Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
shakeela – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:05:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png shakeela – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஓங்கி அறைந்த சில்க்!  ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்! https://touringtalkies.co/actress-shakeela-talks-about-silk-smitha/ Mon, 29 Jan 2024 03:05:17 +0000 https://touringtalkies.co/?p=39518 தற்போது யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் ஷகிலா, பேட்டி ஒன்றில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றி கூறியுள்ளது வைரலாகி உள்ளது. அதில், “நானும் சில்க் ஸ்மிதாவும், ஒரு படத்தில் அக்கா தங்கையாக நடித்தோம். அப்போது,சில்க் ஸ்மிதா அறைவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது நான், சில்க் ஸ்மிதாவிடம், ‘அக்கா, எப்படி அடிப்பீங்க, மெதுவா அடிப்பீங்களா’ என்று கேட்டேன். அதற்கு சில்க் ஸ்மிதா, ‘அது ஷாட்ல வந்துடும்.. அது ஒன்னும் டென்சன் இல்ல..’ […]

The post ஓங்கி அறைந்த சில்க்!  ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
தற்போது யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் ஷகிலா, பேட்டி ஒன்றில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றி கூறியுள்ளது வைரலாகி உள்ளது.

அதில், “நானும் சில்க் ஸ்மிதாவும், ஒரு படத்தில் அக்கா தங்கையாக நடித்தோம். அப்போது,சில்க் ஸ்மிதா அறைவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது நான், சில்க் ஸ்மிதாவிடம், ‘அக்கா, எப்படி அடிப்பீங்க, மெதுவா அடிப்பீங்களா’ என்று கேட்டேன். அதற்கு சில்க் ஸ்மிதா, ‘அது ஷாட்ல வந்துடும்.. அது ஒன்னும் டென்சன் இல்ல..’  என்றார்.

ஆனால், அந்த ஷாட்டின் போது இயக்குனர் ஆக்க்ஷன் சொன்னதும் சில்க் ஸ்மிதா, என் கன்னத்தில் ஓங்கி பளார் என்று உண்மையாகவே அடித்துவிட்டார். வலி தாங்காமல், நான் அழுதே விட்டேன். அப்படி ஒரு அடி!

பலர் முன்னிலையிலும் சில்க் ஸ்மிதா என்னை அடித்தது தனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதில் இருந்து எனக்கு சில்க் ஸ்மிதா என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், அவர் இறந்த பிறகு அவரை பற்றி எனக்கு புரிகிறது அவரை போல ஒரு அழகி கிடையாது, மிகவும் திறமைசாலி” என்று ஷகீலா அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

The post ஓங்கி அறைந்த சில்க்!  ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
” வடிவேலு மீது டீ டூ புகார்!: ஷகீலா கொடுத்த ஷாக் https://touringtalkies.co/vadivelu-behaves-like-that-in-shooting-shakeelas-shock/ Wed, 02 Aug 2023 05:26:35 +0000 https://touringtalkies.co/?p=34950 கவர்ச்சி நடிகை ஷகீலா, யு டியுப் சேனல் ஒன்றில் பலரையும் பேட்டி கண்டு வருகிறார். அந்த வரிசையில் நடிகை பிரேம பிரியாவை பேட்டி எடுத்தார். அப்போது,  பிரேம பிரியா “ என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான், எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நானும் ஷூட்டிங்கிற்கு போவேன், ஆனால், வடிவேலு என்னை பார்த்ததும் இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார். மேலும் சுறா படத்தில் வடிவேலுவுடன் நடித்த போது, ஏன் வேண்டாம் […]

The post ” வடிவேலு மீது டீ டூ புகார்!: ஷகீலா கொடுத்த ஷாக் appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சி நடிகை ஷகீலா, யு டியுப் சேனல் ஒன்றில் பலரையும் பேட்டி கண்டு வருகிறார். அந்த வரிசையில் நடிகை பிரேம பிரியாவை பேட்டி எடுத்தார்.

அப்போது,  பிரேம பிரியா “ என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான், எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நானும் ஷூட்டிங்கிற்கு போவேன், ஆனால், வடிவேலு என்னை பார்த்ததும் இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார். மேலும் சுறா படத்தில் வடிவேலுவுடன் நடித்த போது, ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்டேன் அதற்கு அவர் பதில் சொல்லவில்லை” என பிரேம பிரியா சொன்னார்.

அப்போது குறுக்கிட்ட ஷகீலா, “நீ அப்போதே வடிவேலு மீது மீ டூ புகார் கொடுத்து இருக்கலாமே” என்று கேட்க. “எனக்கும் வடிவேலுக்கும் மீ டூ பிரச்சனை எல்லாம் இல்லை, அது வேறு பிரச்சனை” என்று பிரேம பிரியா கூறினார்.

இதை கேட்ட ஷகீலா, “இப்போ வேண்டுமானால், மீ டூ பிரச்சனை இல்லை என்று சொல்லாம். ஆனால், வடிவேலுவை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பாரு.. என்ன கேப்பாருனு எனக்கு தெரியும் “என்றார் ஷகீலா.
இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ” வடிவேலு மீது டீ டூ புகார்!: ஷகீலா கொடுத்த ஷாக் appeared first on Touring Talkies.

