Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
tamil cinema industry – Touring Talkies https://touringtalkies.co Fri, 02 Dec 2022 07:07:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png tamil cinema industry – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் திடீர் மரணம்..! https://touringtalkies.co/film-producer-muralidharan-paases-away/ Thu, 01 Dec 2022 17:52:53 +0000 https://touringtalkies.co/?p=27943 ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட 28 படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார். 1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரண்மனை காவலன்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் கே.முரளிதரன். தொடர்ந்து தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சுவாமிநாதன், முரளிதரன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘மிஸ்டர் மெட்ராஸ்’, விஜயகாந்தின் ‘தர்மசக்கரம்’, விஜய் நடிப்பில் ‘பிரியமுடன்’, அஜித் நடிப்பில் ‘உன்னைத் தேடி’, கமலின் ‘அன்பே சிவம்’, ‘சிலபம்பாட்டம்’, […]

The post பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் திடீர் மரணம்..! appeared first on Touring Talkies.

]]>
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட 28 படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.

1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரண்மனை காவலன்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் கே.முரளிதரன்.

தொடர்ந்து தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சுவாமிநாதன், முரளிதரன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘மிஸ்டர் மெட்ராஸ்’, விஜயகாந்தின் ‘தர்மசக்கரம்’, விஜய் நடிப்பில் ‘பிரியமுடன்’, அஜித் நடிப்பில் ‘உன்னைத் தேடி’, கமலின் ‘அன்பே சிவம்’, ‘சிலபம்பாட்டம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக ஜெயம் ரவி நடித்து 2015-ம் ஆண்டு வெளியான ‘சகலகலாவல்லவன்’ என்ற படத்தை தயாரித்திருந்தார்.

இதில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் முரளிதரன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அப்போது மலை படி ஏறும்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். அவருடைய உடல் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டு நாளை சென்னையில் இறுதி காரியங்கள் நடைபெறவுள்ளது.

முரளிதரன் மறைவுக்கு தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் திடீர் மரணம்..! appeared first on Touring Talkies.

]]>
தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு https://touringtalkies.co/south-indian-actors-association-felicitates-national-award-winning-artists/ Sun, 14 Aug 2022 09:57:58 +0000 https://touringtalkies.co/?p=23789 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6- வது செயற்குழு கூட்டத்தில் தேசிய விருது பெறும் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6-வது செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான  நாசர், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ், மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், சச்சு, மனோபாலா, பசுபதி, லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, நந்தா.S.D, சரவணன்.V, பிரேம்குமார்.S, ஸ்ரீனிவாசா ரெட்டி(எ)ஸ்ரீமன்,  M.A.பிரகாஷ், வாசுதேவன்.V.K திரு.ஹேமச்சந்திரன். […]

The post தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6- வது செயற்குழு கூட்டத்தில் தேசிய விருது பெறும் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6-வது செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான  நாசர், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ், மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், சச்சு, மனோபாலா, பசுபதி, லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, நந்தா.S.D, சரவணன்.V, பிரேம்குமார்.S, ஸ்ரீனிவாசா ரெட்டி(எ)ஸ்ரீமன்,  M.A.பிரகாஷ், வாசுதேவன்.V.K திரு.ஹேமச்சந்திரன். ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் அறங்காவலர் குழு கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதன் உறுப்பினர்களான நாசர், கார்த்தி, மற்றும் குழு உறுப்பினர்கள் பூச்சி S.முருகன், லதா, சச்சு(எ)சரஸ்வதி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதன் பிறகு, 2020-ம் ஆண்டிற்கான தேசிய விருது பெறும்  கலைஞர்கள் அனைவரும் பாராட்டப்பட்டார்கள்.

சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று)

சிறந்த திரைப்படம் – சூரரைபோற்று -தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,

சிறந்த திரைக்கதை ஆசிரியர் – சுதா கொங்குரா (சூரரை போற்று),

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று),

சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று),

சிறந்த தமிழ் திரைப்படம்- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்(இயக்குநர் சாய்வஸந்த்),

சிறந்த படத்தொகுப்பாளர் –

ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),

சிறந்த துணை நடிகை – லட்சுமி ப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),

சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா – திரு.மடோன் அஸ்வின் (மண்டேலா),

சிறந்த ஆவணப்படம் இயக்குநர் – திரு.R.V. ரமணி( பானு ) ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருது பெற்ற அனைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ‘விருமன்’ படத்தின் நாயகனான நடிகர் கார்த்தி, ‘விருமன்’ பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான செலவுக்காக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

The post தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு appeared first on Touring Talkies.

]]>
“சினிமா தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் ஒன்றுதான்” – அமைச்சர் சாமிநாதன் கருத்து..! https://touringtalkies.co/tfpc-44th-annual-day-function-news/ Tue, 19 Jul 2022 15:59:17 +0000 https://touringtalkies.co/?p=23312 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது வருட துவக்க விழா நேற்று அந்தச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான முக்தா சீனிவாசன், கோவை செழியன், கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், இராம.நாராயணன் ஆகியோரது திருவுருவப் படங்களை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். மேலும் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, […]

The post “சினிமா தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் ஒன்றுதான்” – அமைச்சர் சாமிநாதன் கருத்து..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது வருட துவக்க விழா நேற்று அந்தச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான முக்தா சீனிவாசன், கோவை செழியன், கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், இராம.நாராயணன் ஆகியோரது திருவுருவப் படங்களை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

மேலும் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ஏ.எஸ்.பிரகாசம், கே.முரளீதரன், சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, விஷால் கிருஷ்ணா ஆகியோருக்கு நினைவு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் சங்கத்தின் தலைவரான என்.ராமசாமி பேசும்போது, “பாரம்பரியம் மிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அழைப்பினை ஏற்று சிறப்பித்த அமைச்சர் அவர்களுக்கு நன்றி.

திரையுலகினரின் நலனுக்காக சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினையும் நிலுவையில் உள்ள தமிழக அரசின் திரைப்பட விருதுகள்  வழங்கிட தங்களிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கையினை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், “தயாரிப்பாளர்களில் நலிந்த தயாரிப்பாளர்கள் என்று கூறுவது மனதிற்கு சங்கடமாக உள்ளது. நானும் சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்தான். எனக்கும் அவர்கள் படும் சிரமங்கள் அனைத்தும் தெரியும்.

படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் உதவி தொகை கேட்டு பெறுவது என்னை வருத்தமடைய செய்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து, சம்பளமும் கொடுத்தவர்கள். கொடுக்கும் இடத்தில் இருந்தவர்கள். இருப்பவர்கள். ஆகவே அவர்களின் அந்த பரிதாப நிலை மாற வேண்டும்.

சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு அரசு உதவிட வேண்டும். அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும். நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தையே இனி இல்லாமல் அவர்களை பாதுகாத்திட அரசு உதவிட வேண்டும்..” என்றர்.

விழாவின் இறுதியாக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசும்போது, “இந்தத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நமது மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்ட அதே தேதியில்தான் இந்த தயாரிப்பாளர்கள் சங்கமும் துவங்கியுள்ளது என்பது ஒரு சிறப்பான ஒற்றுமையாக உள்ளது.

தமிழ்த் திரையுலகம் நசிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் கொரோன தொற்று, மேலும் அழுத்தி இந்த தொழிலை நசுக்கியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

நான் ஒரு விவசாய குடும்பத்தினை சார்ந்தவன். ஒரு விதத்திலே விவசாயமும்  இந்த திரைத்துறையும் ஒத்துப் போகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் தற்போது ஒரே மாதிரிதான் உள்ளது.

