Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
passed away – Touring Talkies https://touringtalkies.co Fri, 08 Dec 2023 02:10:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png passed away – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்தி நடிகர் தினேஷ் காலமானார் https://touringtalkies.co/hindi-actor-dinesh-passed-away/ Wed, 06 Dec 2023 02:00:34 +0000 https://touringtalkies.co/?p=38553 சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிஐடி’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர்  தினேஷ் பட்னிஸ். . 1998ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 2018-ம் அண்டு வரை ஒளிபரப்பானது. இதில் ஃபிரெட்ரிக்ஸ் என்ற போலீஸ் கதாப்பாத்திரத்தில் தினேஷ் நடித்தார். மேலும் சில தொடர்களில் நடித்துள்ள இவர், சர்ஃபரோஷ், சூப்பர் 30 உட்பட சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வயது 57. கடந்த 1-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். […]

The post இந்தி நடிகர் தினேஷ் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிஐடி’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர்  தினேஷ் பட்னிஸ். . 1998ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 2018-ம் அண்டு வரை ஒளிபரப்பானது. இதில் ஃபிரெட்ரிக்ஸ் என்ற போலீஸ் கதாப்பாத்திரத்தில் தினேஷ் நடித்தார். மேலும் சில தொடர்களில் நடித்துள்ள இவர், சர்ஃபரோஷ், சூப்பர் 30 உட்பட சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு வயது 57. கடந்த 1-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கல்லீரல் பிரச்சினை என்று கூறப்படுகிறது. செயற்கை சுவாச உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவர் இறுதிச் சடங்கு மும்பை போரிவிலியில் நேற்று நடந்தது.

 

The post இந்தி நடிகர் தினேஷ் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
மலையாள பழம்பெரும் நடிகை சுப்புலட்சிமி காலமானார். https://touringtalkies.co/legendary-malayalam-actress-subbulakshimy-passed-away/ Sat, 02 Dec 2023 00:40:04 +0000 https://touringtalkies.co/?p=38462 1980ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுப்புலட்சுமி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாளம் தவிர்த்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ’ராமன் தேடிய சீதை’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் தவிர்த்து ஏராளமான விளம்பரப் படங்களிலும் சுப்புலட்சுமி நடித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும், கர்நாடக இசைக்கலைஞராகவும், ஓவியராகவும் இருந்து வந்தார். மலையாளத்தில் வெளியான ‘கல்யாணராமன்’, ‘பாண்டிப்படா’, ‘நந்தனம்’ ஆகிய […]

The post மலையாள பழம்பெரும் நடிகை சுப்புலட்சிமி காலமானார். appeared first on Touring Talkies.

]]>
1980ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுப்புலட்சுமி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாளம் தவிர்த்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ’ராமன் தேடிய சீதை’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தவிர்த்து ஏராளமான விளம்பரப் படங்களிலும் சுப்புலட்சுமி நடித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும், கர்நாடக இசைக்கலைஞராகவும், ஓவியராகவும் இருந்து வந்தார்.

மலையாளத்தில் வெளியான ‘கல்யாணராமன்’, ‘பாண்டிப்படா’, ‘நந்தனம்’ ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. ’இன் தி நேம் ஆஃப் காட்’ என்ற ஆங்கில படத்திலும் சுப்புலட்சுமி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் அகில இந்திய வானொலியின் முதல் பெண் இசையமைப்பாளர் சுப்பலட்சுமி ஆவார். 65க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

நவ.30  இரவு கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக சுப்புலட்சுமி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post மலையாள பழம்பெரும் நடிகை சுப்புலட்சிமி காலமானார். appeared first on Touring Talkies.

]]>
‘தில்லானா மோகனாம்பாள்’ நாதஸ்வரக் கலைஞர் காலமானார் https://touringtalkies.co/dillana-mohanampal-nathswara-artist-passed-away/ Wed, 29 Nov 2023 23:40:11 +0000 https://touringtalkies.co/?p=38397 சிவாஜிகணேசனின் நடிப்பில் 1968-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை கொடுத்தப்படம்  ‘தில்லானா மோகனாம்பாள்’. இதில் சிவாஜிகணேசனுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் நுட்பங்கள் குறித்து விளக்கியவர்கள், நாகஸ்வர கலைஞர்களான சேதுராமன்-பொன்னுசாமி சகோதரர்கள். படத்துக்காக நாகஸ்வரம் வாசித்தவர்களும் அவர்கள்தான். காரைக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இவர்கள் நாகஸ்வரம் வாசித்ததைக் கேட்டு ரசித்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன், ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்துக்குப் பிறகு ‘கோவில் புறா’ என்ற படத்தில் இசைக் கலைஞராக அவர் நடித்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, […]