]]>
“சொந்த அக்கா ஏமாற்றிவிட்டார்!”: அழுத ஷகிலா https://touringtalkies.co/own-sister-cheated-shakeela-share-her-life/ Mon, 12 Jun 2023 04:44:49 +0000 https://touringtalkies.co/?p=33393 மலையாள சினிமாவில் அரை நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகட்டத்தில் கேரளாவில் ஷகிலாவின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு பிற நடிகர்களின் படங்களுக்கு இல்லாமல் போனது. தவிர,  ஷகிலாவை கேரளாவின் அவமானமாக பிரச்சாரம் செய்து திரையுலகினர் அவரை கேரளாவிலிருந்து துரத்தினர். பிறகு தமிழில் கவர்ச்சி ஆசிரியர், முண்டு உடுத்திய டீக்கடை நாயரின் மனைவி போன்ற கவர்ச்சி கதாபாத்திரங்களில் தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி வருகிறது. தெலுங்கிலும் இதேபோன்ற கதாபாத்திரங்களே ஷகிலாவுக்கு தரப்படுகின்றன. அந்த வாய்ப்புகளும் அரிதான நிலையில் […]

The post “சொந்த அக்கா ஏமாற்றிவிட்டார்!”: அழுத ஷகிலா appeared first on Touring Talkies.

]]>
மலையாள சினிமாவில் அரை நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகட்டத்தில் கேரளாவில் ஷகிலாவின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு பிற நடிகர்களின் படங்களுக்கு இல்லாமல் போனது. தவிர,  ஷகிலாவை கேரளாவின் அவமானமாக பிரச்சாரம் செய்து திரையுலகினர் அவரை கேரளாவிலிருந்து துரத்தினர்.

பிறகு தமிழில் கவர்ச்சி ஆசிரியர், முண்டு உடுத்திய டீக்கடை நாயரின் மனைவி போன்ற கவர்ச்சி கதாபாத்திரங்களில் தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி வருகிறது. தெலுங்கிலும் இதேபோன்ற கதாபாத்திரங்களே ஷகிலாவுக்கு தரப்படுகின்றன.

அந்த வாய்ப்புகளும் அரிதான நிலையில் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்தார்.

தற்போது பிரபலங்களை  பேட்டி எடுக்கிறார். இந்நிலையில் அவர்,” நான் பெரிய பணக்காரி போல் யூடியூப் சேனல்கள் சித்தரித்து வீடியோ வெளியிடுகிறார்கள்.  ஒரு காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 4 லட்சம் சம்பளம் வாங்கியது உண்மைதான்.  ஆனால், என் பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா ஏமாற்றிவிட்டார்.   இதெல்லாம் நான் மீண்டும் சிரமத்துக்கு ஆளேனேன்” என்று ஷகிலா உருக்கமாக கூறியுள்ளார்.

The post “சொந்த அக்கா ஏமாற்றிவிட்டார்!”: அழுத ஷகிலா appeared first on Touring Talkies.

]]>
என்னை விரட்ட நினைத்த மம்மூட்டி:  ஷகிலா அதிரடி பேட்டி https://touringtalkies.co/actress-shakeela-interview-about-mammootty/ Tue, 11 Apr 2023 05:25:27 +0000 https://touringtalkies.co/?p=31470 தமிழ், மலையாளம் என பன்மொழிகளில்  கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஷகிலா. சமீபத்தில் அவர் அளித்த பேட்யில், “ஷகிலா என்றாலே ஆபாச நடிகை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் ஆபாச காட்சியில் நடித்தது இல்லை.  அதே நேரம்,  எனது படங்களில் செக்ஸ் காட்சிகளை பிட்டு போட்டு ஒட்டி ரிலீஸ் செய்தார்கள்.   சென்சார் முடித்த படங்களையே இப்படி செய்திருக்கிறார்கள். இதன் பிறகு நான் நடித்த இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சென்சார் கிடைப்பதே சிக்கலாகிவிட்டது. நான் மோகன்லால் சார் […]

The post என்னை விரட்ட நினைத்த மம்மூட்டி:  ஷகிலா அதிரடி பேட்டி appeared first on Touring Talkies.

]]>
தமிழ், மலையாளம் என பன்மொழிகளில்  கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஷகிலா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்யில், “ஷகிலா என்றாலே ஆபாச நடிகை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் ஆபாச காட்சியில் நடித்தது இல்லை.  அதே நேரம்,  எனது படங்களில் செக்ஸ் காட்சிகளை பிட்டு போட்டு ஒட்டி ரிலீஸ் செய்தார்கள்.   சென்சார் முடித்த படங்களையே இப்படி செய்திருக்கிறார்கள்.

இதன் பிறகு நான் நடித்த இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சென்சார் கிடைப்பதே சிக்கலாகிவிட்டது.

நான் மோகன்லால் சார் ரசிகை. மம்மூட்டி மேலே எனக்கு கோபம் இல்லை. ஆனால், அவர் தான் என் படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தார். இது கூட நான் கேள்விபட்டது தான்.

அவரின் கோபம் நியாயமானது தான். அவர்கள் 5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் 10 லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் படம், ரூ.4 கோடி படத்தை காலி பண்ணால் கோபம் வரத்தானே செய்யும். அப்படி தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும்.

அவர்கள் என்னை தடை செய்ய நினைத்த போது, நானே என் நடிப்பதை நிறுத்திவிட்டேன்’’  என்று அந்த பேட்டியில் ஷகிலா கூறியுள்ளார்.

The post என்னை விரட்ட நினைத்த மம்மூட்டி:  ஷகிலா அதிரடி பேட்டி appeared first on Touring Talkies.

]]>