Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
rahman – Touring Talkies https://touringtalkies.co Wed, 29 Nov 2023 01:30:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png rahman – Touring Talkies https://touringtalkies.co 32 32 இசைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்:சிஸ்டத்தை  மாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்! https://touringtalkies.co/music-artist-credit-system-a-r-rahman/ Tue, 28 Nov 2023 01:25:24 +0000 https://touringtalkies.co/?p=38356   புகழ் பெற்ற சினிமா  இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப் படங்களுக்கு இசையமைத்து  ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தவர். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ரோஜா படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே நேஷனல் விருது கிடைத்தது. மேலும் இந்த படத்தின் பாடல் ரெக்கார்ட் கேசட் கவரில் பெயர் […]

The post இசைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்:சிஸ்டத்தை  மாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>
 

புகழ் பெற்ற சினிமா  இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப் படங்களுக்கு இசையமைத்து  ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ரோஜா படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே நேஷனல் விருது கிடைத்தது. மேலும் இந்த படத்தின் பாடல் ரெக்கார்ட் கேசட் கவரில் பெயர் சேர்த்த போது எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாத ஒரு விஷயத்தை ஏ.ஆர். ரகுமான் செய்தார்.

தனது பெயருடன் அவருடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களின் பெயர்களையும் சேர்த்து கொண்டார் என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இயக்குனர்,நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். வீடியோ கீழே……

The post இசைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்:சிஸ்டத்தை  மாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>
“புலம்பாதீங்க போராடுங்க!”: ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடி குறித்து தங்கர் பச்சான் கருத்து! https://touringtalkies.co/dont-cry-do-fight-thangar-bachchan-comments-on-rahmans-show-mess/ Wed, 13 Sep 2023 03:29:33 +0000 https://touringtalkies.co/?p=36196 ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் டிக்கெட் வாங்கிச் சென்றவர்களுக்கு கார் பார்க்கிங், இருக்கை ஒதுக்கப்படவில்லை. 25 ஆயிரம் பேருக்கான இருக்கைகள் ஏற்பாடு செய்துவிட்டு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்று புகார் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் […]

The post “புலம்பாதீங்க போராடுங்க!”: ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடி குறித்து தங்கர் பச்சான் கருத்து! appeared first on Touring Talkies.

]]>
ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் டிக்கெட் வாங்கிச் சென்றவர்களுக்கு கார் பார்க்கிங், இருக்கை ஒதுக்கப்படவில்லை.

25 ஆயிரம் பேருக்கான இருக்கைகள் ஏற்பாடு செய்துவிட்டு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்று புகார் எழுந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும். இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை!

இது போன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர். மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும்! அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “புலம்பாதீங்க போராடுங்க!”: ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடி குறித்து தங்கர் பச்சான் கருத்து! appeared first on Touring Talkies.

]]>
“பேசும்முன் யோசிக்கவும்”: ரஹ்மானின் மகள் கதீஜா ஆவேசம் https://touringtalkies.co/think-before-you-speak-rahmans-daughter-khadija/ Wed, 13 Sep 2023 03:21:45 +0000 https://touringtalkies.co/?p=36181 சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிந்த கருத்து: “நேற்று இரவு முதல் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போன்று […]

The post “பேசும்முன் யோசிக்கவும்”: ரஹ்மானின் மகள் கதீஜா ஆவேசம் appeared first on Touring Talkies.

]]>
சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிந்த கருத்து: “நேற்று இரவு முதல் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போன்று சித்தரித்து வருகின்றனர். சிலர் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே 100 சதவீத காரணம். ஆனாலும் தானே பொறுப்பு என ரஹ்மான்  பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார்.

அவர், 2016ல்,  மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை, கோவை, மதுரையில் ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சி நடத்தி நிதி அளித்தார்.

2018ல், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உதவினார்.

2020ல், கரோனா காலகட்டத்தின்போது பல குடும்பங்களுக்கு அந்த மாதத்துக்கு தேவையான உதவிகளை செய்தார்.

2022ல்,  லைட்மேன்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு இலவச இசை நிகழ்ச்சி நடத்தினார்” என்று பதவிட்டுள்ள கதீஜா, இறுதியாக, “பேசும்முன் யோசிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post “பேசும்முன் யோசிக்கவும்”: ரஹ்மானின் மகள் கதீஜா ஆவேசம் appeared first on Touring Talkies.

