Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
puthu puthu arthangal – Touring Talkies https://touringtalkies.co Fri, 28 Jul 2023 02:17:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png puthu puthu arthangal – Touring Talkies https://touringtalkies.co 32 32 கே.பி. – இளையராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்ட சம்பவம்! https://touringtalkies.co/gangai-amaran-comment-made-balachandar-angry/ Fri, 28 Jul 2023 02:17:15 +0000 https://touringtalkies.co/?p=34786 பாலச்சந்தர் இயக்கி இளையராஜா கடைசியாக இசையமைத்த திரைப்படம் புதுப்புது அர்த்தங்கள். அதன்பின் இருவரும் இணையவே இல்லை. இந்த படத்தில் பின்னணி இசைக்காக பாலச்சந்தர் காத்திருந்தபோது ராஜா வர நேரமானதால் அந்த படத்தில் அவர் போட்ட ஒரு பாடலையே பாலச்சந்தர் தேர்ந்தெடுத்து பயன்படுத்திவிட்டார். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இனிமேல் பாலச்சந்தர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். இதுதான் பலரும் சொல்வது. அதேநேரம் அதற்குமுன்பே அதாவது பாலச்சந்தர் சிந்து பைரவி எடுத்த போதே இருவருக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டதாக […]

The post கே.பி. – இளையராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்ட சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
பாலச்சந்தர் இயக்கி இளையராஜா கடைசியாக இசையமைத்த திரைப்படம் புதுப்புது அர்த்தங்கள். அதன்பின் இருவரும் இணையவே இல்லை. இந்த படத்தில் பின்னணி இசைக்காக பாலச்சந்தர் காத்திருந்தபோது ராஜா வர நேரமானதால் அந்த படத்தில் அவர் போட்ட ஒரு பாடலையே பாலச்சந்தர் தேர்ந்தெடுத்து பயன்படுத்திவிட்டார். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இனிமேல் பாலச்சந்தர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டார்.

இதுதான் பலரும் சொல்வது.

அதேநேரம் அதற்குமுன்பே அதாவது பாலச்சந்தர் சிந்து பைரவி எடுத்த போதே இருவருக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டதாக டாக்டர் காந்தராஜ் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். சாதி தொடர்பாக பாலச்சந்தர் பற்றி கங்கை அமரன் அடித்த கமெண்ட் பாலச்சந்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை அவர் வெளியே கட்டிக்கொள்ளவில்லை. அதன்பின்னரும் சில படங்களில் ஒருவரும் ஒன்றாக வேலை செய்தனர். ஆனால், ரஹ்மானை அறிமுகம் செய்து பாலச்சந்தர் தான் யார் என காட்டிவிட்டார்’ என காந்தராஜ் கூறியிருந்தார்.

The post கே.பி. – இளையராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்ட சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
  இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? https://touringtalkies.co/the-film-that-caused-the-clash-between-ilayaraja-and-balachander/ Sun, 02 Apr 2023 03:18:38 +0000 https://touringtalkies.co/?p=31190 80 களில் இயக்குநர்பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் இளையராஜாவின் இசை தான் இடம்பெற்றிருக்கும். சிந்து பைரவி படத்தின் மூலமாக இளையராஜா, பாலசந்தர் கூட்டணி இணைந்த நிலையில், இளையராஜாவுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பாலசந்தர் இயக்கிய 6 படங்களுக்கு தொடர்ச்சியாக இளையராஜா இசையமைத்தார். மேலும் பாலச்சந்தர் தயாரித்த 14 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் காம்போ படங்கள் வெளியாகாமல் போனதையடுத்து பாலசந்தரும் இசையமைப்பாளர்கள் […]

The post   இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
80 களில் இயக்குநர்பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் இளையராஜாவின் இசை தான் இடம்பெற்றிருக்கும்.

சிந்து பைரவி படத்தின் மூலமாக இளையராஜா, பாலசந்தர் கூட்டணி இணைந்த நிலையில், இளையராஜாவுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பாலசந்தர் இயக்கிய 6 படங்களுக்கு தொடர்ச்சியாக இளையராஜா இசையமைத்தார். மேலும் பாலச்சந்தர் தயாரித்த 14 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் காம்போ படங்கள் வெளியாகாமல் போனதையடுத்து பாலசந்தரும் இசையமைப்பாளர்கள் கீரவாணி, ஏ ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரை தமிழ் சினிமாவில் களமிறக்கினார் பாலச்சந்தர்.

இதற்குக் காரணம் இருக்கிறது..

1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. ரஹ்மான், கீதா உள்ளிட்டோர் நடித்த இப்படம் காதல், செண்டிமெண்ட் என உருவாகி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு  மாநில விருதையும் பெற்றது.

இப்பட உருவாக்கத்தின் போது,  படத்தின் பின்னணி இசை வேலைகள் மட்டும் முடியாமல் இருந்துள்ளது.

இளையராஜாவிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் மேலும் 5 படங்களுக்கு இசையமைக்க வேண்டியுள்ளது. இப்படத்தின் பின்னணி இசையையை இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து முடித்து தருவதாக கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். அதற்கு இளையராஜா தீபாவளிக்கு வேண்டாம் வேறு நாளில் ரிலீஸ் பண்ணுங்கள் என கூறிவிட்டாராம்.

இதனால் வருத்தமான பாலசந்தர் ஏற்கனவே இவரது படங்களில் உள்ள பின்னணி இசையை தனியாக எடுத்து, ஒரு இசையமைப்பாளரை வைத்து, படத்தில் அந்த பின்னணி இசைகளை வைத்து இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார். பின்னர் இப்படத்தை பார்த்த இளையராஜா பாலசந்தர் மீது கடும் கோபத்தில் இருந்தாராம். மேலும் இந்த படம் தான் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த கடைசி படமாகும்.

அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை.

  • இந்தத் தகவலை பத்திரிகையாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

The post   இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>