Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
soorarai potru movie – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Mar 2024 06:54:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png soorarai potru movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 சூர்யாவின் புறநானூறு தள்ளி போகிறதா? ட்ராப் ஆகிறதா? சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%82%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d/ Wed, 20 Mar 2024 06:11:35 +0000 https://touringtalkies.co/?p=40002 சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்றது. இப்படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா சுதா கொங்கரா மற்றொரு படத்தில் இணைய உள்ளதாக பல காலங்களாக சொல்லப்பட்டு வந்தது. கடைசியாக 2022-ல் வெளிவந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பெரிதளவில் ரசிகர்களை ஈர்காமல் போனது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளியாகியது படத்தின் அறிவிப்பு முதலே தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது கங்குவா திரைப்படம். இந்நிலையில் சில […]

The post சூர்யாவின் புறநானூறு தள்ளி போகிறதா? ட்ராப் ஆகிறதா? சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்றது. இப்படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா சுதா கொங்கரா மற்றொரு படத்தில் இணைய உள்ளதாக பல காலங்களாக சொல்லப்பட்டு வந்தது.

கடைசியாக 2022-ல் வெளிவந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பெரிதளவில் ரசிகர்களை ஈர்காமல் போனது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளியாகியது படத்தின் அறிவிப்பு முதலே தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது கங்குவா திரைப்படம்.

இந்நிலையில் சில காலங்களுக்கு முன் புறநானூறு படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், புறநானூறு படத்திற்கு இன்னும் நேரம் தேவைப்படுவதாகவும் ரொம்ப ஸ்பெஷலான இந்த கூட்டணி எங்களின் இதயத்திற்கு நெருக்கமானது. எங்களது பெஸ்ட் கொடுக்க விரும்புகிறோம்‌ இந்தப்படத்தை விரைவில் துவங்குவோம் என குறிப்பிடப்பட்டு அதில் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இருவரின் கையெழுத்துகளும் இடம்பெற்று இருந்தது.

ஆனால் சினிமா வட்டாரங்களின் தகவல்படி கதையில் சூர்யா சில மாற்றங்கள் செய்ய கேட்டார் அதற்கு சுதா கொங்கரா சம்மதிக்கவில்லை இப்பிரச்சினை சில காலமாகவே இருவருக்குள் நிலையவியதாகவும் அதனால் இப்படம் ட்ராப் ஆகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.முன்னரே வணங்காண் திரைப்படம் ட்ராப் நிலையில் இப்படமும் ட்ராபா என ரசிகர்கள் மிகவும் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

The post சூர்யாவின் புறநானூறு தள்ளி போகிறதா? ட்ராப் ஆகிறதா? சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் https://touringtalkies.co/soorarai-potru-movie-bags-6-awards-in-filmfare-awards/ Mon, 10 Oct 2022 09:04:12 +0000 https://touringtalkies.co/?p=25094 நேற்று இரவு பெங்களூரில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வாங்கியது. இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ‘ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. மேலும், சூர்யா தயாரித்து […]

The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நேற்று இரவு பெங்களூரில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் சூர்யாவின் சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வாங்கியது.

இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

மேலும், சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம்’ திரைப்படமும் 2 விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்திருந்த லிஜோ மோல் ஜோஸ் சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினை த.செ.ஞானவேலும் பெற்றனர்.

அத்துடன் பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை’ படமும் மூன்று விருதுகளை வென்றது. இந்தப் படத்தில்  ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘நீயே ஒலி’ என்ற பாடல் வரிகளை எழுதிய தெருக்குரல் அறிவு’க்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது.

The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
“கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” – ‘சூரரைப் போற்று’ பாடலுக்கு அமிதாப்பச்சன் பாராட்டு. https://touringtalkies.co/amitabh-bachchan-praises-tears-cant-control-that-hearing-this-song/ Fri, 03 Sep 2021 14:07:28 +0000 https://touringtalkies.co/?p=17620 நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஜி.வி.பிரகாஷின் இசையில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடலை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் பாராட்டித் தள்ளியுள்ளார்.  இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.  இந்த நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் […]

The post “கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” – ‘சூரரைப் போற்று’ பாடலுக்கு அமிதாப்பச்சன் பாராட்டு. appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஜி.வி.பிரகாஷின் இசையில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடலை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் பாராட்டித் தள்ளியுள்ளார். 

இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான படம் சூரரைப் போற்று’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. 

இந்த நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம் பெற்ற ‘கையிலே ஆகாசம்’ பாடலைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.