]]>
ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்த முதல் படம் ரோஜா இல்லை! https://touringtalkies.co/kavignar-vairamuthu-said-about-ar-rahman-first-movie/ Thu, 25 May 2023 01:47:32 +0000 https://touringtalkies.co/?p=32765 ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு முன் எம்.எஸ்.வி, இளையராஜா ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார். பெரும்பாலும் ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைக்கும் படங்களுக்கு கவிஞர் வைரமுத்துதான் பாடல்கள் எழுதி வந்தார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா இல்லை.  அமீர்ஜன் இயக்கிய வணக்கம் வாத்தியாரே தான் முதல் படம். இந்த படம் தயாராகும்போது தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என்பதால், இளையராஜாவிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம், […]

The post ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்த முதல் படம் ரோஜா இல்லை! appeared first on Touring Talkies.

]]>
ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு முன் எம்.எஸ்.வி, இளையராஜா ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார்.

பெரும்பாலும் ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைக்கும் படங்களுக்கு கவிஞர் வைரமுத்துதான் பாடல்கள் எழுதி வந்தார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா இல்லை.  அமீர்ஜன் இயக்கிய வணக்கம் வாத்தியாரே தான் முதல் படம். இந்த படம் தயாராகும்போது தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என்பதால், இளையராஜாவிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம், கீபோர்டு மட்டும் வைத்து இந்த படத்திற்கு மொத்த இசையை அமைக்க முடியுமா என்று கேட்டனர்.

இதற்கு ஓ.கே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், வி.ஆர்.சம்பத்குமாருடன் இணைந்து ஒரே நாளில் 8 மணி நேரத்தில் கீபோர்டு மூலம் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தார்.

கார்த்தி, சரண்யா, ராதாரவி, ஜெய்சங்கர், அனுராதா உள்ளிட்ட பலர் நடித்த வணக்கம் வாத்தியாரே 1991-ம் ஆண்டு வெளியானது” என்று வைரமுத்து கூறியுள்ளார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்த முதல் படம் ரோஜா இல்லை! appeared first on Touring Talkies.

]]>
ரகுமான் கடற்படை வீரராக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ https://touringtalkies.co/operation-arabima-starring-rahman-as-a-marine-soldier/ Tue, 10 Aug 2021 07:03:11 +0000 https://touringtalkies.co/?p=16921 முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ‘துருவங்கள் பதினாறு’ படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற் படை அதிகாரியாக வருகிறார் ரகுமான். ரகுமானுடன், மலையாள நடிகர் டினி டாம், பாலாஜி, ‘நாடோடிகள்’ அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த ‘ஆபரேஷன் அரபைமா’ படத்திற்கு […]

The post ரகுமான் கடற்படை வீரராக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ appeared first on Touring Talkies.

]]>
முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

‘துருவங்கள் பதினாறு’ படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற் படை அதிகாரியாக வருகிறார் ரகுமான்.

ரகுமானுடன், மலையாள நடிகர் டினி டாம், பாலாஜி, நாடோடிகள்’ அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆபரேஷன் அரபைமா’ படத்திற்கு இசை – பிரம்மானந்தன், ஒளிப்பதிவு – ஃபீனிக்ஸ் உதயன். பாடல்கள் – முருகன் மந்திரம், நிர்வாகத் தயாரிப்பு – ஏழுமலை சரணவன். இணை தயாரிப்பு – ஜெயின் ஜார்ஜ். தயாரிப்பு – டைம் அண்ட் டைட் ப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ்.

நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்துகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் வெற்றிகரமான செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம்தான், ‘ஆபரேஷன் அரபைமா’.

படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார்.

கேரளா போலீஸ் கமாண்டோ படையின் துணை கண்காணிப்பாளர் அஜித்குமார் மற்றும் நேஷனல் செக்யூரிட்டி கார்டு கமான்டோ பயிற்சியாளர் கேப்டன் அனில்குமார் ஆகியோரை வரவழைத்து ஆபரேஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்பபடத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தேசப் பாதுகாப்பு, கடற்படை, இராணுவ ஆபரேஷன் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் இந்த ஆபரேஷன் அரபைமா’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும்.

The post ரகுமான் கடற்படை வீரராக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ appeared first on Touring Talkies.

]]>