Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ranbir kapoor – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Mar 2024 08:01:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ranbir kapoor – Touring Talkies https://touringtalkies.co 32 32 மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/ Thu, 28 Mar 2024 08:01:00 +0000 https://touringtalkies.co/?p=40394 சாய் பல்லவி தற்போது நாக சைதன்யாவுடன் “தண்டேல்” தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். “தண்டேல்” படத்தில் நாக சைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை காதல் கொள்ளும் உத்தரகாண்ட் பெண்ணாக சாய் பல்லவி நடிக்கிறார். அவர் உத்தரகாண்ட் மொழி பேசி நடிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு உத்தராந்திரா உச்சரிப்பைக் கற்றுக்கொடுக்க, ஒரு பேச்சு வழக்கு நிபுணரை இயக்குநர் சந்து மொண்டேடி நியமித்திருக்கிறார். நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்தாலும், தெலுங்கு மொழி சரளமாக பேசுவார். இப்போது உத்தராந்திரா […]

The post மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி appeared first on Touring Talkies.

]]>
சாய் பல்லவி தற்போது நாக சைதன்யாவுடன் “தண்டேல்” தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். “தண்டேல்” படத்தில் நாக சைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை காதல் கொள்ளும் உத்தரகாண்ட் பெண்ணாக சாய் பல்லவி நடிக்கிறார். அவர் உத்தரகாண்ட் மொழி பேசி நடிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு உத்தராந்திரா உச்சரிப்பைக் கற்றுக்கொடுக்க, ஒரு பேச்சு வழக்கு நிபுணரை இயக்குநர் சந்து மொண்டேடி நியமித்திருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்தாலும், தெலுங்கு மொழி சரளமாக பேசுவார். இப்போது உத்தராந்திரா பேச்சு வழக்கில் சிறப்பு பயிற்சி பெற்று வரும் அவர் இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அமீர் கானின் மகன் ஜுனைத் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகி நடித்துள்ள நடிகை சாய் பல்லவி, அடுத்து ரன்பீர் கபூரின் பிரமாண்ட கனவு படமான ராமாயணத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் சீதா தேவியாக நடிக்க இருக்கிறார்.

இந்தி படத்தில் பணிபுரியும் போது ஆங்கிலத்தில் பேசி சமாளித்தவர், இப்போது இந்தி மொழியும் கற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

The post மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி appeared first on Touring Talkies.

]]>
ரூ.1000 கோடியை  நெருங்கும் ’அனிமல்’ பட வசூல்! https://touringtalkies.co/animal-film-collection-close-to-rs-1000-crore/ Mon, 18 Dec 2023 00:06:27 +0000 https://touringtalkies.co/?p=38944 நடிகர் ரன்பீர் கபூர் வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம்  டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் […]

The post ரூ.1000 கோடியை  நெருங்கும் ’அனிமல்’ பட வசூல்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரன்பீர் கபூர் வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படம்  டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் வெளியாகி 16 நாட்களில் ரூ.817.36 கோடி வசூலித்துள்ளது. வார இறுதி நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

ஆகவே ஒரு சில நாட்களில் அனிமல் படம் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.1000 கோடியை  நெருங்கும் ’அனிமல்’ பட வசூல்! appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் பட வசூலை முறியடித்த ’அனிமல்’ ரூ.650 கோடி வசூல் சாதனை! https://touringtalkies.co/animal-beat-jailer-film-collection/ Sun, 10 Dec 2023 01:41:08 +0000 https://touringtalkies.co/?p=38684 ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சனங்கள் பல இருந்தாலும் வசூலில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இதுவரை இப்படம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அனிமல் உலகளவில் ரூ. 650 கோடிக்கும் மேல் […]

The post ஜெயிலர் பட வசூலை முறியடித்த ’அனிமல்’ ரூ.650 கோடி வசூல் சாதனை! appeared first on Touring Talkies.

]]>
ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சனங்கள் பல இருந்தாலும் வசூலில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இதுவரை இப்படம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அனிமல் உலகளவில் ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

ரூ. 650 கோடி வசூல் செய்தது மூலம் இந்த ஆண்டு இந்தியளவில் அதிகம் வசூல் செய்த ஜெயிலர் வசூலான ரூ.635 கோடி படத்தின் மொத்த வசூல் சாதனையையும் அனிமல் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

The post ஜெயிலர் பட வசூலை முறியடித்த ’அனிமல்’ ரூ.650 கோடி வசூல் சாதனை! appeared first on Touring Talkies.

]]>
ரன்பீர் கபூரின் தீவிரமான ரசிகன்  நான் .! நடிகர் மகேஷ்பாபு https://touringtalkies.co/i-am-a-big-fan-of-ranbir-kapoor-actor-mahesh-babu/ Tue, 28 Nov 2023 00:27:32 +0000 https://touringtalkies.co/?p=38347 இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமாரின் டி சீரிஸ், முராத் கெடானியின் சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம் டிச.1-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் […]

The post ரன்பீர் கபூரின் தீவிரமான ரசிகன்  நான் .! நடிகர் மகேஷ்பாபு appeared first on Touring Talkies.

