Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
new movie – Touring Talkies https://touringtalkies.co Sat, 30 Dec 2023 11:49:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png new movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 கேமியோ ரோலில் விஜய் சேதுபதி https://touringtalkies.co/vijay-sethupathi-play-cameo-in-new-movie/ Sat, 30 Dec 2023 01:48:05 +0000 https://touringtalkies.co/?p=39308 தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, மௌனப் படமான ‘காந்தி டாக்கீஸ்’, தமிழில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை பாகம் 2’, மிஷ்கின் இயக்கும் டிரெயின், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புதிய படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவ்வப்போது சிறப்புத் தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் […]

The post கேமியோ ரோலில் விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>
தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, மௌனப் படமான ‘காந்தி டாக்கீஸ்’, தமிழில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை பாகம் 2’, மிஷ்கின் இயக்கும் டிரெயின், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புதிய படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவ்வப்போது சிறப்புத் தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவாவதாகச் சொல்லப்படும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஏற்கனவே சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

The post கேமியோ ரோலில் விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம்! https://touringtalkies.co/vignesh-sivan-and-pradeep-ranganathans-new-movie/ Sat, 16 Dec 2023 00:43:45 +0000 https://touringtalkies.co/?p=38867 பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி”பூஜையுடன் தொடங்கியது. புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் […]

The post விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி”பூஜையுடன் தொடங்கியது. புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.

இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>
பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..! https://touringtalkies.co/new-movie-directed-by-parthiban/ Wed, 01 Nov 2023 00:32:53 +0000 https://touringtalkies.co/?p=37419 இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கிவருகிறார். முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது” என தான் இயக்கி வரும் புதிய படம் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் வெட்டுள்ள வீடியோவில், “நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம்; ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் […]

The post பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கிவருகிறார். முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறதுஎன தான் இயக்கி வரும் புதிய படம் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் வெட்டுள்ள வீடியோவில், நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம்; ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம்.

இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமெண்டல் என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது.

நானும் குதூகலமாக இருக்கிறேன், ஏனென்றால் அந்தப் படத்துக்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன். படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம், ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்க முடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்.

  தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அவ்வையார், சந்திரலேகாஆயிரத்தில் ஒருவன் உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நான் எடுக்கும் படம் பிரமாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். அதற்கான நிறைய விஎஃபெக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

The post பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் இயக்கத்தில்  கமல் நடிக்கும் புதிய படம்..! https://touringtalkies.co/kamals-new-film-directed-by-mani-ratnam/ Sat, 28 Oct 2023 01:09:19 +0000 https://touringtalkies.co/?p=37286 இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத ‘KH234’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல். அதே நாளில் கமல் – மணிரத்னம்  35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் […]

The post மணிரத்னம் இயக்கத்தில்  கமல் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத ‘KH234’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்.

அதே நாளில் கமல் – மணிரத்னம்  35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘‘KH234’ படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக படக்குழு “Begin the Begin” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 1987-ம் ஆண்டில் வெளியான ‘நாயகன்’ படத்தின் காட்சி ஒன்று காட்டப்படுகிறது. பின்பு 2023 என குறிப்பிட்டு கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகர் பிரசாத், ரவி கே சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்கின்றனர். இறுதியில் எல்லோர் கையிலும் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருக்க வீடியோ நிறைவடைகிறது. இதன்மூலம் படப் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

The post மணிரத்னம் இயக்கத்தில்  கமல் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>
பூஜையுடன் தொடங்கியது ரவி தேஜாவின் புதிய படம்.! https://touringtalkies.co/ravi-tejas-new-film-started-with-pooja/ Sat, 28 Oct 2023 00:56:12 +0000 https://touringtalkies.co/?p=37283 மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, S தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் #RT4GM திரைப்படம் பிரமாண்டமான முறையில் துவங்கியது. வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத […]

The post பூஜையுடன் தொடங்கியது ரவி தேஜாவின் புதிய படம்.! appeared first on Touring Talkies.

