Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sasireka – Touring Talkies https://touringtalkies.co Sun, 28 May 2023 02:30:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sasireka – Touring Talkies https://touringtalkies.co 32 32 இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா! https://touringtalkies.co/the-singer-sasireka-gave-a-hit-without-ilayaraja/ Sun, 28 May 2023 02:30:14 +0000 https://touringtalkies.co/?p=32863 1977 முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரும் வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது பார்வைபடாமல், எந்த பாடகரும் ஜொலிக்க முடியாது என்ற நிலை. ஆனால் இதை மீறி மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பாடகி குறித்து பத்திரிகையாளர் செல்வம் பேசியுள்ளார். “ 1973-ம் ஆண்டு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த பொண்ணுக்கு தங்கமனசு படத்தில் தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடல் மூலம், திரையுலகில் தடம் பதித்தார்  பி.எஸ்.சசிரேகா.  அந்த காலகட்டத்தில்,  தமிழ் சினிமாவில் பாடகர்கள்,  […]

The post இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா! appeared first on Touring Talkies.

]]>
1977 முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரும் வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது பார்வைபடாமல், எந்த பாடகரும் ஜொலிக்க முடியாது என்ற நிலை. ஆனால் இதை மீறி மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பாடகி குறித்து பத்திரிகையாளர் செல்வம் பேசியுள்ளார்.

“ 1973-ம் ஆண்டு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த பொண்ணுக்கு தங்கமனசு படத்தில் தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடல் மூலம், திரையுலகில் தடம் பதித்தார்  பி.எஸ்.சசிரேகா.  அந்த காலகட்டத்தில்,  தமிழ் சினிமாவில் பாடகர்கள்,  இளைராஜாவின் கூடாரத்துக்கு வராமல், பிரபலமாக முடியாது.

சசிசேராவும் இளையராஜா இசையில் முதன் முதலாக, ஒரு ஓடை நதியாகியது என்ற படத்தில் தென்றல் என்னை முத்தமிட்டது பாடலை பாடினார்.  தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை,கோபுரங்கள் சாய்பதில்லை  உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு வாய்ப்பு அளித்தார் இளையராஜா.

ஆனால் எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோருக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாட வாய்ப்பு அளித்த இளையராஜா, பிறகு சசிரேகாவை கண்டுகொள்ளவில்லை.

இவரின் திறனை அறிந்து அதிகமான வாய்ப்பு கொடுத்தவர்கள் டி.ராஜேந்தர் மற்றும் மனோஜ்கியான்.

விஜயகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்து பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஊமைவிழிகள் படத்தில் மாமரத்து பூவெடுத்து, கண்மணி நில்லு காரணம் சொல்லு என்ற இரு ஹிட் பாடல்களை பாடியிருந்தார். அதேபோல் செந்தூரபூவே படத்தில் இடம்பெற்ற செந்தூரபூவே இங்கு தேன் சிந்த’ பாடல் இன்றைக்கும் கேட்க இனிமையான பாடல்  பட்டியலில் உள்ளது.

அதேபோல் டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவான உயிருள்ளவரை உஷா படத்தில் ‘இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாலோ’, உறவை காத்த கிளி படத்தில் ‘எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி’,  ஒரு தாயின் சபதம் படத்தில் ‘சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது’ என ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிழக்கு சீமையிலே படத்தில் மாணுத்து மந்தையிலே பாடல் பாடியவர் சசிரேகாதான்.

இன்றும் யு டியுபில் ரசிகர்கள், சசிரேகாவின் பாடல்களைத் தேடித்தேடி கேட்டு ரசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா! appeared first on Touring Talkies.

]]>