]]>
இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமாரின் டி சீரிஸ், முராத் கெடானியின் சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம் டிச.1-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற அனிமல் பட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மகேஷ்பாபு, எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மகேஷ் பாபு, “நான் ஒருமுறை ரன்பீர் கபூரை சந்திக்கும்போதே இதைச் சொன்னேன். அவர் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டாரா என்பது தெரியாது. இப்போதும் இந்த மேடையில் சொல்கிறேன். நான் ரன்பீர் கபூரின் தீவிரமான ரசிகன். இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” என புகழ்ந்தார். இதையடுத்து பேசிய நடிகர் ரன்பீர் கபூர், ‘ஜெய் பாபு’ என கோஷமிட்டார். பின்னர், “நான் சந்தித்த முதல் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. ‘ஒக்கடு’ படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு மெசேஜ் செய்தேன். அதற்கு அவர் நன்றி கூறி ரிப்ளை செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்து எங்கள் படத்துக்கு ஆதரவளித்ததற்கு நன்றி என தெரிவித்தார் .

 

The post ரன்பீர் கபூரின் தீவிரமான ரசிகன்  நான் .! நடிகர் மகேஷ்பாபு appeared first on Touring Talkies.

]]>
’அனிமல்’ படத்திலிருந்து  மீண்டும் ஒரு பாடல் வெளியீடு.! https://touringtalkies.co/another-song-release-from-the-movie-animal/ Sat, 28 Oct 2023 00:46:27 +0000 https://touringtalkies.co/?p=37289 பை  மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும்  “அனிமல்”  படத்தின் அருமையான  தமிழ்ப் பாடல் டிராக் ‘போகாதே’தற்போது வெளியாகியுள்ளது.! அனிமல் படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’  பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அன்பை  மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் இந்த போகாதே பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது. பாடகர் கார்த்திக்  குரலில் வெளிவந்திருக்கும்  ‘போகாதே’ பாடல் அட்டகாசமான ஜோடிகளான  ரன்பீர் கபூர் […]

The post ’அனிமல்’ படத்திலிருந்து  மீண்டும் ஒரு பாடல் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
பை  மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும்  “அனிமல்”  படத்தின் அருமையான  தமிழ்ப் பாடல் டிராக்போகாதேதற்போது வெளியாகியுள்ளது.!

அனிமல் படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’  பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அன்பை  மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் இந்த போகாதே பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

பாடகர் கார்த்திக்  குரலில் வெளிவந்திருக்கும்  ‘போகாதே’ பாடல் அட்டகாசமான ஜோடிகளான  ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை  ஆழமாக வெளிப்படுத்துகிறது. ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘அனிமல் ஒரு க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.

பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து  அனிமல் படத்தைத் தயாரிக்கின்றன. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் அனிமல் திரைப்படம்  டிசம்பர் 1

ஆம் தேதி வெளியாகிறது.

The post ’அனிமல்’ படத்திலிருந்து  மீண்டும் ஒரு பாடல் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
நடிகருக்கு அமலாக்கத்துறை  சம்மன்! https://touringtalkies.co/ranbir-kapoor-summoned-by-ed/ Wed, 04 Oct 2023 23:38:37 +0000 https://touringtalkies.co/?p=36859 ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனம் செயல்படுகிறது. இது  கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக  அமலாக்கத்துறை கண்டறிந்தது. இதையடுத்து மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கொல்கத்தா, போபால், மும்பை ஆகிய இடங்களில் 417 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தது. இந்த செயலியை விளம்பரம் செய்ய ரன்பீர் கபூர் பணம் வாங்கி இருப்பதாகவும் சமீபத்தில் அந்த செயலியின் முக்கியப் பிரமுகராகச் சொல்லப்படும் ஒருவரின் திருமணத்தில் அவர் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

The post நடிகருக்கு அமலாக்கத்துறை  சம்மன்! appeared first on Touring Talkies.

]]>
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனம் செயல்படுகிறது. இது  கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக  அமலாக்கத்துறை கண்டறிந்தது.

இதையடுத்து மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கொல்கத்தா, போபால், மும்பை ஆகிய இடங்களில் 417 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தது.

இந்த செயலியை விளம்பரம் செய்ய ரன்பீர் கபூர் பணம் வாங்கி இருப்பதாகவும் சமீபத்தில் அந்த செயலியின் முக்கியப் பிரமுகராகச் சொல்லப்படும் ஒருவரின் திருமணத்தில் அவர் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் வருகிற 6 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சொல்லியுள்ளது. ரன்பீர் கபூரைத் தவிர, குறைந்தது 15 முதல் 20 பிரபலங்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரபலங்கள் அனைவருக்கும் ஹவாலா மூலம் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post நடிகருக்கு அமலாக்கத்துறை  சம்மன்! appeared first on Touring Talkies.

]]>
ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு https://touringtalkies.co/rashmika-mandanna-first-look-out-from-ranbir-kapoor-animal/ Sun, 24 Sep 2023 03:41:12 +0000 https://touringtalkies.co/?p=36542 ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ப்ரீ டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. […]

The post ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ப்ரீ டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் இறுதிகட்ட பணிகள் தாமதமானதால் டிசம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவரது கதாபாத்திர பெயர் ‘கீதாஞ்சலி’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’அனிமல்’ படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனில் கபூரின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது.

The post ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>