Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Releases – Touring Talkies https://touringtalkies.co Thu, 18 May 2023 17:11:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Releases – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! https://touringtalkies.co/list-of-theatre-and-ott-releases-this-week/ Wed, 17 May 2023 05:10:04 +0000 https://touringtalkies.co/?p=32542 பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2. சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் […]

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின.

தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.

இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2.

சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படமும் இந்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்காக FAST X திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வின் டீசல், ஜஸ்டின் லின், ஜேசன் மோமோ, அலன் ரிச்சசன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் ஆந்தாலஜி தொடராக உருவாகியுள்ள ‘மாடர்ன் லவ் சென்னை’ நாளை முதல் (மே 18) அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குநர்கள் இந்த தொடரை இயக்கியுள்ளனர். இளையராஜா, யுவன், ஜிவி பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இந்த தொடருக்கு இசையமைத்துள்ளனர்.

மேலும், மஹத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வரும் 19ம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடியில் ரிலீஸாகிறது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாள் பத்மநாபன்  இயக்கியுள்ளார்.

இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் பூக்களம் படம் டிஸ்னி பிளஸ் தளத்திலும், அயல்வாசி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்துள்ள சென்டிமீட்டர் டென்ட்கொட்டா ஓடிடியிலும் வெளியாகிறது.

தெலுங்கில் விருபாக்ஷா திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ஏஜெண்ட் படம் சோனி லிவ் ஓடிடியிலும் வெளியாகிறது. அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிஸ்ஸிங், தி சன், மியூட்டட் வெப் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதுதவிர இன்னும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
“குலசாமி” : மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது   https://touringtalkies.co/kulasamy-releases-in-theaters-worldwide-from-may-5/ Sat, 22 Apr 2023 05:00:55 +0000 https://touringtalkies.co/?p=31771 MIK Productions தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. “ சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. மேலே கூறப்பட்ட தேதியில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் […]

The post “குலசாமி” : மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது   appeared first on Touring Talkies.

]]>
MIK Productions தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’.

“ சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. மேலே கூறப்பட்ட தேதியில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை.

எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு 21.04.23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் 05.05.23 அன்று மாற்றப்பட்டுள்ளது.

The post “குலசாமி” : மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது   appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் கமல் https://touringtalkies.co/ponniin-selvan-2-kamal-releasing-music-trailer/ Tue, 28 Mar 2023 13:39:16 +0000 https://touringtalkies.co/?p=31060 மணிரத்னத்தின் இயக்கத்தில்   பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை […]

The post பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் கமல் appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னத்தின் இயக்கத்தில்   பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், மார்ச் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினர் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கலந்து கொள்வதாக லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெர்விக்கப்பட்டுள்ளது. இந்த டிவீட்டில் உலக நாயகன் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் கமல் appeared first on Touring Talkies.

]]>