]]>
மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, S தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் #RT4GM திரைப்படம் பிரமாண்டமான முறையில் துவங்கியது.

வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார்.

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார்.

நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

#RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர், மேலும் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் S தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவி தேஜாவுடன் தமனுக்கு இது 12வது படம், கோபிசந்த் மலினேனியுடன் 7வது படமாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் 4வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், சமீபத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜவான் படத்தினை காட்சிப்படுத்திய திறமை மிகு ஒளிப்பதிவாளரான GK விஷ்ணு, #RT4GM இன் மாபெரும் உலகத்தை காட்சிப்படுத்தவுள்ளார்.

தேசிய விருது பெற்ற டெக்னீஷியன் நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, AS பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். வசனங்களைச் சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார், மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா ஆகியோர் மற்ற எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.

The post பூஜையுடன் தொடங்கியது ரவி தேஜாவின் புதிய படம்.! appeared first on Touring Talkies.

]]>
‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட் https://touringtalkies.co/suriya-43-latest-update/ Fri, 27 Oct 2023 00:53:16 +0000 https://touringtalkies.co/?p=37260 தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ […]

The post ‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் ‘சூர்யா 43’ படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

சூர்யா -சுதா கொங்கரா – ஜீ.வி. பிரகாஷ் குமார் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ‘சூர்யா 43’ திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.

The post ‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்… https://touringtalkies.co/aryas-new-pan-india-movie/ Thu, 31 Aug 2023 01:37:41 +0000 https://touringtalkies.co/?p=35810 இடி மற்றும் மின்னலுக்கு நிகரான மிஷன், விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க தயாரிப்பு சைந்தவ்-இல் ஆர்யாவை மனாஸ்-ஆக அறிமுகப்படுத்துகிறோம். விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர். ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை […]

The post ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்… appeared first on Touring Talkies.

]]>

இடி மற்றும் மின்னலுக்கு நிகரான மிஷன், விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க தயாரிப்பு சைந்தவ்-இல் ஆர்யாவை மனாஸ்-ஆக அறிமுகப்படுத்துகிறோம்.

விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர். ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ். மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மிஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரையும் கவர்கிறார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச்., தயாரிப்பு டிசைன் அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளராக கிஷோர் தல்லூர் இருக்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழிகளில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படம் வெளியாக இருக்கிறது.

The post ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்… appeared first on Touring Talkies.

]]>
விஜய்சேதுபதி – சேரன் கூட்டணி பிரேக் அப் ஏன்?: சேரன் பதில் https://touringtalkies.co/why-did-vijay-sethupathi-cheran-alliance-break-up-cheran-answers/ Mon, 07 Aug 2023 05:26:11 +0000 https://touringtalkies.co/?p=35101 இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர்.  படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் பணப்பிரச்சினையில் சிக்கினார் சேரன். பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சேரன் இயக்கத்தில் நடிக்க விஜய் தேதிகள் வழங்கினார். இதனால், பல மேடைகளில் விஜய் சேதுபதியை மிகவும் பெருமையாகப் பேசினார் சேரன். ‘பிக் […]

The post விஜய்சேதுபதி – சேரன் கூட்டணி பிரேக் அப் ஏன்?: சேரன் பதில் appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர்.  படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் பணப்பிரச்சினையில் சிக்கினார் சேரன். பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சேரன் இயக்கத்தில் நடிக்க விஜய் தேதிகள் வழங்கினார். இதனால், பல மேடைகளில் விஜய் சேதுபதியை மிகவும் பெருமையாகப் பேசினார் சேரன்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது, “இதில் போட்டியாளராகப் போகச் சொன்னது கூட விஜய் சேதுபதிதான்.” என்று நெகிழ்ந்தார்.

ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு,  விஜய் சேதுபதி படத்தை சேரன் தொடங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

இருவரது கூட்டணியில் உருவாகும் படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அந்தப் படம் தொடங்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், அந்த படம் குறித்து சேரனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “விஜய் சேதுபதியின் நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதையை இப்போது மாற்ற வேண்டி இருக்கும். தவிர  அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது” என்று கூறினார்.

The post விஜய்சேதுபதி – சேரன் கூட்டணி பிரேக் அப் ஏன்?: சேரன் பதில் appeared first on Touring Talkies.

]]>
ஜூனில் வெளியாகிறது சமுத்திரகனியின் ‘விமானம்’ https://touringtalkies.co/samudhirakanis-vimanam-to-release-in-june-2/ Fri, 14 Apr 2023 17:14:13 +0000 https://touringtalkies.co/?p=31562 ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்படங்களில் பல்வேறு வகை கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்… கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். […]

The post ஜூனில் வெளியாகிறது சமுத்திரகனியின் ‘விமானம்’ appeared first on Touring Talkies.

]]>
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களில் பல்வேறு வகை கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்… கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். இதயத்திற்கு நெருக்கமான கதாநாயகனும் கூட. இவர் தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும், உணர்வுபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் நடித்து, பார்வையாளர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளிக்கத் தயாராகி விட்டார்.

இந்த ‘விமானம்’ திரைப்படம் எதிர் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அதனுடன் பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்திருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி… ”நல்லதொரு இனிமையான அனுபவக் குறிப்புடன் தொடங்குகிறது. தந்தையும், அவரது ஏழு வயது மகனான ராஜூவும் பேசத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குள் ஆசை என்றால் என்ன? என்பதை பரிமாறிக் கொள்வதையும் காண்கிறோம். குழந்தை விமானத்தில் உயரமாக பறக்க விரும்புகிறது. இதனால் அவர் வானத்திற்கு மேலே இருந்து உலகை பார்க்கிறார். மோசமான பொருளாதார நிலை காரணமாக அவரால் நிறைவேற்ற முடியாத கனவாக இருந்தாலும், அவனது ஆசையை தந்தை பாராட்டுகிறார்” என அந்த பிரத்யேக காணொளியில் காண்பித்திருப்பது… பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘விமானம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாரிக்கப்பட்ட இரு மொழி திரைப்படமாகும். இதனை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன்,அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். மார்தன் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜே. கே. மூர்த்தி கவனித்திருக்கிறார். வசனத்தை பிரபாகர் எழுத, பாடலாசிரியர் சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார். இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களுக்கான தலைவர் திரு அக்ஷய் கெஜ்ரிவால் பேசுகையில், ” கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘விமானம்’ படத்திற்காக பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். வலுவான கதைக்களம்… திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் விமானத்தை வழங்குவது எங்கள் பாக்கியம். இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் உணர்வுபூர்வமான பயணத்திற்கு தயாராவார்கள். ஜீ ஸ்டுடியோஸ் மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்கி வழங்குவதே எங்களது நோக்கம். இந்த ‘விமானம்’ திரைப்படம், அந்த திசையில் ஒரு நேர்நிலையான முன்னேற்றத்தின் ஒரு படியாகும்.” என்றார்.

The post ஜூனில் வெளியாகிறது சமுத்திரகனியின் ‘விமானம்’ appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் புதிய படம்! https://touringtalkies.co/new-movie-with-mari-selvaraj-dhanush-alliance-again/ Wed, 22 Mar 2023 01:06:49 +0000 https://touringtalkies.co/?p=30880 தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ வாத்தி ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது அவர் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50-வது படம் குறித்து அறிவித்திருக்கிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கும் எனவும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடி எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முன்னணி […]

The post மீண்டும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ வாத்தி ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது அவர் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50-வது படம் குறித்து அறிவித்திருக்கிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கும் எனவும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடி எனவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய கர்ணன் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது மீண்டும் இணைய உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.

The post மீண்டும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>