Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
s.j.suriya – Touring Talkies https://touringtalkies.co Sun, 04 Jun 2023 14:18:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png s.j.suriya – Touring Talkies https://touringtalkies.co 32 32 எஸ்.ஜே. சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்! https://touringtalkies.co/priya-bhavani-shankar-gave-lip-lock-to-s-j-suriya/ Sun, 04 Jun 2023 23:16:40 +0000 https://touringtalkies.co/?p=33145 ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே எஸ் ஜே சூர்யா ஒரு பொம்மைக்கு மேக்கப் போடுவது போல் காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஜவுளி கடையில் வேலை செய்யும் அவர் அங்கிருக்கும் பொம்மையை கேட்பதில் இருந்து அந்த பொம்மையை உயிருள்ள ஒரு பெண்ணாகவே நினைப்பது போல் ட்ரெய்லர் செல்கிறது. இப்படி ஒரு கற்பனை உலகத்திற்குள் இருக்கும் அவர் […]

The post எஸ்.ஜே. சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்! appeared first on Touring Talkies.

]]>
ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே எஸ் ஜே சூர்யா ஒரு பொம்மைக்கு மேக்கப் போடுவது போல் காட்டப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஜவுளி கடையில் வேலை செய்யும் அவர் அங்கிருக்கும் பொம்மையை கேட்பதில் இருந்து அந்த பொம்மையை உயிருள்ள ஒரு பெண்ணாகவே நினைப்பது போல் ட்ரெய்லர் செல்கிறது. இப்படி ஒரு கற்பனை உலகத்திற்குள் இருக்கும் அவர் அந்த பொம்மை மேல் மிகவும் பொசசிவ் ஆக மாறுகிறார்.

இதற்கு இடையில் பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யாவுக்குள் இருக்கும் உறவும் காட்டப்படுகிறது. இதிலிருந்தே அந்த பொம்மை பிரியா பவானி சங்கர் தான் என்றும் தெரிகிறது. அந்த அளவுக்கு அவர் பொம்மை போல் அதிகபட்ச மேக்கப்புடன் ட்ரெய்லர் முழுக்க வருகிறார்.

ஒரு கட்டத்தில் மன பாதிப்படைந்து பொம்மைக்காகவே உருகும் எஸ் ஜே சூர்யா சைக்கோ தனமான நடவடிக்கையிலும் ஈடுபடுகிறார். இப்படி பல அதிரடி காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் அதிக கவனம் ஈர்த்துள்ளது. அதிலும் முக்கியமாக எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் இடையே இருக்கும் லிப் லாக் காட்சியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரொம்பவும் அடக்க ஒடுக்கமாக ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியா இப்படி தைரியமாக லிப் லாக் கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பொம்மை வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post எஸ்.ஜே. சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்! appeared first on Touring Talkies.

]]>
100 இசைக் கலைஞர்களால் உருவான ‘வதந்தி’ வெப் சீரிஸின் பின்னணி இசை https://touringtalkies.co/100-music-artistes-create-rerecording-music-of-vadhanthi-web-series/ Wed, 14 Dec 2022 07:20:05 +0000 https://touringtalkies.co/?p=28542 அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைத்தளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார். ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, பின்னணியிசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தொடரில் இடம் பெறும் திருப்பங்களுக்கும், எதிர்பாராத சுவாரசியமான திடீர் திருப்பங்களுக்கும் […]

The post 100 இசைக் கலைஞர்களால் உருவான ‘வதந்தி’ வெப் சீரிஸின் பின்னணி இசை appeared first on Touring Talkies.

]]>
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைத்தளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார்.

ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, பின்னணியிசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தொடரில் இடம் பெறும் திருப்பங்களுக்கும், எதிர்பாராத சுவாரசியமான திடீர் திருப்பங்களுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் பின்னணியிசை அமைந்திருக்கிறது.

ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் இசையமைப்பாளரான சைமன் கிங், இந்த தொடரைப் பார்வையாளர்களிடத்தில் பிரத்யேகமாக அடையாளப்படுத்தும் வகையில் முகப்பு பாடலை அமைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.

தொடரின் துவக்கத்தில் இடம் பெறும் இந்தப் பாடல், நாற்பது பாடகர்களால் பாடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் கிங், இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து நூறு இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உத்வேகம் பெற்ற உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து இதனை உருவாக்கியிருக்கிறார்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் சைமன் கிங் மேலும் பேசுகையில், ”வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பின்னணியிசையை ஹங்கேரி நாட்டில் உள்ள பாரம்பரியமிக்க புடாபெஸ்ட்டில் ஒன்றிணைக்க தீர்மானித்தோம்.

