Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Sunainaa – Touring Talkies https://touringtalkies.co Thu, 07 Jul 2022 11:04:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Sunainaa – Touring Talkies https://touringtalkies.co 32 32 போலீஸ் கான்ஸ்டபிள்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் விஷாலின் ‘லத்தி’ படம் https://touringtalkies.co/laththi-movie-news/ Thu, 07 Jul 2022 11:01:46 +0000 https://touringtalkies.co/?p=23085 ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் ‘லத்தி’. இந்தப் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். மேலும் முதல் தடவையாக, கல்யாணம் ஆகி ஏழு வயது பையனுக்குத் தகப்பனா நடிக்கிறார். அவரது மனைவியாக சுனைனா நடிக்கிறார். மேலும் ராகவ், ரமணா, சன்னி, வினோத் சாகர், பிரபு, ‘தலைவாசல்’ விஜய், முனீஸ்காந்த், ஏ.வெங்கடேஷ், மிஷா கோஷல், வினோதினி, மோகன்ராம் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். Banner: RANA PRODUCTIONS, Produced […]

The post போலீஸ் கான்ஸ்டபிள்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் விஷாலின் ‘லத்தி’ படம் appeared first on Touring Talkies.

]]>
ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் ‘லத்தி’.

ந்தப் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். மேலும் முதல் தடவையாக, கல்யாணம் ஆகி ஏழு வயது பையனுக்குத் தகப்பனா நடிக்கிறார். அவரது மனைவியாக சுனைனா நடிக்கிறார்.

மேலும் ராகவ், ரமணா, சன்னி, வினோத் சாகர், பிரபு, தலைவாசல்’ விஜய், முனீஸ்காந்த், ஏ.வெங்கடேஷ், மிஷா கோஷல், வினோதினி, மோகன்ராம் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Banner: RANA PRODUCTIONS, Produced By: Actor RAMANA – Actor NANDA, Director: A.VINOTH KUMAR, Music: YUVAN SHANKAR RAJA, DOP: BALASUBRAMANIEM, Additional DOP: BALAKRISHNA THOTA, Editor: N.B.SRIKANTH, Stunt: PETER HEIN, Art: S.KANNAN, Costume Designer: VASUKI  BHASKAR, VFX Head: HARIHARA SUDHAN, Sound Mixing: TAPAS NAYAK, Lyricist: KARTHIK NETHA, PRO: Johnson, Publicity Designer:JOSEPH JAXSON.

புதுமுக இயக்குநரான வினோத்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த ‘லத்தி’ படம் பற்றி இயக்குநர் வினோத் குமார் பேசும்போது, “ரியாலிட்டி.. சர்ப்ரைஸ் நிறைந்த கான்ஸ்டபிள் வாழ்க்கைதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

நம் மாநில காவல் துறையில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. ஆனால் அவர்களை நிர்வாகிக்கிற அதிகாரிகள் மிகவும் குறைவுதான். நடப்பு நிலைமையைச் சமாளிக்கிறது கான்ஸ்டபிள்ஸ் பொறுப்புதான். அவங்ககிட்டே இருக்கிற எளிமையான ஆயுதம் ‘லத்தி’தான். அதனோடு வால்யூ பத்தியும் படம் பேசும்…” என்றார்.

சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இந்த லத்தி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.

The post போலீஸ் கான்ஸ்டபிள்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் விஷாலின் ‘லத்தி’ படம் appeared first on Touring Talkies.

]]>
சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ‘ரெஜினா’ https://touringtalkies.co/reginaa-movie-news/ Sat, 18 Jun 2022 11:28:33 +0000 https://touringtalkies.co/?p=22716 தென்னிந்திய திரையுலகின் திறமைமிக்க நடிகையான சுனைனா ‘நீர்ப் பறவை’, ‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர். தற்போது பன்மொழிகளில் உருவாகும் ‘ரெஜினா’ என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார் சுனைனா. இந்தப் படத்தை எல்லோ பியர் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரிக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் தயாராகிறது. இந்த ‘ரெஜினா’ படத்திற்கு இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.இந்தப் பாடல் 4 மொழிகளில் மொழி […]

The post சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ‘ரெஜினா’ appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய திரையுலகின் திறமைமிக்க நடிகையான சுனைனா ‘நீர்ப் பறவை’, ‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர்.

தற்போது பன்மொழிகளில் உருவாகும் ரெஜினா’ என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார் சுனைனா.

