Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Producer Singaravelan – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Mar 2021 06:05:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Producer Singaravelan – Touring Talkies https://touringtalkies.co 32 32 இயக்குநர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் ‘கதை திருட்டு’ குற்றச்சாட்டு https://touringtalkies.co/producer-singaravelan-complaints-about-director-saravana-sakthi-about-story-thieft/ Mon, 29 Mar 2021 06:04:41 +0000 https://touringtalkies.co/?p=13963 தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான சிங்காரவேலன் ‘நாயகன்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதைத் திருட்டு குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார். இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குநருமான சரவண சக்தி, ‘தற்போது படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பண உதவி செய்யுமாறும்’ கேட்டுக் கொண்டார். ‘மீன் வாங்கி கொடுப்பதை காட்டிலும் […]

The post இயக்குநர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் ‘கதை திருட்டு’ குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான சிங்காரவேலன் நாயகன்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதைத் திருட்டு குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குநருமான சரவண சக்தி, தற்போது படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பண உதவி செய்யுமாறும்’ கேட்டுக் கொண்டார்.

மீன் வாங்கி கொடுப்பதை காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறப்பானது” என்கிற கொள்கையுடையவன் நான். அதனால், “நான் ஒரு கதை சொல்கிறேன்.. அதற்கு திரைக்கதை அமைத்து தாருங்கள். அதற்காக  50,000-ம் ரூபாய் சம்பளம் தருவதாக”வும் கூறினேன். அதற்கு சரவண சக்தியும் சம்மதித்தார்.

எல்லாம் அவன் செயல்’, மற்றும் ‘பைரவா’ படங்கள் பாணியில் மருத்துவ கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், மற்றும் தாளாளர் இருவரும் கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள்.

அந்த பெண்ணின் அண்ணனான கதாநாயகன் சாதாரண ஆள். எனவே ஆக்க்ஷன், அடிதடி என்று இல்லாமல் தன்னுடைய புத்திசாலிதனத்தால் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை கொலை செய்து பழி வாங்குகிறான்.

சட்டத்தாலும், நீதியாலும் அவனை நெருங்கக் கூட முடியாது’ என்ற ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைத்து அதற்கு எங்க குல சாமி’ என தலைப்பு வைத்து தயார் செய்து தாருங்கள்” என இயக்குநர் சரவண சக்தியிடம் சொல்லி பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

என்னிடம் ஒப்புக் கொண்டபடி இயக்குநர் சரவண சக்தி எனக்குத் திரைக்கதை அமைத்து தரவில்லை. மாறாக, நான் கூறிய ஒரு வரி கதையை எனக்கு தெரிந்த வேறு ஒரு குழுவிடம் கொடுத்து திரைக்கதை அமைக்கச் சொல்லியிருக்கிறார். தற்போது நான் வைத்த அதே பெயரில் அந்தத் திரைக்கதையை வைத்து வேறொரு குழு மூலமாக படம் தயாரிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நான் பெயர் வைத்த எங்க குல சாமி’ என்ற அந்தப் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளது. கதையின் கருவும் விவாதப் பொருளானது.

இந்த நிலையில் 27.03.2021 அன்று சாலிகிராமத்தில் உள்ள என் அலுவலகத்திற்கு சில அடியாட்களுடன் மது போதையில் வந்த இயக்குநர் சரவண சக்தி, என் அலுவலக ஊழியர்களை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அலுவலக ஊழியர்கள் உடனேயே விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காவல் துறையினர் வருவதற்கு முன்பு சிங்காரவேலனை கொலை செய்து அவன் தலையுடன்தான் செல்வேன்” என்று கொக்கரித்துக் கொண்டிருந்த சரவண சக்தியும், அவரது அடியாட்களும்… காவல் துறை வாகனத்தை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரி தெறிக்க அருணாச்சலம் சாலையில் ஓட்டம் பிடித்ததை சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தபோது சரவண சக்தி அலைபேசியை எடுக்கவில்லை. இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது தான் மதுரையில் இருப்பதாக கூறியவரிடம் “நாளை(29.03.2021) காலை 10 மணிக்கு கண்டிப்பாக விசாரணைக்கு காவல் நிலையம் வர வேண்டும்…” என்ற ஆய்வாளரின் உத்தரவுப்படி சரவண சக்தி நாளை விசாரணைக்காக விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வரவுள்ளார்.

