Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
saloon movie – Touring Talkies https://touringtalkies.co Mon, 25 Mar 2024 10:19:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png saloon movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b2%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81/ Mon, 25 Mar 2024 10:19:44 +0000 https://touringtalkies.co/?p=40175 அரசியலை நையாண்டியாக சொல்லும் கன்னி ராசி மற்றும் தர்ம பிரபு படங்களை எடுத்த இயக்குனர் முத்துக்குமரன், இவர் படைப்பில் சலூன் என்ற புதியபடம் உருவாகியுள்ளது.இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் கவிதா பாரதி. இவர் சித்தி தொடருக்கு வசனம் எழுதியவர், அருவி படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, ரைட்டர் படத்தில் வில்லனாக பிரபலமான இவர் சலூன் படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.அதில் சிங்கப்பூர் சலூன் இருக்க இதென்ன வெறும் சலூன் என்று அவரிடம் கேட்டதற்கு, […]

The post அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி appeared first on Touring Talkies.

]]>
அரசியலை நையாண்டியாக சொல்லும் கன்னி ராசி மற்றும் தர்ம பிரபு படங்களை எடுத்த இயக்குனர் முத்துக்குமரன், இவர் படைப்பில் சலூன் என்ற புதியபடம் உருவாகியுள்ளது.இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் கவிதா பாரதி.

இவர் சித்தி தொடருக்கு வசனம் எழுதியவர், அருவி படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, ரைட்டர் படத்தில் வில்லனாக பிரபலமான இவர் சலூன் படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.அதில் சிங்கப்பூர் சலூன் இருக்க இதென்ன வெறும் சலூன் என்று அவரிடம் கேட்டதற்கு, இந்த படம் எப்பவோ ஆரம்பித்து விட்டதாகவும் சலூன் படத்தின் பாதி படப்பிடிப்பின் போது தான் சிங்கப்பூர் சலூன் வெளியானது.இது உள்ளூர் சலூன் தான் என நகைச்சுவையாக சொன்னார்.

இந்த படம் பாலிடிக்ஸ் படம். சுதந்திர போரட்டத்தை சைலன்டா நடத்துறதா வைலன்டா நடத்துறதானு ஊரு ரெண்டா பிரிஞ்சிடும், சைலன்ட ஆதரிக்குறவங்க சைடு வாக்கெடுத்து தலை சீவுவாங்க அந்து ஊரு சைடுவாருபட்டி, வைலன்ட ஆதரிக்குறவங்க தலையை நேரா சீவுவாங்க அவங்க ஏறுவாருபட்டி நான் ஏறுவாருபட்டியோட தலைவர். சைடுவாருபட்டி தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள் என்றார்.

இது இரண்டு ஊருக்கு இடையே நடுக்குற பிரச்சினை பற்றியும் தலைவர்கள் அங்க மக்களை எப்படி வச்சுருக்காங்க அப்புறம் சம கால அரசியலையும் பேசுற கதை தான் இந்த சலூன்.வில்லனா நடிப்பது தான் பிடிக்குமா என்ற கேள்விக்கு நல்லவனாக நடிப்பது போர் அடிக்கும் எனவே வில்லனாக நடிப்பது தான் பிடிக்கும் என்றார். எனக்கு காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை மணிவண்ணன் அவர்களை போல எல்லாம் கலந்த கேரக்டரில் நடிக்க மிகவும் விருப்பம் என கூறினார்.

மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர் அவர்களை பற்றிய கேள்விக்கு, இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்-ஐ கலகலப்பாக வைத்துக் கொள்வார்கள்.நாங்கள் சீரியஸாக இருந்தாலும் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் எதாவது பேசி சிரிக்க வைப்பார்கள் என்றார்.இத்தோடு திரைப்பயணத்தையும் குறித்து பகிர்ந்து கொண்டார்.

கிராமத்தில் இருந்து இயக்குனர் ஆக வேண்டும் என்று வந்தவன் பிரபல பத்திரிக்கையான நக்கீரனில் வேலை செய்து பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன் அப்போது ராதிகா அவர்களின் அறிமுகம் கிடைத்து சித்தி சீரியலுக்கு வசனம் எழுதினேன்.அப்போது எழுத்தாளர்களாக இருப்பவர்களை எழுத்தாளர்களாக மட்டுமே அடையாளப்படுத்துவார்கள் இயக்குனர் ஆவது கடினமாக இருந்தது இந்த பயத்தில் சீரியலை இயக்க ஆரம்பித்து திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்ததால் நடிகனானேன் என தெரிவித்தார்.

The post அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி appeared first on Touring Talkies.

]]>
“பேரம் பேசுவேன்”:   ஆர்.ஜே. பாலாஜி அதிரடி https://touringtalkies.co/rj-balaji-about-singapore-saloon-movie-and-his-vinema-experience/ Thu, 25 Jan 2024 03:53:10 +0000 https://touringtalkies.co/?p=39410 கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்’. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர். அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், […]

The post “பேரம் பேசுவேன்”:   ஆர்.ஜே. பாலாஜி அதிரடி appeared first on Touring Talkies.

]]>
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்’. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க… ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு…’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.

The post “பேரம் பேசுவேன்”:   ஆர்.ஜே. பாலாஜி அதிரடி appeared first on Touring Talkies.

]]>
மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது https://touringtalkies.co/saloon-movie-poster-released/ Sat, 10 Dec 2022 10:26:04 +0000 https://touringtalkies.co/?p=28350 நடிகர் மிர்ச்சி சிவா நேற்றைக்கு தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார். 2012-ம் ஆண்டு சிவா, விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது. 1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றி படமான ‘தில்லு முல்லு’ மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர 2013-ம் ஆண்டு சிவாவின் தனி நாயகனுக்கான முதல் படமாக அமைந்தது. இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் […]

The post மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மிர்ச்சி சிவா நேற்றைக்கு தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.

2012-ம் ஆண்டு சிவா, விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றி படமான ‘தில்லு முல்லு’ மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர 2013-ம் ஆண்டு சிவாவின் தனி நாயகனுக்கான முதல் படமாக அமைந்தது.

இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இதே ஆண்டு வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என்று பத்திரிகைகள் சிவாவை பாராட்டித் தள்ளின.

சிவாவின் அடுத்த வெளியீடான ‘யா யா’-வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான ‘வணக்கம் சென்னை’-யில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

அடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘மசாலா’ படத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது.

2007 ல் மிகப் பெரிய வெற்றியடைந்த ‘சென்னை-600028’-ன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் நடிப்பில் ‘சுமோ’, ‘சலூன்’ என்ற புதிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

இதில் ‘சலூன்’ படத்தின் புதிய போஸ்டர் சிவாவின் பிறந்த நாளையொட்டி நேற்றைக்கு வெளியானது..!

The post மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ https://touringtalkies.co/saloon-movie-preview-news/ Mon, 16 Nov 2020 13:49:21 +0000 https://touringtalkies.co/?p=10107 ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்ம பிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார் தயாரிப்பாளர் இந்தர்குமார். ‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் […]

The post சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ appeared first on Touring Talkies.

]]>
‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்ம பிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார் தயாரிப்பாளர் இந்தர்குமார்.

‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு – இந்தர்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன், ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – சாம்.சி.எஸ், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

‘சலூன்’ கடையின் முதலாளியாக சிவா, தொழிலாளியாக யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

முழுக்க, முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

The post சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ appeared first on Touring Talkies.

]]>