இந்தப் படத்தை எல்லோ பியர் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரிக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் தயாராகிறது.

இந்த ‘ரெஜினா’ படத்திற்கு இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.
இந்தப் பாடல் 4 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாடல்கள் சிங்கப்பூரில் பதிவாக்கப்பட்டன.

கிராமி விருது வென்ற, டபுள் பேஸ்-இல் இசையமைக்கும் வல்லமை படைத்தவர்களில் ஒருவரான கிறிஸ்டி வாசித்து இருக்கிறார். இவருடன் ஜோண்ட் என்பவரும் வாசித்திருக்கிறார். இவர் ஜாஸ் பாணியில் வல்லமை வாய்ந்தவர்.

பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர். பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் படத் தொகுப்பு செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.

இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார், மலையாள இயக்குநரான டோமின் டி சில்வா. இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ‘பைப்பின் சுவத்திலே பிராணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ படங்களை இயக்குகியவர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் டோமிந் டி சில்வா பேசும்போது, “இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும். நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரயும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும்…” என்றார்.

இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை சுனைனா பேசுகையில், “ரொம்ப சாதாரணமான ரெஜினா என்ற ஹவுஸ் வொய்ஃப் கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறேன்.

ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள்தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதைபதைக்கிற காட்சிகள் படத்தை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும். இயக்குநர் டாமின் டி.சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கதையை அவர் சொல்லும்போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. டைரக்டருடைய முந்திய ஹிட்  படங்களான பைபிள் சுவத்திலே பிராணயம்’, ‘ஸ்டார்’ போன்ற படங்களைவிட ‘ரெஜினா’ படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் “ரெஜினா” முக்கியமான படமாக இருக்கும்…” என்றார் சுனைனா.

படத்தின் படல்கள் வெளீயீடு மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

The post சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ‘ரெஜினா’ appeared first on Touring Talkies.

]]>
சுனைனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரெஜினா’ திரைப்படம்..! https://touringtalkies.co/sunainaa-acting-as-leading-character-in-regina-movie/ Tue, 05 Apr 2022 07:41:02 +0000 https://touringtalkies.co/?p=21560 நடிகை சுனைனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். இவரே இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் டோமின் டி.சில்வா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – பவன் K.பவன்,  இசை – சதீஷ் நாயர், பாடல்கள் –  யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட், இஜாஸ்.R,  ஹரி நாகேஷ், பாடகர்கள் – வந்தனா சீனிவாசன், கல்பனா, சின்மயி, ரம்யா நம்பீசன், கலை […]

The post சுனைனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரெஜினா’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை சுனைனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். இவரே இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் டோமின் டி.சில்வா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு – பவன் K.பவன்,  இசை – சதீஷ் நாயர், பாடல்கள் –  யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட், இஜாஸ்.R,  ஹரி நாகேஷ், பாடகர்கள் – வந்தனா சீனிவாசன், கல்பனா, சின்மயி, ரம்யா நம்பீசன், கலை இயக்கம் – கமருதீன், படத் தொகுப்பு – டோபி ஜான், ஆடை வடிவமைப்பு – ஏகன், மக்கள் தொடர்பு – ஜான்ஸன்.

இந்த ரெஜினா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மிக விரைவில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் இந்த ‘ரெஜினா’ படம் பற்றி இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.

அவர் பேசும்போது, “திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்.என்’ என்ற பெயரில் யூ டியூப் சேனலை ஆரம்பித்து அதில் சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்போது ஒரு நாள் எனது நண்பரும், இப்படத்தின் இயக்குருமான டோமின் டி.சில்வா இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார். அந்தக் கதையைக் கேட்டவுடன் இந்தப் புதிய முயற்சியில் இறங்கலாமே என்று எனக்குள் தோன்றியது.

ஏனெனில், என்னுடைய இசைத் திறமையை வெளிப்படுத்த திரையுலகத்தில் ஒரு வாய்ப்பு வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதைவிட என் இசைக்குப் பொருத்தமான ஒரு நல்ல கதையும் வேண்டும் என்று நினைத்துக் காத்திருந்தேன். இதற்கான சந்தர்ப்பம் இப்படி வந்ததால் உடனேயே இப்படத்தைத் துவக்கிவிட்டேன்.

