Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Obscene – Touring Talkies https://touringtalkies.co Thu, 03 Aug 2023 04:12:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Obscene – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஆபாச யு டியுபரை வீட்டுக்கு அழைத்து எச்சரித்த  பிரபல நடிகர்! https://touringtalkies.co/the-famous-actor-who-warned-the-obscene-youtuber-at-home-bala-apology/ Thu, 03 Aug 2023 04:12:51 +0000 https://touringtalkies.co/?p=34983 கேரளாவில் பிரபல யூடியூபராக இருப்பவர், சந்தோஷ் வர்கி. திரைப்படங்கள் வெளியான முதல் காட்சி முடிந்ததும் விமர்சிப்பார். இவர் விமர்சனத்துக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு பிரபல ஹீரோக்கள் பற்றியும் நடிகைகள் பற்றியும் அவதூறாகப் பேசியும் வந்துள்ளார். சமீபத்தில் நடிகர் மோகன்லால் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். பிரபல நடிகை ஒருவர் பற்றியும் ஆபாசமாகப் பேசியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் பாலா, சந்தோஷ் வர்கியை தனது வீட்டுக்கு வரவழைத்தார். நடிகர், நடிகைகள் […]

The post ஆபாச யு டியுபரை வீட்டுக்கு அழைத்து எச்சரித்த  பிரபல நடிகர்! appeared first on Touring Talkies.

]]>
கேரளாவில் பிரபல யூடியூபராக இருப்பவர், சந்தோஷ் வர்கி. திரைப்படங்கள் வெளியான முதல் காட்சி முடிந்ததும் விமர்சிப்பார். இவர் விமர்சனத்துக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு பிரபல ஹீரோக்கள் பற்றியும் நடிகைகள் பற்றியும் அவதூறாகப் பேசியும் வந்துள்ளார். சமீபத்தில் நடிகர் மோகன்லால் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். பிரபல நடிகை ஒருவர் பற்றியும் ஆபாசமாகப் பேசியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் பாலா, சந்தோஷ் வர்கியை தனது வீட்டுக்கு வரவழைத்தார். நடிகர், நடிகைகள் பற்றி ஆதாரமில்லாமல் பேசியது எப்படி, நீங்கள் நேரில் பார்த்தீர்களா? என்று கேள்விகள் கேட்டார். படங்கள் பற்றி நீங்கள் விமர்சிக்கலாம், நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி விசாரிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்றார். இதை ஏற்றுக்கொண்ட சந்தோஷ், நடிகர், நடிகைகள் பற்றி அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டார். அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகர் பாலா. இதை சமூகவலைதளங்களில் பலர் வரவேற்றுள்ளனர்.

இதுபற்றி நடிகர் பாலாவிடம் கேட்டபோது, “திரைத்துறையும் மீடியாவும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கிறது. இதில் நடிகர், நடிகைகளை ஆதாரமில்லாமல் அவதூறாக பேசி ஏன் சம்பாதிக்க வேண்டும்? தமிழிலும் சில யூடியூபர்கள் இப்படி ஆபாசமாக பேசி வருவது வருத்தமாக இருக்கிறது” என்றார்.

The post ஆபாச யு டியுபரை வீட்டுக்கு அழைத்து எச்சரித்த  பிரபல நடிகர்! appeared first on Touring Talkies.

]]>
அரைகுறை ஆடை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை! https://touringtalkies.co/obscene-dress-controversy-glamorous-actress-apologize/ Sun, 02 Apr 2023 03:26:30 +0000 https://touringtalkies.co/?p=31209 இந்தி நடிகை உர்பி ஜாவேத். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர், வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின. இந்நிலையில், உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிளுகிளு படங்களை […]

The post அரைகுறை ஆடை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை! appeared first on Touring Talkies.

]]>
இந்தி நடிகை உர்பி ஜாவேத். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர், வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.

இந்நிலையில், உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிளுகிளு படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்” என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர். இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1-ந் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

The post அரைகுறை ஆடை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை! appeared first on Touring Talkies.

]]>