Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
public movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 26 Mar 2024 13:15:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png public movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 சசி குமார் இயக்கத்தில் நயன்தாராவா?அட புது காம்பினேஷனா இருக்கே… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/ Tue, 26 Mar 2024 13:15:47 +0000 https://touringtalkies.co/?p=40264 தமிழில் டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடித்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தனது முதல் படமே கிங் கான் ஷாருக்கான் உடன் நடித்திருந்தார்.1000 கோடி வசூலை குவித்து தள்ளி ப்ளாக் பஸ்டர் ஆனது ஜவான். இப்படத்தை அட்லி இயக்கி இருந்தார். நயன்தாரா தற்போது டெஸ்ட் திரைப்படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள எல்ஐசி படத்திலும் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி […]

The post சசி குமார் இயக்கத்தில் நயன்தாராவா?அட புது காம்பினேஷனா இருக்கே… appeared first on Touring Talkies.

]]>
தமிழில் டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடித்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தனது முதல் படமே கிங் கான் ஷாருக்கான் உடன் நடித்திருந்தார்.1000 கோடி வசூலை குவித்து தள்ளி ப்ளாக் பஸ்டர் ஆனது ஜவான். இப்படத்தை அட்லி இயக்கி இருந்தார்.

நயன்தாரா தற்போது டெஸ்ட் திரைப்படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள எல்ஐசி படத்திலும் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்த எல்ஐசி படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி, நயன்தாரா 81, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், அதேபோல் முக்கியமான லீட் கேரக்டரில் ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகுமார் இயக்குனராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் நடிகர் என வலம் வருபவர். இவர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக தன் பயணத்தை தொடங்கினார்.பின்னர் தொடர்ந்து படங்களை இயக்கி வந்த சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் சசிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சசி குமார் இயக்கத்தில் நயன்தாராவா?அட புது காம்பினேஷனா இருக்கே… appeared first on Touring Talkies.

]]>