நாங்கள் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பாடல்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக முற்பட்டபோது, முதலில் பாடகர் குழுவை கண்டறிவது சவாலாக இருந்தது. நிறைய குரல்கள் தேவைப்பட்டன. அவர்களால் துல்லியமாக உச்சரிக்கவும், இனிமையாக பாடவும் வேண்டும்.

நமது பாடலாசிரியர் கு.கார்த்திக் பழங்கால தமிழ் இலக்கிய உரையை பயன்படுத்தி மிக பழமையான தமிழ் பேச்சு வழக்கில் பாடல் வரிகளை எழுதினார். இது காலப்போக்கில் பின்னோக்கி செல்வதால், தற்போதைய தமிழர்கள் பலர் அடையாளம் காண மாட்டார்கள்.

எனவே வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும் என்பதற்காக, சென்னையை சேர்ந்த இசைக் கலைஞர் அகஸ்டின் பால் அவர்களின் தலைமையில் குரல்களை கண்டறியும் பணியைத் தொடங்கினோம். அவர் 47 குரல்களை கண்டறிந்து பயிற்சி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நாங்கள் பழைய தமிழ் பேச்சு வழக்குடன் மேற்கத்திய பாரம்பரிய பாடலுடன் குரல்களை பதிவு செய்தோம். பாடகர்களும், பாடகிகளும் பாடத் தொடங்கியவுடன், இயக்குநர் ஆண்ட்ரூசும், நானும் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதனை உணர்ந்தோம்.

இதைத் தொடர்ந்து இசைக் கருவிகளை இசைக்கும் இசை கலைஞர்கள் மற்றும் இசைக் குழுவை தேர்ந்தெடுப்பது சவாலாக இருந்தது. இந்த விசயம் தொடர்பாக நான் புடாபெஸ்ட்க்கு சென்றபோது, அங்கு ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த எனது நண்பரை சந்தித்தேன். அவருடைய உதவியால் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து பாடலை பதிவு செய்ய தீர்மானித்தோம்.

இது ஒரு அற்புதமான மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. நாங்கள் அதை பதிவு செய்த அந்த அரங்கத்தில் என்னுடைய இசை உயிர்ப்புடன் உலா வந்ததை கண்டு மிகவும் நெகிழ்ந்தேன். இது எனக்கு ஒரு அதிசயமான தருணமாகவும் அமைந்திருந்தது.” என்றார்.

இதனிடையே இது ஒரு வலைதள தொடரின் துவக்க பாடல் மட்டுமல்ல. சைமன் கிங், வலைதள தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கான பிரத்யேக பின்னணி இசை குறிப்பையும், கதைக்களத்தில் நிகழும் முக்கிய தருணங்களுக்கான இசைக் குறிப்பையும் இங்கு உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர் மற்றும் காயத்ரியின் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடர், பார்வையாளர்களை வெலோனியின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.

கொலை குறித்த விசாரணை, வதந்திகளால் திசை மாறி செல்லும்போது உறுதிமிக்க காவல்துறை அதிகாரியான விவேக், உண்மையை கண்டறிவதில் இறுதிவரை துடிப்புடன் பணியாற்றுகிறார்.

இந்தத் தொடரில் எஸ்.ஜே.சூர்யாவுடன் சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர கலைஞர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

The post 100 இசைக் கலைஞர்களால் உருவான ‘வதந்தி’ வெப் சீரிஸின் பின்னணி இசை appeared first on Touring Talkies.

]]>
ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் https://touringtalkies.co/vadhanthi-web-series-gets-positive-reviews-from-fans-and-critics/ Mon, 05 Dec 2022 04:35:50 +0000 https://touringtalkies.co/?p=28038 ‘எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச் சிறந்த படைப்பு -வதந்தி’, ‘ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ்.ஜே.சூர்யா’ என இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும், விமர்சகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள். டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று […]

The post ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.

]]>
‘எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச் சிறந்த படைப்பு -வதந்தி’, ‘ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ்.ஜே.சூர்யா’ என இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும், விமர்சகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள்.

டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள், ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரைக் காண்பதற்கு பேரார்வம் கொண்டிருந்தனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியானது. ஏராளமான ரசிகர்கள் விடியற்காலை வரை காத்திருந்து எஸ்.ஜே.சூர்யாவை டிஜிட்டல் தளத்தில் கண்டு ரசித்தனர்.

வதந்திகள், பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் வலையில் சிக்கி இருந்தாலும், உண்மையை வெளிக் கொண்டு வரும்வரை மனம் திரும்ப மறுக்கும் ஒரு சிக்கலான ஆனால் உறுதியான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களும் அவரது தனித்துவமான நடிப்பைப் பாராட்டுகிறார்கள்.

எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், இந்த தொடரில் எஸ்.ஜே சூர்யாவிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிகொனந்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்கான பட்டியலில் இந்த தொடரும் இடம்பெறும். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி, எட்டு அத்தியாயங்களை கொண்டதாக இருந்தாலும், ரசிகர்கள் இந்த தொடரை முழுமையாக கண்டு ரசித்து, தங்களது விமர்சனங்களையும், எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட சில விமர்சனங்களை இங்கே காணலாம்….

சில்வர் ஆரிப் எனும் ரசிகரின் பதிவு… ” ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான வதந்தி எங்களை ஏமாற்றவில்லை. தரமான படைப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் மிகப் பெரும் படைப்பாக உருவாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, எங்களை சிறந்த நடிப்பின் மூலம் வியக்க வைத்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் பள்ளி பாடப் புத்தகத்தில் எஸ் ஜே சூர்யாவின் தனித்துவமான நடிப்பு குறித்த ஒரு அத்தியாயம் இடம்பெறும் என நம்புகிறேன்.”

ரிச்சர்ட் மகேஷ் என்பவரின் பதிவில், ” எஸ். ஜே. சூர்யாவின் கம்பீரமான நடிப்பில் வெளியாகி இருக்கும் மற்றொரு படைப்பு. எந்த இடங்களிலும் குறை கூற முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு திகில் கதையை நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார். வெலோனியாக நடித்திருக்கும் நடிகை சஞ்சனா, முழு தொடரின் ஆன்மாவாக பரவி, ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இதனை உருவாக்கிய புஷ்கர் -காயத்ரிக்கும் பாராட்டுகள்..!” என பதிவிட்டிருக்கிறார்.

நித்யா எனும் ரசிகையின் பதிவில்,” வதந்தி இதயத்தை கனமாக்கிய தொடர்..! எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு உங்களை உணர்வுபூர்வமாக தொடருடன் இணைக்கும். என்னை பொருத்தவரை எத்தனை காட்சிகளில் கண்ணீர் வந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் எஸ். ஜே. சூர்யாவின் சிறப்பான நடிப்பை காணலாம். இயக்குநரால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தொடர். அவருக்கும் நன்றி” என பகிர்ந்திருக்கிறார்.

யூமரி பாலன் எனும் ரசிகரின் பதிவில், ” என்ன ஒரு தொடர்..! இந்த தொடரில் பங்களிப்பு செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக தலைவர் எஸ் ஜே சூர்யா சார், மது அருந்தும் காட்சியும், வசனமும் எனக்கு இறைவி திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியை நினைவு படுத்தியது. அருமை.. தொடர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..” என குறிப்பிட்டிருக்கிறார்.

வி வேலன் என்பவரின் பதிவில், ” வதந்தி- எஸ் ஜே சூர்யா நடிப்பில் வேட்டையாடியிருக்கும் தொடர். ஒளிப்பதிவாளர், பின்னணி இசை, கதை, நடிப்பு அனைத்தும் பிரமாதம். இதன் மூலம் எஸ் ஜே சூர்யாவால் நடிக்க முடியாத வேடம் ஏதும் உண்டா? என்ற அளவிற்கு அவர் நடித்திருக்கிறார். அத்துடன் இதைக் கடந்து அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் ? எஸ் ஜே சூர்யா ஒரு நேச்சுரல் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.” என பகிர்ந்திருக்கிறார்.

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரில், எஸ். ஜே. சூர்யாவின் அபாரமான நடிப்பு திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் அன்பு மழையிலும், பாராட்டிலும் எஸ் ஜே சூர்யா மூழ்கி விட்டார். இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக ஆளுமை இருந்தாலும், பல திறமையான படைப்புகளை வழங்கி இருந்தாலும், நடிகராக வேண்டும் என்ற அவரது அசலான ஆசை, இந்த தொடரில் நிறைவேறி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை மலை அளவுக்கு புகழ்ந்து பேசும் நிலை உருவாகி, தொடர்கிறது.

The post ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.

]]>
“இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை https://touringtalkies.co/vadhanthi-web-series-release-news/ Tue, 22 Nov 2022 19:00:58 +0000 https://touringtalkies.co/?p=27478 அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி […]

The post “இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2-ம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ‘ வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ்  தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ் ஜே சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ”என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் தயாராகி அமேசான் பிரைம் வீடியோ எனும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்து முதன்முதலாக வலைத்தள தொடரில் நடித்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.

இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன்முதலாக வலைத்தள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017-ம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம், ‘நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.

தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் தெளிவான திட்டமிடல், ப்ரைம் வீடியோவின் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கடின உழைப்பு…  இவையெல்லாம் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள். திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும்.

அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்.” என்றார்.

The post “இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>