இப்படம் ஒரு பழி வாங்கும் திரில்லர் படம். சராசரியான குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போன தனது கணவனைத் தேடும் கதைதான் இப்படம். பண பலம், ஆள் பலம்.. இப்படி எந்தத் துணையும் இல்லாமல் ஒரு பெண் எப்படி தனது கணவனைக் கண்டு பிடிக்கிறாள் என்பதுதான் இப்படத்தின் கதை.

கணவன், மனைவிக்குள் இருக்கும் ஆபாசமில்லாத, அழகான காதலை பதிவு செய்யும்விதமாக இப்படம் இருக்கும். மேலும், இப்படம் யதார்த்தமான படம். ஒரு சராசரியான பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறோம்.

முதலில் இந்த கதை உருவானவுடன் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்று நாங்கள் தேடினோம். அப்பாவியான முகமும் இருக்க வேண்டும். அதிலிருந்து தன்னை முழுமையாக மாற்றி போராடக் கூடியவிதமாகவும் இருக்க வேண்டும் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகை சுனைனாதான் பொருத்தமாக இருப்பார் என்று எங்களுக்குத் தோன்றியது. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அப்பாவித்தனம் எப்போதும் அவர் முகத்தில் நிலைத்திருக்கும். அதனாலேயே அவரை நாயகி வேடத்திற்குத் தேர்வு செய்தோம்.

இயக்குநர் முதலில் என்னிடம் கதை சொன்னபோதே, “பாடல்கள் தேவைப்பட்டால் படத்தில் வைத்துக் கொள்ளலாம்…” என்று எண்ணினேன். ஆனால் பின்பு கதை, திரைக்கதை முழுமையான பின்பு பாடல்கள் அவசியம் தேவை என்றே தெரிந்தது.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணிக்கும் வகையில்தான் இருக்கும். படத்தில் இருக்கும் 5 பாடல்களும் 5 விதங்களில் இருக்கும். ஆனால், கதைக்குப் பொருந்தும்வகையில்தான் இருக்கும்.

‘சூறாவளி’ எனத் தொடங்கும் பாடலின் டியூனை நான் சுயாதீனப் பாடலுக்காக சேமித்து வைத்திருந்தேன். அப்பாடல் ஒரு அம்மாவும், மனநிலை குன்றிய பெண்ணிற்குமான பாடலாக வைத்திருந்தேன். இந்த இசையைக் கேட்டதும் இயக்குநர், “இதை இந்தப் படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார். அப்படியே வைத்துவிட்டோம்.

இப்படத்தில் பல திருப்பங்கள் இருக்கும். மற்றும் மியூசிக் திரில்லராகவும் இருக்கும். இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

பொள்ளாச்சியில் ஆரம்பித்து கேரளாவின் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்.

இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடி-யில் வெளியிடுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும்…” என்றார் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர்.

The post சுனைனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரெஜினா’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
விஷால்-சுனைனா நடிக்கும் படத்தின் பெயர் ‘லத்தி’ https://touringtalkies.co/laththi-title-news/ Sun, 17 Oct 2021 14:30:20 +0000 https://touringtalkies.co/?p=18836 ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘லத்தி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் விஷாலுக்கு  ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வசனம்: A.வினோத் குமார் / பொன்பார்த்திபன், சாம் C.S. இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – N.B.ஶ்ரீகாந்த், கலை இயக்கம் – […]

The post விஷால்-சுனைனா நடிக்கும் படத்தின் பெயர் ‘லத்தி’ appeared first on Touring Talkies.

]]>
ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘லத்தி’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு  ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வசனம்: A.வினோத் குமார் / பொன்பார்த்திபன், சாம் C.S. இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – N.B.்ரீகாந்த், கலை இயக்கம் – எஸ்.கண்ணன்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.

இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகி முடிந்தது.

இதுவரையிலும் பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. லத்தி என்று இந்தப் புதிய படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தத் தலைப்பை முன்னிறுத்திய டைட்டில் போஸ்டரையும் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் எனிமி’ படத்தின் தமிழ்,தெலுங்கு மொழிகளுக்கான டப்பிங் பணிகளைச் செய்து வருகிறார்.

மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதி கட்ட வேலைகளும் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து லத்தி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும்.

The post விஷால்-சுனைனா நடிக்கும் படத்தின் பெயர் ‘லத்தி’ appeared first on Touring Talkies.

]]>