Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
parants i – Touring Talkies https://touringtalkies.co Sat, 15 Apr 2023 16:49:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png parants i – Touring Talkies https://touringtalkies.co 32 32 தண்ணீர் வழங்கும் ரஜினி! https://touringtalkies.co/rajinikanth-erected-statue-for-his-parants-in-his-native-village/ Sun, 16 Apr 2023 00:48:20 +0000 https://touringtalkies.co/?p=31609 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றித்திற்கு உட்பட்ட நாச்சிக்குப்பம் கிராமம் நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள் வாழ்ந்த இடம். ரஜினியின் பெற்றோரும் இந்த கிராமத்தில் தான் வாழ்ந்துள்ளனர். தற்போது இந்த கிராமத்தில் ரஜினியின் உறவினர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் வீட்டு விஷேஷங்களில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் பங்கேற்று வருகிறார். இதனிடையே தனது பெற்றோருக்கு பூர்வீக கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிராமத்தில் சுமார் 2.40 […]

The post தண்ணீர் வழங்கும் ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றித்திற்கு உட்பட்ட நாச்சிக்குப்பம் கிராமம் நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள் வாழ்ந்த இடம். ரஜினியின் பெற்றோரும் இந்த கிராமத்தில் தான் வாழ்ந்துள்ளனர். தற்போது இந்த கிராமத்தில் ரஜினியின் உறவினர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் வீட்டு விஷேஷங்களில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே தனது பெற்றோருக்கு பூர்வீக கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிராமத்தில் சுமார் 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்தில் தனது பெற்றோர் ரானேஜிராவ் – ராம்பாய் சிலைகள் அமைத்து நினைவிடம் அமைக்க அப்போதே தனது அண்ணன் சத்தியநாராயணராவ் மூலம் அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அதன்பிறகு இந்த நினைவிடத்திற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தாலும், ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் இடத்தை பராமரித்து வந்தார். அதேசமயம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பொங்கல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த இடத்தில் இருந்து தொடங்கி நடத்தி வந்தனர். இதனிடையே தற்போது இந்த இடத்தில் ரஜினியின் பெற்றோருக்கு சிலை அமைக்கப்பட்டுள்து.

ரானேஜிராவ் – ராம்பாய் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல் கால்நடைகள் தண்ணீர் குடிக்க தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வீடியோ மூலம் நடிகர் ரஜினிகாந்துக்கு தெரியப்படுத்துவதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் ரஜினிகாந்த் தற்போது இங்கு வர முடியாத சூழல் உள்ளதாவும், விரைவில் அவர் இங்கு வருவார் என்றும் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கூறியுள்ளார்.

The post தண்ணீர் வழங்கும் ரஜினி! appeared first on Touring Talkies.

]]>