The post ‘தில்லானா மோகனாம்பாள்’ நாதஸ்வரக் கலைஞர் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
சிவாஜிகணேசனின் நடிப்பில் 1968-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை கொடுத்தப்படம்  ‘தில்லானா மோகனாம்பாள்’. இதில் சிவாஜிகணேசனுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் நுட்பங்கள் குறித்து விளக்கியவர்கள், நாகஸ்வர கலைஞர்களான சேதுராமன்-பொன்னுசாமி சகோதரர்கள். படத்துக்காக நாகஸ்வரம் வாசித்தவர்களும் அவர்கள்தான்.

காரைக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இவர்கள் நாகஸ்வரம் வாசித்ததைக் கேட்டு ரசித்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன், ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்துக்குப் பிறகு ‘கோவில் புறா’ என்ற படத்தில் இசைக் கலைஞராக அவர் நடித்துள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உட்பட வெளிநாடுகளிலும் இவர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். பொன்னுசாமி, 9 வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். சேதுராமன் 2000-ம் ஆண்டில் காலமானார். இந்நிலையில் 91வயதாகும் பொன்னுச்சாமி நவ.17 தேதி  விளாங்குடியில் உள்ள தனது மகன் வீட்டில் காலமானார்.

மறைந்த பொன்னுசாமிக்கு மனைவி ருக்மணி, மகன்கள் நடராஜ சுந்தரம், மாரியப்பன், உமாமகேஸ்வரன், மகள்கள் பொன்னரசி, சம்பூர்ணம் உள்ளனர். பொன்னுச்சாமியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post ‘தில்லானா மோகனாம்பாள்’ நாதஸ்வரக் கலைஞர் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
“ஸ்ரீதேவி மரணம்: அனைவருக்கும் எச்சரிக்கை!”: வெளிப்படையாக சொன்ன கணவர் https://touringtalkies.co/boney-kapoor-speaks-about-sridevi-passed-away-2/ Wed, 04 Oct 2023 23:36:48 +0000 https://touringtalkies.co/?p=36856 ‘கந்தன் கருணை’ தமிழ்  படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீதேவி. 1996இல் போனி கபூரை மணந்த இருக்கு,  ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். 2018இல் துபாயில் ஓட்டலில் தங்கி இருந்தபோது, பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.  இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். சில தகவல்களை […]

The post “ஸ்ரீதேவி மரணம்: அனைவருக்கும் எச்சரிக்கை!”: வெளிப்படையாக சொன்ன கணவர் appeared first on Touring Talkies.

]]>
‘கந்தன் கருணை’ தமிழ்  படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீதேவி.

1996இல் போனி கபூரை மணந்த இருக்கு,  ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

2018இல் துபாயில் ஓட்டலில் தங்கி இருந்தபோது, பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.  இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். சில தகவல்களை தெரிவித்தார்.

அவர், “ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. விபத்து.   பிரேதப் பரிசோதனை அறிக்கையில்  நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். இன்னுமொரு விசயத்தை இப்போது சொல்கிறேன்.

ஸ்லிமாக இருக்க வேண்டும் – திரையில் நல்ல உடல் அமைப்போடு – நளினத்தோடு தோன்ற வேண்டும் என்பதில் ஸ்ரீதேவி மிகவும் கவனம் செலுத்தினார். இதற்காக, கடுமையாக டயட் இருந்தார். தனது எடையை 46 கிலோ அளவுக்கு குறைத்தார் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரை பார்த்தாலே இது தெரியும்.

இதனால் பல சந்தர்ப்பங்களில் மயங்கி இருக்கிறார்.  ஓவர் டயட்டால், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தது. ஆகவே, கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தும் அளவுக்கு போனது. அப்படியான ஒரு சந்தர்ப்பமே அவரது உயிரைப் பறித்தது” என்றார்.