இந்த நிலையில், இவர் ஏதோ என் மீது புகார் கொடுக்கப் போவது போன்று நாளை(29.03.2021) காலை பத்திரிகையாளர் சந்திப்புக்கும் அவர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த இயக்குநர் சரவண சக்தி ஏற்கனவே இயக்கி வெளியான நாயகன்’ படம், ‘ஸ்பீடு’ என்கிற ஹாலிவுட் படத்தின் உல்டாவாகும். ‘பில்லா பாண்டி’ படத்தின் கதையும் மூர்த்தி என்பவர் எழுதியதாகும். அவரது மேற்பார்வையில் இவர் இயக்கிய படமாகும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

இதன் மூலம் சரவண சக்தி சொந்தமாக கதை தயார் செய்து படம் இயக்கும் திறமை இல்லாதவர். அடுத்தவன் கதையை இரவல் வாங்கியோ அல்லது திருடியோ படம் இயக்குபவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

எங்க குலசாமி’ என்கிற படத்தின் கதை என்னுடையது என்பதோடு, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட விஷயத்தை அடிப்படையாக கொண்டது.

இதனால், அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும் என் திரைக்கதை ஏற்படுத்தாது என்று உறுதி கொடுக்கப்பட்டு நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்களிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை, அதற்குரிய ஆவணங்களை முன் வைத்து வெற்றி பெறுவேன் என்பதை உறுதிபட தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்…” என்று சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

The post இயக்குநர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் ‘கதை திருட்டு’ குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. https://touringtalkies.co/tfpc-election-2020-singaravelan-complaint-ltter-news/ Sat, 24 Oct 2020 06:47:33 +0000 https://touringtalkies.co/?p=9194 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான தயாரிப்பாளர் சிங்காரவேலன் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. appeared first on Touring Talkies.

]]>

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பின்பு ரீலீஸ் செய்யப்பட்ட படத்தை நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள், தங்களுக்கான தகுதியாக அதைக் குறிப்பிட முடியாது என்பதால் இவர்களது வேட்பு மனுக்களின் தகுதி கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  தேர்தல் அதிகாரியிடம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் செய்துள்ளார்.

இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ம் ஆண்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே. நமது சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-க்கு உட்பட்டது.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 விதி எண் 58-ன் படி, சங்கத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்படுமேயானால், அந்த அறிவிப்பு அன்றைய தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விடுகிறது.

அதன்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தலையும், தேர்தலுக்கான அட்டவணையையும் கடந்த 09-10-2020 தேதியிலும், தேர்தல் விதிகளை 15-10-2020 அன்றும் வெளியிட்டீர்கள்.

15-10-2020 அன்று உங்களால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில்,                                       விதி எண் 2-ல் “சங்க விதிமுறை எண் 13-ன்படி கடந்த 5 ஆண்டுகளுக்குள் நேரடி தமிழ்ப் படம் தயாரித்து,  வெளியிட்ட தயாரிப்பாளர், உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தலைவர், துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் ஆகிய நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை உண்டு…” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் அறிவிப்பின்படி 15-10-2015 முதல் 14-10-2020 வரை உள்ளடக்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரித்து அதனை வெளியிட்டிருந்தால் மட்டுமே அவரால் தற்போதைய தேர்தலில் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிட முடியும்.

இந்த விதிகள் மற்றும் உங்கள் அறிவிப்பின்படி 09-10-2020 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடுவதாலும், 15-10-2020 அன்று நீங்கள் வெளியிட்ட விதிகளின்படி, 14-10-2020-க்கு பிறகு படத்தை திரையிட்டவர்கள் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தங்களது படங்களை                                14-10-2020 தேதிக்கு பிறகு வெளியிட்டிருப்பதால் இந்த 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழக்கிறார்கள்.

எனவே, ஐயா அவர்கள்…

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் விதிகளின்படியும், உங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகளின்படியும் மேற்கண்ட மூன்று நபர்களின் வேட்பு மனுக்களையும் நிராகரிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. appeared first on Touring Talkies.

]]>