உழைத்த விவசாயிகள் செலவு பத்தணா; வரவு எட்டணா’ என்று சொல்வார்கள். அதே போன்ற சூழ்நிலைதான் இங்கேயும் இருக்கிறது என்பதை இந்த மேடையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பேசும்போது தெரிந்து கொண்டேன்.

நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை முதல்வரிடம் நான் எடுத்து செல்வதற்கு முன்னாலேயே அவருக்கு போய் சேர்ந்துவிடும். இங்குள்ள நிலைமைகள் அவருக்கும் தெரியும்.

இங்கு சங்கம் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசின் நிதி நிலைமையை கணக்கில் கொண்டு சரி செய்யபடும்.

ராஜாஜி ஹால், மியூஸியம்,  வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான துறை ரீதியான அனுமதியை பெற்று தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இப்பொழுதுகூட சென்னை அடையாறில் இருக்கும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியை உலகத் தரத்தில் மேம்படுத்த அதன் திட்டப் பணிகளுக்காக முதல்வர் ரூபாய் பத்து லட்சத்தை ஒதுக்கித் தந்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தர நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்..” என்றார்.

இந்த விழாவில் பிலிம் சேம்பர் சார்பில் காட்ர கட்ட பிரசாத், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சி.கல்யாண், டிஜிட்டல் பிலிம் அசோசியேசன் தலைவர் கலைப்புலி’ ஜி.சேகரன், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஏ. எஸ்.பிரகாசம், கே.முரளீதரன், டி.ஜி.தியாகராஜன், கேயார், எஸ்.தாணு, ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

The post “சினிமா தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் ஒன்றுதான்” – அமைச்சர் சாமிநாதன் கருத்து..! appeared first on Touring Talkies.

]]>
தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் https://touringtalkies.co/kunnakudi-vaidhyanathan-life-story-1/ Sun, 11 Apr 2021 11:38:53 +0000 https://touringtalkies.co/?p=14304 வயலின் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக வாசிக்கக் கூடிய கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வயலின் மூலம் ரசிகர்களோடு பேசிய பெருமை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மட்டுமே சொந்தமானது. காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முருகன் தலமான குன்னக்குடியைச் சேர்ந்த ராமசாமி சாஸ்திரிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1935-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று பிறந்தவர் வைத்தியநாதன். ராமசாமி சாஸ்திரிகளின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். வைத்தியநாதனின் தந்தை ஹரிகதா காலட்சேபம் நடத்துவதில் வல்லவர். […]

The post தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் appeared first on Touring Talkies.

]]>
வயலின் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக வாசிக்கக் கூடிய கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வயலின் மூலம் ரசிகர்களோடு பேசிய பெருமை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மட்டுமே சொந்தமானது.

காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முருகன் தலமான குன்னக்குடியைச் சேர்ந்த ராமசாமி சாஸ்திரிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1935-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று பிறந்தவர் வைத்தியநாதன்.

ராமசாமி சாஸ்திரிகளின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். வைத்தியநாதனின் தந்தை ஹரிகதா காலட்சேபம் நடத்துவதில் வல்லவர். வைத்தியநாதனின் மூத்த சகோதரர் கணபதி சுப்ரமணியம் மிருதங்க வித்வானாக இருந்தார் என்றால் அவரது சகோதரிகளான சுப்புலட்சுமியும், சுந்தர லட்சுமியும் ‘குன்னக்குடி சகோதரிகள்’ என்ற பெயரிலே கர்நாடக இசைக் கச்சேரியை செய்து கொண்டிருந்தனர்.

அந்த குடும்பத்தில் சங்கீதத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வளர்ந்தவர் என்றால் அது குன்னக்குடி வைத்தியநாதன் மட்டும்தான்.

படிப்பிலோ, இசையிலோ கொஞ்சமும் அக்கறை இல்லாமல் தனது மகன் வளர்ந்து வருவதைப் பார்த்து சங்கடப்பட்ட வைத்தியநாதனின் தாயார் “இவன் மேல் மட்டும் நீங்கள் என் அக்கறையே காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?” என்று தனது கணவரிடம் கேட்காத நாளில்லை. “எல்லாவற்றிற்கும் நேரம் வர வேண்டும்” என்பார் அவர்.