இது குறித்து அவர் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கு கண்ணீர் அருவி மாதிரி வழிந்தது.

தமிழில் சூர்யா படத்தில் ஒரு பாடல். சூர்யா தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார். படத்தோடு பார்க்கும்போது அந்த தருணம் மிகவும் கடினமானது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த பாடல் மிக அழகானது. இதயத்தை தொடுகிறது. இதோடு நான் முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து எழுதினால் எனக்கு கண்ணீர் வரும்…” என்று எழுதியுள்ளார்.

மேலும் இந்த பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றமும் செய்து பகிர்ந்துள்ளார் அமிதாப்பச்சன்.  

இதனைப் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “நன்றி சார். நமக்கு யார் உத்வேகமாக அளிக்கிறார்களோ, அவர்களே நம் பாடலைப் பற்றி குறிப்பிடும்பொழுது மகிழ்ச்சி…” என்று நன்றி தெரிவித்துள்ளார். 

The post “கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” – ‘சூரரைப் போற்று’ பாடலுக்கு அமிதாப்பச்சன் பாராட்டு. appeared first on Touring Talkies.

]]>
“சூர்யா ஒரு நடிப்பு ராட்சசன்” என்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி https://touringtalkies.co/actress-aparna-balamurali-comments-on-actor-suyra-in-soorarai-pottru-movie/ Sun, 29 Nov 2020 13:42:14 +0000 https://touringtalkies.co/?p=10460 ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு ‘சூரரைப் போற்று’ அவர் நடித்த மூன்றாவது தமிழ் திரைப்படம். அந்தப் படத்துக்கு முன்னால் ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள அபர்ணா “சுதாவின் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தது என்னால் என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம்” என்கிறார். சூர்யாவைப் பற்றி குறிப்பிடும் போது “அவருடைய எல்லா படங்களுமே எனக்கு பிடிக்கும் என்றாலும் அவருடைய ‘வாரணம் ஆயிரம்’ படமும் […]

The post “சூர்யா ஒரு நடிப்பு ராட்சசன்” என்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி appeared first on Touring Talkies.

]]>
சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு ‘சூரரைப் போற்று’ அவர் நடித்த மூன்றாவது தமிழ் திரைப்படம்.

அந்தப் படத்துக்கு முன்னால் ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள அபர்ணா “சுதாவின் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தது என்னால் என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம்” என்கிறார்.

சூர்யாவைப் பற்றி குறிப்பிடும் போது “அவருடைய எல்லா படங்களுமே எனக்கு பிடிக்கும் என்றாலும் அவருடைய ‘வாரணம் ஆயிரம்’ படமும் ‘பிதாமகன்’ படமும் என்னை மிகவும் கவர்ந்த படங்கள்” என்று சொல்கின்ற அபர்ணா,
“சூர்யாவை ‘ஒரு நடிப்பு ராட்சசன்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கும்போது பக்கத்திலே இருந்து அவருடைய அர்ப்பணிப்பை பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகச் சிறந்த நடிகராக இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார் சூர்யா..” என்கிறார்.

“ஆர்கிடெக்சர் படித்துள்ள அபர்ணாவுக்கு நன்கு பாடவும் தெரியும். இந்த விஷயம் இசையமைப்பாளர் இமானுக்கு இன்னும் தெரியாது போலிருக்கிறது. தெரிந்தால் நிச்சயமாக அடுத்த படத்திலேயே அபர்ணாவை பாடகி ஆகிவிடுவார். நடிகைகளை பாடகிகள் ஆக்குவதில் அவர்தானே ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்” ஒரு திரை விமர்சகர்.

The post “சூர்யா ஒரு நடிப்பு ராட்சசன்” என்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி appeared first on Touring Talkies.

]]>
சூரரைப் போற்று – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/soorarai-potru-movie-review/ Thu, 12 Nov 2020 04:27:33 +0000 https://touringtalkies.co/?p=9972 ஒரு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் திரைப்படத்தில் ஒரு நடிகர் நடிக்கும்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியான எதிர்பார்ப்புகளை மாஸ் சண்டைக் காட்சிகளை வைத்து பூர்த்தி செய்தால் படத்தின் எதார்த்தம் கெட்டுவிடும். வரலாற்றை அப்படியே எடுத்தால் படம் டாக்குமென்ட்ரி ஆகிவிடும். மிகக் காத்திரமாக திரைக்கதை அமைத்தால் மட்டுமே இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும். இந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் அப்படியான மாஸ் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. அடித்தட்டு நிலையில் வாழும் மதுரை […]

The post சூரரைப் போற்று – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் திரைப்படத்தில் ஒரு நடிகர் நடிக்கும்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

அப்படியான எதிர்பார்ப்புகளை மாஸ் சண்டைக் காட்சிகளை வைத்து பூர்த்தி செய்தால் படத்தின் எதார்த்தம் கெட்டுவிடும். வரலாற்றை அப்படியே எடுத்தால் படம் டாக்குமென்ட்ரி ஆகிவிடும். மிகக் காத்திரமாக திரைக்கதை அமைத்தால் மட்டுமே இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும்.

