Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Obsession! – Touring Talkies https://touringtalkies.co Tue, 11 Jul 2023 07:01:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Obsession! – Touring Talkies https://touringtalkies.co 32 32 வதந்தி பரப்பாதீர்!:  கீர்த்தி ஷெட்டி ஆவேசம் https://touringtalkies.co/dont-spread-rumours-keerthy-shetty-obsession/ Tue, 11 Jul 2023 06:35:27 +0000 https://touringtalkies.co/?p=34244 தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி, ‘தி வாரியர்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நாயகியாக நடித்த அவர் இப்போது, ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘பிரபல ஹீரோ ஒருவரின் மகன் அவரை பின் தொடர்வதாகவும் அவருடன் நட்புக்கொள்ள விரும்புவதாகவும் ஆனால் தான் அதை விரும்பவில்லை’ என்று பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதற்குப் […]

The post வதந்தி பரப்பாதீர்!:  கீர்த்தி ஷெட்டி ஆவேசம் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி, ‘தி வாரியர்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நாயகியாக நடித்த அவர் இப்போது, ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘பிரபல ஹீரோ ஒருவரின் மகன் அவரை பின் தொடர்வதாகவும் அவருடன் நட்புக்கொள்ள விரும்புவதாகவும் ஆனால் தான் அதை விரும்பவில்லை’ என்று பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

இதற்குப் பதிலளித்துள்ள கீர்த்தி ஷெட்டி, “இதுபோன்ற ஆதாரமற்ற கதைகளை உருவாக்குவதையும் பொய்ப் பிரச்சாரம் செய்வதையும் நிறுத்துங்கள். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் வேண்டாம் என நினைத்தேன். இது வேகமாக பரவுவதால், பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

The post வதந்தி பரப்பாதீர்!:  கீர்த்தி ஷெட்டி ஆவேசம் appeared first on Touring Talkies.

]]>
“ ஆபாசம்!  ஓ.டி.டி.க்கு தணிக்கை!”: விஜயசாந்தி ஆவேசம்! https://touringtalkies.co/obscenity-censorship-to-ott-vijayashanthi-obsession/ Fri, 24 Mar 2023 03:08:57 +0000 https://touringtalkies.co/?p=30927 ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் எல்லை மீறி இருப்பதாகவும் அவற்றுக்கு தணிக்கை வேண்டும் என்றும் பல தரப்பிலும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோர் நடித்து ஓ.டி.டி.யில் வெளியான ராணா நாயுடு வெப் தொடரில் எல்லை மீறிய ஆபாச காட்சிகள், படுக்கை அறை, இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இதை பலர் கண்டித்து உள்ளனர். நடிகை விஜயசாந்தியும் விமர்சித்து உள்ளார். […]

The post “ ஆபாசம்!  ஓ.டி.டி.க்கு தணிக்கை!”: விஜயசாந்தி ஆவேசம்! appeared first on Touring Talkies.

]]>
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் எல்லை மீறி இருப்பதாகவும் அவற்றுக்கு தணிக்கை வேண்டும் என்றும் பல தரப்பிலும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோர் நடித்து ஓ.டி.டி.யில் வெளியான ராணா நாயுடு வெப் தொடரில் எல்லை மீறிய ஆபாச காட்சிகள், படுக்கை அறை, இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இதை பலர் கண்டித்து உள்ளனர்.

நடிகை விஜயசாந்தியும் விமர்சித்து உள்ளார். அவர் கூறும்போது, “சமீபத்தில் வெளியான வெப் தொடரில் ஆபாச காட்சிகள் உள்ளன. ஓ.டி.டி.யில் வரும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் அதிகமாகி வருகின்றன. இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்து படம் எடுக்க வேண்டும். ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகளும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பாதித்தால் போதும் என்ற நோக்கம் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் வைத்திருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும். ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு தணிக்கை வேண்டும் என்பது புரிகிறது” என்றார்.

The post “ ஆபாசம்!  ஓ.டி.டி.க்கு தணிக்கை!”: விஜயசாந்தி ஆவேசம்! appeared first on Touring Talkies.

]]>