அந்த நேரம் ஒரு வயலின் வித்வான்  மூலம் ஒரு நாள் வந்தது. குன்னக்குடி சகோதரிகளுக்கு எல்லா கச்சேரிகளிலும் வயலின் வாசிக்கக் கூடிய வயலின் வித்வான் அன்றைய கச்சேரிக்கு வரவில்லை. அவர் இல்லாமலே கச்சேரி நடந்து முடிந்தது.

மறுநாள் அந்த வயலின் வித்வான் வந்தபோது முதல் நாள் கச்சேரிக்கு வராத அந்த வயலின் வித்வானை கடுமையாக திட்டித் தீர்த்தார் வைத்தியநாதனின் தந்தை.

“உங்களுடைய பெண்கள் பாடுகிறார்கள்.. பையன் மிருதங்கம் வாசிக்கிறான்.. ஆனா வயலினுக்கு மொத்த குடும்பமும் என்னைத்தான் நம்பிக்கிட்டு இருக்கீங்க..? அதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள்” என்று அந்த வயலின் வித்வான் பேசியது ராமசாமி சாஸ்திரிகளின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அப்போது அந்தப் பக்கமாக வைத்தியநாதன் வர “இன்னும் ஒரே வருடத்தில் இவனைப் பெரிய வயலின் வித்வான் ஆக்கவில்லை என்றால் என் பெயர் ராமசாமி இல்லை” என்று அந்த வயலின் வித்வானிடம் சபதம் போட்டார் அவர்.

அவர் அப்படி சபதம் போட்டதும் அந்த வயலின் வித்வான்கூட சும்மா இருந்தார். ஆனால், வைத்தியநாதனின் சகோதரிகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதுவரை வயலினைக் கையில்கூட எடுத்துப் பார்த்திருக்காத வைத்தியநாதன் எங்கே வயலின் கற்றுக் கொள்ளப் போகிறார் என்பதுதான் அவர்களது சிரிப்புக்குக் காரணம்.

ஆனால், தந்தையின் சொல்லுக்காக வயலினைக் கையில் எடுத்த வைத்தியநாதன் அவரது சகோதரிகளின் கணிப்பை எல்லாம் மீறி அசுர சாதகம் செய்யத் தொடங்கினார்.

சரியாக ஒரு வருடத்தில் தனது சகோதரிகளான குன்னக்குடி சகோதரிகள் பாட அண்ணன் கணபதி சுப்ரமணியம் மிருதங்கம் வாசித்த கச்சேரியில் அற்புதமாக வயலின் வாசித்து, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கு வலுவினைச் சேர்த்தார் வைத்தியநாதன்.

‘குன்னக்குடி வைத்தியநாதன்’ என்ற பெயரில் பிரபலமாகத் தொடங்கிய வைத்தியநாதனைத் தேடி பல பெரிய வித்வான்களின் பாட்டு கச்சேரிகளில் வயலின் வாசிக்கக் கூடிய வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இசைக்கு அடுத்தபடியாக சினிமா வைத்தியநாதனை ஈர்த்தது. எந்த புது படம் வந்தாலும் முதல் காட்சியில் தவறாமல் வைத்தியநாதனைப் பார்க்கலாம்.

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

வைத்தியநாதனின் திறமை என்ன என்பதை சோதித்துப் பார்த்த பிறகே அவரை சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொன்ன மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகிகள் அவரது திறமையை சோதித்துப் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் முன்னாலே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினர்.

“எங்கே வாசி பார்க்கலாம்” என்றார் ஜி.ராமனாதன். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த ராகம் சாருகேசி ராகம். அந்த விஷயம் வைத்தியநாதனுக்குத் தெரியாது என்ற போதிலும் அதிர்ஷ்டமும், நேரமும் அவருக்குத் துணை நின்ற காரணத்தாலோ என்னவோ சாருகேசி ராகத்தில் அமைந்த ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் அவர்.

அதைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஒரு இசையமைப்பாளராக தனது தகுதியை ன் வளர்த்துக் கொள்ளவும் குன்னக்குடி வைத்தியனாதனுக்கு மிகப் பெரிய அளவில் உதவியது.

அந்த அனுபவங்களின் துணையுடன் தனது 17-வது வயதில் சென்னையில் காலடி எடுத்து வைத்த வைத்தியநாதனுக்கு அப்போது பிரபலமாக இருந்த சூலமங்கலம் சகோதரிகளின் அறிமுகம் கிடைத்தது. அவர்களது கச்சேரிகளுக்கு வாசிக்கத் தொடங்கிய வைத்தியநாதனுக்கு தமிழகத்தின் மிகப் பெரிய இசைக் கலைஞர்களாக விளங்கிய செம்மங்குடி, மகாராஜபுரம் சந்தானம், சீர்காழி கோவிந்தராஜன், டிஎன்.ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை உட்பட பல கலைஞர்களோடு இணைந்து கச்சேரி செய்யக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.

1970-ம் ஆண்டு தனியாக வயலின் கச்சேரி செய்யத் தொடங்கியதுதான் குன்னக்குடி வைத்தியநாதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் இசைத் தட்டுக்களை வெளியிடும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை தினத்தன்று அவரது அலுவலகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பூஜையை நடத்துவது வழக்கம்.

அந்த பூஜையில் பிரபலமான பல பாடகர்கள் பாடுவார்கள். அப்படி பாடிக் கொண்டிருந்த சிதம்பரம் ஜெயராமனுக்கு வயலின் வாசித்துக் கொண்டிருந்த குன்னக்குடி வைத்தியநாதன் அடுத்த பாடலைப பாட சி.எஸ்.ஜெயராமன் இடைவெளி எடுத்துக் கொண்ட சமயத்தில் ‘திருநீலகண்டர்’ படத்திலே தியாகராஜ பாகவதர் பாடிய ‘தீன கருணாகரனே’என்ற பாடலை வயலினில் வாசித்தார்.

அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் பக்கம் திரும்பிய மெய்யப்ப செட்டியார் அவர் வாசித்து முடிக்கின்றவரையில் அடுத்த பக்கம் திரும்பவில்லை.

கச்சேரி முடிந்ததும் குன்னக்குடி வைத்தியநாதனைத் தனியாக அழைத்த அவர் ‘உனக்கு பாகவதர் பாட்டு எல்லவற்றையும் வாசிக்கத் தெரியுமா,,?” என்று கேட்டார். “தெரியும்” என்று வைத்தியநாதன் தலையை ஆட்டியவுடன் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிர்வாகியான கண்ணனை அழைத்த செட்டியார் வைத்தியநாதனின் வயலின் வாசிப்பை இசைத் தட்டாக கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கூறினார்.

வைத்தியநாதன் வயலினில் வாசித்த திரைப்படப் பாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து எச்.எம்.வி. நிறுவனத்துக்காக பக்திப் பாடல்களுக்கு இசையமைக்கக் கூடிய வாய்ப்பு குன்னக்குடி வைத்தியநாதனுக்குக் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பல இசைத்தட்டு நிறுவனங்களுக்காக எண்ணற்ற பாடல்களைத் தனது இசையமைப்பில் உருவாக்கினார் வைத்தியநாதன்.

அப்படி அவர் உருவாக்கிய ஒரு பாடல்தான் தமிழ் சினிமா உலகில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாக பாதை போட்டுத் தந்தது.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பாளராகக் காரணமாக அமைந்த அந்தப் பாடலைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம். 

(தொடரும்) 

The post தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் appeared first on Touring Talkies.

]]>