Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
new year – Touring Talkies https://touringtalkies.co Thu, 13 Apr 2023 17:31:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png new year – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘தமிழ் புத்தாண்டுதான் நமக்கான புத்தாண்டு” – நடிகை நமீதா https://touringtalkies.co/tamil-newyear-is-our-new-year-actress-namitha/ Wed, 12 Apr 2023 17:30:08 +0000 https://touringtalkies.co/?p=31500 நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான நமீதா தமிழ் புத்தாண்டையொட்டி வீடியோவில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் பேசும்போது, “தமிழ் புத்தாண்டு தினத்தன்று உறவினர்கள் நண்பருடன் சேர்ந்து உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள். உற்சாகமாக எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதற்குப் பிறகு பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். தமிழ் புத்தாண்டு முழுவதும் உங்களது நண்பர்கள் குடும்பத்தினர் உறவினர்களுடன் ஆனந்தமாக கொண்டாடுங்கள். அதுவே நமது கலாசாரம். அதுதான் நமது பாரம்பரியம். டிசம்பர் 31-ந் தேதி நமக்கான […]

The post ‘தமிழ் புத்தாண்டுதான் நமக்கான புத்தாண்டு” – நடிகை நமீதா appeared first on Touring Talkies.

]]>
நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான நமீதா தமிழ் புத்தாண்டையொட்டி வீடியோவில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் பேசும்போது, “தமிழ் புத்தாண்டு தினத்தன்று உறவினர்கள் நண்பருடன் சேர்ந்து உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள். உற்சாகமாக எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதற்குப் பிறகு பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெறுங்கள்.

தமிழ் புத்தாண்டு முழுவதும் உங்களது நண்பர்கள் குடும்பத்தினர் உறவினர்களுடன் ஆனந்தமாக கொண்டாடுங்கள். அதுவே நமது கலாசாரம். அதுதான் நமது பாரம்பரியம். டிசம்பர் 31-ந் தேதி நமக்கான புத்தாண்டு கிடையாது. வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு தான் நமக்கான புத்தாண்டு. எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”என்று கூறியுள்ளார்.

நமீதா குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மீது அன்பு கொண்டவர். தமிழ் ரசிகர்களை ‘மச்சான்’ என்று அழைப்பது வழக்கம், இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை பெருமைப்படுத்தி அவர் வீடியோவில் பேசி இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

The post ‘தமிழ் புத்தாண்டுதான் நமக்கான புத்தாண்டு” – நடிகை நமீதா appeared first on Touring Talkies.

]]>
வாரிசு பட புத்தாண்டு போஸ்டர்! https://touringtalkies.co/varisu-new-poster-year-vijay-movie-oo/ Mon, 02 Jan 2023 02:10:26 +0000 https://touringtalkies.co/?p=29075 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது.  இப் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். படத்தின் போஸ்டர், ட்ரெய்லர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பு  அதிகரித்து வரும் வேளையில், நேற்று,  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டர் […]

The post வாரிசு பட புத்தாண்டு போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது.  இப் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

படத்தின் போஸ்டர், ட்ரெய்லர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பு  அதிகரித்து வரும் வேளையில், நேற்று,  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது.

கோட் சூட்டுடன் படு ஸ்டைலிஷாக கால் மேல் கால் போட்டு விஜய் அமர்ந்திருக்க தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என்ற டாக் லைனுடன் போஸ்டர் அமைந்துள்ளது.

The post வாரிசு பட புத்தாண்டு போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>