அழகு என்கிற என்கிற எண்ணத்தில் ஓவர் டயட் மேற்கொள்ளும் இளம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

The post “ஸ்ரீதேவி மரணம்: அனைவருக்கும் எச்சரிக்கை!”: வெளிப்படையாக சொன்ன கணவர் appeared first on Touring Talkies.

]]>
மூத்த சினிமா பத்திரிகையாளர் ராமமூர்த்தி மறைவு! https://touringtalkies.co/senior-film-journalist-mr-ramamurthy-passed-away/ Mon, 27 Mar 2023 05:34:12 +0000 https://touringtalkies.co/?p=31051 மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி (வயது 88)  நேற்று மாலை குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில்  இயற்கை எய்தினார். சுதேசமித்திரன் தினசரி பத்திரிகையில் 5 ஆண்டு காலம் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான  ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பேற்றார். தொடர்ந்து 23 ஆண்டுகள்  பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு ஜெயா டி.வி.யில் 5 ஆண்டு காலம் ‘தேன் கிண்ணம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது […]

The post மூத்த சினிமா பத்திரிகையாளர் ராமமூர்த்தி மறைவு! appeared first on Touring Talkies.

]]>
மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி (வயது 88)  நேற்று மாலை குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில்  இயற்கை எய்தினார்.

சுதேசமித்திரன் தினசரி பத்திரிகையில் 5 ஆண்டு காலம் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான  ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பேற்றார். தொடர்ந்து 23 ஆண்டுகள்  பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிறகு ஜெயா டி.வி.யில் 5 ஆண்டு காலம் ‘தேன் கிண்ணம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகளை ராமமூர்த்தி பெற்றுள்ளார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

மேலும் விவரங்கள்  அறிய:

திரு. கோபாலன் ( சகோதரர் ) :  98400 28716

The post மூத்த சினிமா பத்திரிகையாளர் ராமமூர்த்தி மறைவு! appeared first on Touring Talkies.

]]>
நகைச்சுவை நடிகர் – மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார் https://touringtalkies.co/mimicry-fame-kovai-guna-passed-away-due-to-health-illness/ Tue, 21 Mar 2023 13:13:57 +0000 https://touringtalkies.co/?p=30938 நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். ‘சென்னை காதல்’ என்ற படத்தில் நடிகராக நடித்துள்ளார். ‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னரான இவர், கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வதில் புகழ்பெற்றவர். இந்நிலையில், உடல் […]

The post நகைச்சுவை நடிகர் – மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார் appeared first on Touring Talkies.

]]>
நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். ‘சென்னை காதல்’ என்ற படத்தில் நடிகராக நடித்துள்ளார். ‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னரான இவர், கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வதில் புகழ்பெற்றவர்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post நகைச்சுவை நடிகர் – மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார் appeared first on Touring Talkies.

]]>
பிரபல தெலுங்கு நடிகர் மறைந்தார்! https://touringtalkies.co/popular-telugu-actor-nandamuri-tharaka-ratna-passed-away/ Mon, 20 Feb 2023 04:33:03 +0000 https://touringtalkies.co/?p=30478 பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரக ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரக ரத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாரக ரத்னா நேற்று சிகிச்சை […]

The post பிரபல தெலுங்கு நடிகர் மறைந்தார்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார்.

சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரக ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரக ரத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாரக ரத்னா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 39 வயதாகும் தாரகா ரத்னா, 2002-ம் ஆண்டு வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரபல தெலுங்கு நடிகர் மறைந்தார்! appeared first on Touring Talkies.

]]>
கமல் பட இயக்குநர் மறைவு https://touringtalkies.co/legendary-director-k-viswanath-passed-away/ Fri, 03 Feb 2023 02:12:26 +0000 https://touringtalkies.co/?p=30194 தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை நள்ளிரவு மறைந்தார்.   அவருக்கு வயது 92.வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  இவர்  பத்மஸ்ரீ, தாதா சாஹப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகாரவும் நடித்தும் உள்ளார். ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பெடிபுல்லிபாரு என்ற ஊரில் 1930இல் பிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத், […]

The post கமல் பட இயக்குநர் மறைவு appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை நள்ளிரவு மறைந்தார்.   அவருக்கு வயது 92.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

 இவர்  பத்மஸ்ரீ, தாதா சாஹப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகாரவும் நடித்தும் உள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பெடிபுல்லிபாரு என்ற ஊரில் 1930இல் பிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத், 1965ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார். தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் கமல்ஹாசன் – அர்ஜுன் நடித்த குருதிப்புனல் படம் மூலம் நடிகராக தோன்றினார்.

