Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
siva karthikeyan – Touring Talkies https://touringtalkies.co Tue, 04 Jul 2023 00:59:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png siva karthikeyan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘‘ ரஜினியே தான்!” – சிவகார்த்திகேயனை புகழ்ந்த மிஷ்கின் https://touringtalkies.co/mysskin-praise-siva-karthikeyan-as-rajini-in-maaveeran-audio-launch-function/ Tue, 04 Jul 2023 00:59:12 +0000 https://touringtalkies.co/?p=34048 மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “சிவகார்த்திகேயனை முதலில் பார்த்தபோதே ‘நீ பெருசா சாதிக்கணும்’ என்று சொன்னேன். இப்போது அவர் சாதித்துவிட்டார். நடிகை சரிதா என்னிடம், ‘சிவகார்த்திகேயன் […]

The post ‘‘ ரஜினியே தான்!” – சிவகார்த்திகேயனை புகழ்ந்த மிஷ்கின் appeared first on Touring Talkies.

]]>
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “சிவகார்த்திகேயனை முதலில் பார்த்தபோதே ‘நீ பெருசா சாதிக்கணும்’ என்று சொன்னேன். இப்போது அவர் சாதித்துவிட்டார். நடிகை சரிதா என்னிடம், ‘சிவகார்த்திகேயன் ரஜினியைப் போல அடக்கமானவர்’ என கூறுவார். நான் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை… ரஜினியே தான்” என்றார்.

நடிகை சரிதா மேடையில் பேசும்போது, “சிவகார்த்திகேயனின் லுக்கும், அவரது பேச்சும் ரஜினிபோல் இருப்பதால், இனிமே சிவாவை ‘குட்டி ரஜினி’ என அழைப்பேன்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் நடித்த ‘மெரினா’ படத்தின் இசை வெளியீட்டு விழா வெறும் 50 பேர் முன்னிலையில் நடைபெற்றது. இப்போது இங்கே இத்தனை ரசிகர்கள் சூழ்ந்திருக்கின்றனர். மிகவும் எமோஷனலாக உள்ளது. போன படம் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு. அதுக்கு சாரி. பட் இந்த முறை மிஸ் ஆகாது.

மிஷ்கின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மிஷ்கினுடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. மிஷ்கின் பெரிய வார்த்தையெல்லாம் சொன்னார். ரஜினி மிகப் பெரிய மனிதர். ஆனால், நானும் ரஜினியைப் போல எப்பவும் தன்னடக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். கண்டிப்பாக அப்படி இருப்பேன்” என்றார்.

The post ‘‘ ரஜினியே தான்!” – சிவகார்த்திகேயனை புகழ்ந்த மிஷ்கின் appeared first on Touring Talkies.

]]>
“திட்டமிட்டு செய்யல..தானா வந்திடுது!”  சிவ கார்த்திகேயன் https://touringtalkies.co/my-acting-has-a-rajinikanth-touch-not-done-by/ Tue, 28 Mar 2023 13:58:45 +0000 https://touringtalkies.co/?p=31071 இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ‘1947 இது நமது சுதந்திரத்தின் கதை. ஒரு தனி மனிதனின் கதை. சுதந்திரத்துக்காக நிறைய […]

The post “திட்டமிட்டு செய்யல..தானா வந்திடுது!”  சிவ கார்த்திகேயன் appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ‘1947 இது நமது சுதந்திரத்தின் கதை. ஒரு தனி மனிதனின் கதை. சுதந்திரத்துக்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு உள்ளனர். அதைத்தாண்டி வலி நிறைந்த விஷயங்களை பொன்குமார் கொடுத்துள்ளார். எல்லாருடைய உழைப்பும் இதில் தெரிகிறது. முதல் கதையையே, இப்படி ஒரு கதையாக தேர்வு செய்துள்ள இயக்குனர் பொன்குமார் சவாலை சந்திக்க தயாராக உள்ளார். சவாலை சந்திக்க தயாராக உள்ளவர், சாதிக்க தயாராக உள்ளார் என்று அர்த்தம்.

சினிமாவுக்கு வரும் முன்னர், 1000 மேடைகளுக்கு மேல் ரஜினி சார் போல மிமிக்ரி செய்து தான் வளர்ந்தேன். எனது நடிப்பில் ரஜினிகாந்தின் சாயல் இருக்கிறது. நான் திட்டமிட்டு அதை செய்யவில்லை. தானாகவே வந்து விடுகிறது” என்றார்

The post “திட்டமிட்டு செய்யல..தானா வந்திடுது!”  சிவ கார்த்திகேயன் appeared first on Touring Talkies.

]]>