும், சில சமயங்களில் கோபத்தில் அடிப்பதாகவும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. உண்மையைச் சொல்வதென்றால் தமிழ் சினிமாவில் பாலாவை விட கடுமையான இயக்குனர்கள் இருக்கிறார்களாம்.

ஆனால் இவருக்கு மேலாக கண்டிப்பான இயக்குநர் ஹரி என்கிறார்கள்.அவரது இயக்கத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால், அதில் வரும் நடிகர்கள் அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

பெரிய நடச்சத்திரங்கள் சின்ன நட்சத்திரங்கள் என அவரிடம் பாரபட்சம் எல்லாம் கிடையாது. அவர் சொல்லும் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். அதேபோன்று அந்த ப்ரொடக்ஷனில் எந்த மாதிரி சாப்பாடுகள் வழங்கப்படுகிறது அதைத்தான் சாப்பிட வேண்டும். நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் சாப்பாடு தான் என பல நிபந்தனைகள் இவரிடம் இருக்கிறதாம்.

மேலும், நான் உங்களை நன்றாக கவனித்துக்கொள்கிறேன் எந்தக் கணக்கும் ஹரி கிட்ட செல்லுபடியாகாது. ஒரு நடிகர் ஒருமுறை என்னிடம், தனக்கு ஜிம் உள்ள ஹோட்டல் அறை வேண்டும் என்று கூறிகியிறார்.கிராமத்தில் சூட்டிங் எடுக்கிறோம் அது போன்ற வசதியான ஹோட்டல் எல்லாம் கிடைக்காது என்று சொல்லி அவர் புக் பண்ணிய ஹோட்டலில் தான் தங்க வைத்திருக்கிறார். மேலும், அவரது படத்தில் ஹீரோயினாக ஹரிக்கு நெருக்கமான நடிகரின் காதலி நடித்துள்ளார்.

அந்த சமயத்தில் படத்தின் ஹீரோ, அந்த நடிகரின் காதலியிடம் கொஞ்சம் நெருக்கமாக பழகி இருக்கிறாராம். இதை கவனித்த இயக்குனர் ஹரி படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் ஒன்றாக நடிக்கும் சீன் இல்லாதபடி படத்தையே எடுத்து முடித்தாராம். அந்த அளவுக்கு பயங்கரமான கண்டிப்பான இயக்குனர் பெரிய ஹீரோ என்பதெல்லாம் இவர் கிட்ட செல்லுபடி ஆகாதாம்.

The post அவருக்கே இவர் பாடம் எடுப்பாரு…பாலவை மிஞ்சிய இயக்குனர்… appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் வரும் அந்நியன்!கொண்டாட தயாரான ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/ Sat, 04 May 2024 10:06:28 +0000 https://touringtalkies.co/?p=42168 சியான் விக்ரம் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி இருந்த இந்தப் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த சூழலில் இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்து விக்ரம்-க்கு மிகப்பெரிய படமாக அமைந்தது. அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் நடித்து […]

The post மீண்டும் வரும் அந்நியன்!கொண்டாட தயாரான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
சியான் விக்ரம் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி இருந்த இந்தப் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த சூழலில் இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்து விக்ரம்-க்கு மிகப்பெரிய படமாக அமைந்தது.

அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் நடித்து அசத்திருப்பார்கள்.ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மூன்று வெவ்வேறு கெட்டப்களில் விக்ரம் நடித்திருந்தார்.

அந்நியன், ரெமோ மற்றும் அம்பி என அவரது மூன்று கதாபாத்திரத்திங்கள் மற்றும் அதன் மாற்றங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. படத்தின் பாடல்களும் பெரும் மவுஸை பெற்றன.

இந்நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்களுக்காக டிஜிட்டலில் மேலும் மேம்படுத்தப்பட்டு விரைவில் தமிழில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்பாக வரும் மே 17ம் தேதி அந்நியன் படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தமிழில் அதிகமான படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகின்றன.இப்படி பல சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆகிவரும் சமயத்தில் அந்நியன் படமும் ரீ ரிலீஸ் ஆகவிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மீண்டும் வரும் அந்நியன்!கொண்டாட தயாரான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>