இதன் பின்னர் அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் பகவதி, புதிய கீதை, தனுஷுடன் யாரடி நீ மோகினி, விக்ரமுடன் ராஜபாட்டை, ரஜினியுடன் லிங்கா போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் கமல், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தில் நடித்தார்.

கமலின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமான சலங்கை ஒலியை இயக்கியவர் இவர்தான்.

இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவுக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

The post கமல் பட இயக்குநர் மறைவு appeared first on Touring Talkies.

]]>
கின்னஸ் சாதனை தமிழ் இயக்குநர் – நடிகர் மறைவு! https://touringtalkies.co/director-and-actor-e-ramadoss-passed-away-due-to-heart-attack/ Tue, 24 Jan 2023 03:17:46 +0000 https://touringtalkies.co/?p=29846 பிரபல திரைப்பட இயக்குநர் இ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக மறைந்தார். இது  திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்தவர் இ.ராமதாஸ்.  கல்லூரியில் படித்த காலத்திலேயே இயக்குநர்  கனவோடு சென்னை வந்தார்.  நடிகர் மனோபாலா மூலம் திரையுலக பிரபலங்களின்  அறிமுகம் ஏற்பட்டது.  1980 ஆம் ஆண்டு வெளியான கரடி என்னும் படத்தில் பாடலாசிரியராக இ.ராமதாஸ் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளிவரவே இல்லை. பிறகு இயக்குநர் பி.எஸ்.நிவாஸின் “எனக்காக காத்திரு” படத்தில் திரைக்கதை எழுதினார். அதனைத் […]

The post கின்னஸ் சாதனை தமிழ் இயக்குநர் – நடிகர் மறைவு! appeared first on Touring Talkies.

]]>
பிரபல திரைப்பட இயக்குநர் இ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக மறைந்தார். இது  திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் இ.ராமதாஸ்.  கல்லூரியில் படித்த காலத்திலேயே இயக்குநர்  கனவோடு சென்னை வந்தார்.  நடிகர் மனோபாலா மூலம் திரையுலக பிரபலங்களின்  அறிமுகம் ஏற்பட்டது.

 1980 ஆம் ஆண்டு வெளியான கரடி என்னும் படத்தில் பாடலாசிரியராக இ.ராமதாஸ் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளிவரவே இல்லை. பிறகு இயக்குநர் பி.எஸ்.நிவாஸின் “எனக்காக காத்திரு” படத்தில் திரைக்கதை எழுதினார். அதனைத் தொடர்ந்து சுமார் 6 படங்களில் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

1986 ஆம் ஆண்டு மோகன், சீதா நடித்த ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து ‘ராஜா ராஜா தான்’, ‘ராவணன்’,‘வாழ்க ஜனநாயகம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.


தமிழ்த் திரையுலகில்  24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை படைத்த  ‘சுயம் வரம்’ படத்தை இயக்கிய 9 இயக்குநர்களில் ஒருவராக ராமதாஸ் பணியாற்றினார்.  இதில் பாண்டியராஜன், கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் இயக்கினார்.

மேலும், திரைக்கதை ஆசிரியராக பொன் விலங்கு, ராஜாளி, அந்தப்புரம், கண்ணாத்தாள், எதிரும் புதிரும், சங்கமம், கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமதாஸ் தொடர்ந்து யுத்தம் செய், குக்கூ, காக்கி சட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, விசாரணை, மெட்ரோ, தர்மதுரை, ஒருநாள் கூத்து, விக்ரம் வேதா, அறம், கோலிசோடா 2, மாரி 2 ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரை ரசிகர்களிடையே பிரபலமானார்.


இந்நிலையில் உடல் பிரச்சினை காரணமாக, சமீபத்தில் சென்னையில் தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மறைந்தார்.

இது குறித்து  இ.ராமதாஸ் மகன்  கலைச்செல்வன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ராமதாஸ் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post கின்னஸ் சாதனை தமிழ் இயக்குநர் – நடிகர் மறைவு! appeared first on Touring Talkies.

]]>