இந்த சூரரைப் போற்று’ படத்தில் அப்படியான மாஸ் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

அடித்தட்டு நிலையில் வாழும் மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தானான நெடுமாறன் என்ற சூர்யா, எப்படி சுற்றமும் சமூகமும் போற்றும்படியான விமான சேவையை அமைக்கிறார் என்பதுதான் கதை.

‘டெக்கான் ஏர்லைன் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் சூரியா நடிக்கிறார்’ என்ற செய்தி வரும்போதே எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பிற்கு துளியும் வஞ்சனை செய்யாமல் அசத்தி இருக்கிறார் சூர்யா.

சமீப ஆண்டுகளாக அவருடைய படங்களில் ஒரேவிதமான மாடுலேசன் அவரது பாடி லாங்வேஜில் தெரிகிறது என்ற விமர்சனத்தை இப்படத்தில் அடித்து நொறுக்கி இருக்கிறார் சூர்யா.  மிகத் தேர்ந்த நடிப்பு. கங்ராட்ஸ்!

சூர்யாவிற்கு அடுத்து…. ஏன் சில இடங்களில் சூர்யாவையே தூக்கிச் சாப்பிடுகிறார் அபர்ணா பாலமுரளி. சூர்யாவை காதலனாக.. கணவனாக… அவர் ஏற்கும் தருணங்கள் எல்லாம் ‘வாவ்’ ரகம்.

வில்லனாக வரும் பரேஷ், நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில்  காளி வெங்கட், கருணாஸ், ‘பூ’ ராமு என படத்தில் சிங்கிள் ஷாட் கேரக்டர்களும் படத்துடன் பக்காவாக மிங்கிள் ஆகிறார்கள்.

படத்தில் சும்மா எட்டிப் பார்க்கும் ஒரு அட்மாஸ்பியர் கேரக்டரும் ஸ்கோர் பண்ணுகிறது. இது திரைக்கதை ஆசிரியரின் அபார டச்.

ஒரு சாதாரணன் சரித்தரம் படைக்கும் வழக்கமான மோட்டிவேசன் கதை மாதிரி தெரிந்தாலும், படத்தில் பல எதார்த்தங்களை பட் பட் என போட்டு உடைத்துள்ளார் இயக்குநர்.

ஒரு எளியவன் வலியவன் முன் போட்டியிட்டாலோ.. வாழ நினைத்தாலோ அதற்கு அதிகாரத்தின் துணை கொண்டு வலியவன் என்னவெல்லாம் செய்வான் என்ற உண்மையை மிக அற்புதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ஆகப் பெரும் பலமாக ஜீவி பிரகாஷுன் பின்னணி இசையும், பாடல்களும் இருக்கின்றன. ஒளிப்பதிவு மதுரை சோழவந்தான் கிராமத்தையும் அதன் அழகியலையும் அழகாக காட்டியதோடு.. விமான ஓடுதளங்களையும் துல்லியமாக பதிவு செய்துள்ளது.

படத்தின் வசனங்கள் எல்லாமே நறுக்குத் தெறித்தாற் போல செம்ம ஷார்ப். கணவன் மனைவி இடையே உள்ள சிறுசிறு ஈகோ, அவர்களுக்குள் உள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றை மிகச் சிறப்பாக படமாக்கியுள்ளார் சுதா கொங்கரா.

படத்தின் ஆழமான விசயங்கள் நீர்த்துப் போகக் கூடாது என்பதற்காக சில கமர்சியல் விசயங்களை சேர்ப்பது இயல்புதான். சில இடங்களில் சில காட்சிகளில்  சின்ன சின்ன தொய்வு இருந்தாலும் ‘சூரரைப் போற்று’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம்.

காரணம், இப்படம் அந்த அளவுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை படம் பார்ப்பவர்களிடத்தில் விதைத்திருக்கிறது.

படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

The post சூரரைப் போற்று – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கும் சூர்யா https://touringtalkies.co/actor-surya-interview-about-soorarai-potru-movie/ Sat, 31 Oct 2020 09:08:30 +0000 https://touringtalkies.co/?p=9528 ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, இயக்குநர் சுதா கொங்காராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளி கொண்டாட்டமாக வரும் நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் […]

The post ‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கும் சூர்யா appeared first on Touring Talkies.

]]>
ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

சூர்யாவின் நடிப்பு, இயக்குநர் சுதா கொங்காராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டமாக வரும் நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதையொட்டி நாயகன் சூர்யா பேட்டியளித்துள்ளார்.

அது இங்கே :

“எனக்கு வருடா வருடம் ராக்கி கட்டிவிடும் சகோதரி இயக்குநர் சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும்போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து  நட்பாகவே இருப்போமே என்று கூறி அவரிடம் சினிமா பற்றிப் பேசாமல் தவிர்த்தது உண்டு. படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியதே கிடையாது.

ஆனால், ‘இறுதிச் சுற்று’ படத்தைப் பார்த்த பின்பு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு சேர்ந்து ஒரு படம் செய்துவிட வேண்டும் என்று உறுதி செய்தேன். அப்படி செய்த படம்தான் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு இந்தியாவில் யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. இதனால், இந்தப் படத்தை நாமே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

இந்தப் படத்தின் கதைக் கரு ‘SIMPLY FLY’ என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், அதனை 44 பக்கக் கதையாகக் கொடுத்தார் சுதா கொங்கரா. இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நாம் இதில் நடிக்கக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம்தான்.

அவ்வளவு பெரிய விமான போக்குவரத்து துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும்போது, எப்படி நடிக்காமல்விட முடியும்…?

அப்போதிலிருந்து கதையில் பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் இயக்குநருடன் கூடவே பயணித்தேன். இந்த அனுபவம் எனக்கு வேறு எந்தவொரு படத்திலும் கிடைத்ததே கிடையாது.

இந்தியாவின் முகத்தையே ஒரு சிலர்தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கேட்பன் கோபிநாத். ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாக சொல்லலாம் என யோசித்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார் இயக்குநர் சுதா.

ஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் கோபிநாத்தின் உயரிய நோக்கம்.

மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமான பயணமும் எளிய மனிதர்களுக்கு எளிதாக கிடைத்ததாக இருக்க வேண்டும். ‘ஒருவருக்கு தான் கண்ட கனவில் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால் அது சாத்தியப்படும்’ என்று சொல்கிற படமாகவும் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இருக்கும்.

இந்தப் படமே மதுரையில்தான் தொடங்கும். படத்தின் கதையே நீங்கள் கேட்ட மக்களிடமிருந்துதான் தொடங்கும். ஆகையால், எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது கண்டிப்பாக அந்நியப்பட்ட கதையாக இருக்காது.

சில படப்பிடிப்புகளில்தான் நம் மனதுக்குப் பிடித்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம்’ எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம்; புதுசா ஒரு கற்றல் நடக்குது’ என்று சொல்வது மாதிரி அமைந்தது இந்தப் படம்.

மறுபடியும் நான் நேசிக்கும் சினிமாவை ரொம்பவும் ரசித்த அனுபவம், இந்த ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பில்தான் கிடைத்தது.

‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள்தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

இயக்குநர் சுதாவால் என்னை வைத்து கோபிநாத்தின் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. இது ரொம்பவும், அழகான ஒரு பயணமாக இருந்தது. இயக்குநராக அவருடன் பணி புரிந்தது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்ப வைக்க முடியும் என்பதை இந்த ‘சூரரைப் போற்று’ உருவானவிதத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். சுதா என்னிடம், சிரிக்காதே’ என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடிப்பதுதான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் மனைவியிடம் ‘12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா?’ என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய், தரையோடு தரையாக இருப்பது மாதிரியான ஒரு கேரக்டர் எனக்கு.

நான் பிரமாதமான நடிகரெல்லாம் கிடையாது. என்னால் கேமிரா முன்னால் உடனேயெல்லாம் நடிக்க முடியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.

திடீரென்று சுதா என்னை ‘இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். கடைசிவரை ‘வேறு யாரையாவாது வைத்து செய்துவிடுங்கள். எனக்கு 45 வயதாகப் போகிறது’ என்று சொன்னேன்.  ஆனால் அவர் விடாப்பிடியாக என்னையவே நடிக்க வைத்துவிட்டார்.

மீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது. ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன்.

வருடம் முழுக்க 80% உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, இந்தக் கதாபாத்திரத்துக்கு 100% உடற் பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது. அவ்வளவுதான். அதுவும், முதல் நாள் படப்பிடிப்பில் முகத்தில் கிராபிக்ஸுக்காக மார்க் எல்லாம் வைத்தார்கள். ஆனால், அதன் பின்பு நானே அந்த வயதுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டுவிட்டார்கள்.

இதன் படப்பிடிப்புக்கு முன்பேயே அனைத்து விஷயங்களையும் பேசி முடிவு செய்துவிட்டோம். ஆகையால் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக்தான். சுதாவும் ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும்போதுதான் சில காட்சிகள் ஓகே ஆகும்.

இந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா.

க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் ஒரு டிரைவர் வசனம் பேசி நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. அந்த டிரைவரைகூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பார்க்க முடியவில்லை. அவர் பேசிய வசனம் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டுள்ளார் சுதா.

இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில்தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான பயணிகள் விமானம், ஜெட் விமானங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்குகூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.  ஆனால், எங்களுக்குக் கிடைத்தது.

அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளுக்கும், படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.

புகழுக்காகவோ, நாமளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக நான் எப்போதும் சினிமாவில் நடிக்க மாட்டேன். தயாரிக்க மாட்டேன். நாம் எடுக்கின்ற ஒவ்வொரு படமும் திரையுலகத்திலோ அல்லது மக்களிடையோ ஏதாவது ஒரு  தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்… இதுவே எனது கொள்கை..” என்று சொல்லி முடித்தார் நடிகர் சூர்யா.

The post ‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கும் சூர்யா appeared first on Touring Talkies.

]]>
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்..! https://touringtalkies.co/soorarai-potru-movie-trailer/ Mon, 26 Oct 2020 05:27:54 +0000 https://touringtalkies.co/?p=9284 The post சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.

]]>
The post சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.

]]>
‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! https://touringtalkies.co/soorarai-potru-movie-release-postponed-news/ Fri, 23 Oct 2020 04:02:04 +0000 https://touringtalkies.co/?p=9144 சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. சில காரணங்களால், அது தள்ளிப் போவதாக நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். “இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும். இப்போது நான் மனந் திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச […]

The post ‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! appeared first on Touring Talkies.

]]>

சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. சில காரணங்களால், அது தள்ளிப் போவதாக நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும்.

இப்போது நான் மனந் திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச விரும்புகிறேன். ஏனென்றால், நீங்கள்தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறீர்கள் எல்லா வகையிலும். உங்களது பிரதிபலன் பாராத அன்பும் பாராட்டும், உண்மையும்தான் இந்த தகுதியை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறது.

‘சூரரைப் போற்று’  படம் தொடங்கியபோதே இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந்தோம். இதற்கான  படப்பிடிப்புத் தளங்கள் இதுவரை காணாதவை. பணி புரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியாசமானவை மட்டுமல்ல குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தவை.

‘மாறா’  என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும்விதமாக இருந்த அந்த பிரம்மாண்டமான அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.

 படத்தில் விமானப் படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும், அனுமதிகளும் பெற வேண்டியிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால், அது சம்பந்தமாக இந்திய விமானப் படையுடன்  நாங்கள் தொடர்பு கொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது.

படத்தை வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால், சூரரைப் போற்று’ பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது. இது வழக்கமான நடைமுறைதான் வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்.

‘சூரரைப் போற்று’ படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது.  துரதிஷ்டவசமாக சிறு தாமதம் ஆகிறது.

படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்திடும் விஷயம்தான். ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்தத் தாமதத்தை எதிர்பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம்.

இந்த சின்ன இடைவெளியை மாறா’வின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன் தயாரிப்பு நேரமாக எடுத்துக் கொள்ளலாம். இப்படியொரு பாசிட்டிவாக இந்தத் தடங்கலை எடுத்துக் கொள்வோம்.

விரைவில் சூரரைப் போற்று’ படத்தின் சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம். இத்துடன் ஒரு அழகான நட்பைப் பற்றிய பாடலையும் வெளியிடுகிறோம். அது நம் நட்புக்கான அர்ப்பணிப்பாகவும், அன்பின் அடையாளமாகவும் இருக்கும்.”

இவ்வாறு சூர்யா  கூறியுள்ளார்.

The post ‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! appeared first on Touring Talkies.

]]>