Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Sanjay dutt – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 Apr 2024 07:56:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Sanjay dutt – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! https://touringtalkies.co/%e0%ae%90%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/ Fri, 26 Apr 2024 07:53:25 +0000 https://touringtalkies.co/?p=41439 நடிகை தமன்னா ஐபிஎல் ஸ்ட்ரீமிங்கில் மோசடி செய்துள்ளதாக மோசடி வழக்கு ஒன்று அவர் மீது பாய்ந்துள்ளது. இதற்காக அவர் முன்பாக ஆஜராக சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.இந்த தகவல் இணையத்திதல் தீயாக பரவி வருகிறது. சுந்தர் சி-யின் அரண்மனை 4 அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் தம்மன்னா நடித்துள்ளார், இந்நிலையில் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் தொடர்பான வழக்கில் தற்போது தமன்னா நன்றாக மாட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தம்மன்னா ஃபேர் பிளே ஆப் மூலம் […]

The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை தமன்னா ஐபிஎல் ஸ்ட்ரீமிங்கில் மோசடி செய்துள்ளதாக மோசடி வழக்கு ஒன்று அவர் மீது பாய்ந்துள்ளது. இதற்காக அவர் முன்பாக ஆஜராக சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.இந்த தகவல் இணையத்திதல் தீயாக பரவி வருகிறது.

சுந்தர் சி-யின் அரண்மனை 4 அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் தம்மன்னா நடித்துள்ளார், இந்நிலையில் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் தொடர்பான வழக்கில் தற்போது தமன்னா நன்றாக மாட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தம்மன்னா ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மோசடியில் தமன்னா ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.நடிகை தமன்னாவுக்கு இதுகுறித்து மகாராஷ்ட்ரா சைபர் ஐடி விங் தற்போது சம்மன் அனுப்பி உள்ளனர். வருகின்ற ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னா இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சைபர் கிரைம் போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதேபோல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்த சட்ட விரோதமான ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஆனால் அவர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக சொல்லி தற்போது வர இயலாது வேறொரு தேதியில் ஆஜராகிரேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.

]]>
‘விடாமுயற்சி’யில் சஞ்சய் தத் வில்லன் https://touringtalkies.co/sanjay-dutt-to-be-villain-in-ajith-kumar-vidamuyarchi/ Thu, 21 Sep 2023 06:11:18 +0000 https://touringtalkies.co/?p=36447 வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் த்ரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க […]

The post ‘விடாமுயற்சி’யில் சஞ்சய் தத் வில்லன் appeared first on Touring Talkies.

]]>
வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் த்ரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் துபாயில் சஞ்சய் தத்தும் அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. இதனால் இந்தப் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சஞ்சய் தத் நடித்துள்ளார்

The post ‘விடாமுயற்சி’யில் சஞ்சய் தத் வில்லன் appeared first on Touring Talkies.

]]>
விபத்து!   நடிகர் சஞ்சய் தத் காயம் https://touringtalkies.co/sanjay-dutt-gets-hurt-on-the-sets-of-kd/ Wed, 12 Apr 2023 17:31:51 +0000 https://touringtalkies.co/?p=31503 பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘கேடி – தி டெவில்’. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் […]

The post விபத்து!   நடிகர் சஞ்சய் தத் காயம் appeared first on Touring Talkies.

]]>
பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘கேடி – தி டெவில்’. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் நடிகர் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் சஞ்சய் தத்தின் முழங்கை, கை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள மாகடி சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சஞ்சய் தத், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விபத்து!   நடிகர் சஞ்சய் தத் காயம் appeared first on Touring Talkies.

]]>
‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத்! https://touringtalkies.co/sanjay-dutt-wraps-up-the-shooting-ofleo/ Fri, 17 Mar 2023 05:31:13 +0000 https://touringtalkies.co/?p=30670 நடிகர் சஞ்சய் தத் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளார். காஷ்மீர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் […]

The post ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சஞ்சய் தத் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளார். காஷ்மீர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சஞ்சய் தத் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதனை புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ள படக்குழு பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

அந்த பதிவில், “நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாக இருந்தீர்கள். எங்கள் படக்குழுவினர் உங்கள் நடிப்பை அருகில் பார்த்து மகிழ்ந்தார்கள். எப்போதும் போல் நீங்கள் சிறப்பாக நடித்தீர்கள். உங்களை சென்னை படப்பிடிப்பில் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

The post ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத்! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத் https://touringtalkies.co/sanjay-dutt-wishes-lokesh-kanagaraj-on-his-birthday/ Tue, 14 Mar 2023 13:42:13 +0000 https://touringtalkies.co/?p=30688 மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி பிரபலடமைந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். 2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் […]

The post லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத் appeared first on Touring Talkies.

]]>
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி பிரபலடமைந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். 2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல இந்திய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சஞ்சய் தத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய உடன் பிறப்பு, மகன், குடும்பம் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு வெற்றி, அமைதி, சந்தோஷம் மற்றும் உடல் ஆரோகியத்தை கொடுப்பார். நான் எப்பொழுதும் உன் வாழ்க்கையில் இருப்பேன். லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

The post லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத் appeared first on Touring Talkies.

]]>